அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில், துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கும் கிங் ஆஃப் கோதா படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 24ம் தேதி வெளியாகிறது. இதில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ரித்திகா சிங், அனிகா சுரேந்தர் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
இதுவரை காதல் படங்களில் நடித்து வந்த துல்கள், இப்படத்தில் ஆக்சன் ஹீரோவாக தோன்றுகிறார்.
இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு தாறுமாறாக உள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் சென்னையில் படத்தின் பிரமோஷனில் துல்கர் சல்மான் கலந்து கொண்டார்.
அப்போது அவர், ரஜினியின் ஜெயிலர் படத்தை பாராட்டியதோடு, , ரஜினிக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளதாகவும் ஜெயிலரின் 1 சதவிகித ரசிகர்களை கவர்ந்தாலும் கிங் ஆஃப் கோதா மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றார்.
தானும் ஒரிஜினல் சென்னை பையன்தான் என்று கூறியுள்ள துல்கர் சல்மான், சென்னையில்தான் தான் தன்னுடைய பள்ளிப்படிப்பை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும் தான் வழக்கமாக சென்னையின் சத்யம் சினிமாஸ் மற்றும் எஸ்கேப் திரையரங்குகளில் படங்களை பார்ப்பேன் என்றும் கூறியுள்ளார்.
தான் சூர்யாவின் மிகப்பெரிய ரசிகன் என்பதையும் ரசிகர்களிடையே பகிர்ந்துக் கொண்டார்.