பிரபல தயாரிப்பாளராக விளங்கியவர் பாலாஜி. இவருக்கும் அப்போது, பிரபல வசனகர்த்தாவாக இருந்த ஆரூர்தாஸுக்கும் ஒரு பிரச்சினை. ஆகவே தங்கை படத்துக்குப் பிறகு இவர்கள் இணைந்து செயல்படவில்லை.
17 ஆண்டுக்குப் பிறகு ஆரூர்தாஸை அழைத்த பாலாஜி, புதிய படம் ஒன்றுக்கு வசனம் எழுத வேண்டும் என்று அழைத்தார்.
ஆரூர்தாஸ் தயங்கினார். பிறகு ஒப்புக்கொண்டார்.
உடனே பாலாஜி, “ஒரு வாரத்துக்குள் வசனங்களை எழுதித்தர வேண்டும்” என்று சொல்லி, தனது மேசை டிராயரை திறந்தார். அதில் கட்டுக்கட்டாக பணம்.
“எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார்.
மறுத்த ஆரூர்தாஸ், பணியை முடித்தபிறகு வாங்கிக்கொள்வதாக கூறிவிட்டார்.
சொன்னபடி ஏழே நாளில் வசனம் எழுதி முடித்தார். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதோடு வசனத்துக்காகவும் பெயர் பெற்றது.
அந்த படம்தான், கே.விஜயன் இயக்கத்தில் மோகன், பூர்ணிமா ஜெயராம், சுஜாதா, ஜெய்சங்கர் நடித்த விதி.
இது போன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..