1983ல், பாரதிராஜா இயக்கத்தில் வெளியான, மண்வாசனை திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார் ரேவதி. தொடர்ந்து “புதுமை பெண்”, “மௌன ராகம்”, “புன்னகை மன்னன்”, “கிழக்கு வாசல்” உள்ளிட்ட பல படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாக ஜொலித்தார்.
அந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது பற்றி ரேவதி கூறியிருக்கிறார்.
அவர், “என் அப்பா கெலுண்ணி நாயர் ராணுவத்தில் மேஜராக இருந்து ஓய்வு பெற்றவர். அவரது நண்பர் ஒருவர் மூலம், பாரதிராஜாவுக்கு என் புகைப்படம் சென்றது.
உடனடியாக என்னை அழைத்து மண்வாசனை படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார். ஆஷா என்ற என் பெயரை ரேவதி என மாற்றினார்.
இந்தப் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் ஷோபனா. அப்போது அவர் பிளஸ் டூ தேர்வு இருந்த நேரம் என்பதால் நடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்தே எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது” என ரேவதி கூறியிருக்கிறார்.