நடிகர்கள் ஒவ்வொருவரும் கதை கேட்கும் விதம் ஒவ்வரு மாதிரி இருக்கும். விஜய் கதை கேட்கும் முறையே தனி ரகம்.
இதை தற்போது அவர் நடித்து வரும் வாரிசு பட இயக்குநர் வம்சி ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
“விஜய் சார் வீட்டுக்கு போனவுடனே சில நிமிடம் காத்திருக்கச் சொன்னாங்க. மெதுவா கதவு திறந்து விஜய் வந்தார். அவரே எங்களுக்கு தண்ணீர் கொடுதது உபசரிச்சார்.
நலம் விசாரிச்சார்.
அப்புறம் நான் கதை சொல்ல ஆரம்பித்தேன். அவர் இடையில குறுக்கிடவே இல்லே. நான் சொல்றதையே கவனிச்சுக்கிட்டு இருந்தார். அவ்வளவு அமைதியா கவனிச்சார்.
முகத்துல எந்தவித ரியாக்சனும் இல்லே. நாம சொல்றது அவருக்கு பிடிக்குதா இல்லாயானே என்னால கணிக்க முடியலை.
எனக்கு வியர்த்தது.
இதை கவனிச்ச விஜய், ஏசியின் கூலிங்கை அதிகமாக்கினார்.
இப்படியே கிளைமாக்ஸ் சொல்ல ஆரம்பிச்சேன். அப்பவும் அவரிடம் எந்த மாற்றமும் இல்லை.
சரி அவருக்குப் பிடிக்கலை போல என நினைத்துக்கொண்டே இருந்தேன்.
முப்பது விநாடிகள் இருக்கும்.. சரி பண்லாம் என்றார்.. அப்போ ஏற்பட்ட மகிழ்ச்சி உற்சாகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றார் வம்சி