தமிழ் திரையுலக ஹீரோயின்கள் வாங்கும் சம்பளம் குறித்து பத்திரிகையாளர் செல்வம், யு டியுப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்த லிஸ்ட்டில் நயனுக்கு டஃப் கொடுக்கும் ஒரே நடிகை த்ரிஷா மட்டுமே. பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து கம்பேக் கொடுத்தார் த்ரிஷா. அதன்பின் விஜய்யின் லியோ, அஜித்தின் விடாமுயற்சி, கமலுடன் தக் லைஃப் என நயன்தாரா விட்ட இடத்தை விரட்டிப் பிடித்துள்ளார் த்ரிஷா. முக்கியமாக சமீப காலங்களில் த்ரிஷா நடிக்கும் படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. அதன்படி, அவர் ஒரு படத்துக்கு சுமார் 6 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம்.
நயன், த்ரிஷா வரிசையில் இந்த பட்டியலில் சாய் பல்லவி 3ம் இடம் பிடித்துள்ளார். சமந்தா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரை பின்னுக்குத் தள்ளியது கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது. எஸ்கே 21 படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கும் சாய் பல்லவி, மேலும் சில படங்களில் கமிட்டாகியுள்ளாராம். இவர் ஒரு படத்துக்கு 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஷ்மிகா மந்தனா, சமந்தா இருவரும் முறை 4வது, 5வது இடங்களை பிடித்துள்ளனர். டோலிவுட், பாலிவுட் படங்களுக்கு வாங்கும் சம்பளத்தை விட தமிழில் குறைவாகவே சம்பளம் வாங்குகிறாராம் ரஷ்மிகா. அதன்படி ஒரு படத்துக்கு 4 கோடி ரூபாய் வாங்குவதாக சொல்லப்படுகிறது.
அதேபோல், சமந்தா ஒரு படத்துக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறாராம். சில ஆண்டுகளாக அவர் அதிக படங்களில் நடிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு படத்துக்கு 1.5 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும், பிரியங்கா மோகன் 1.25 கோடி சம்பளம் பெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமன்னா ஒரு கோடியும், பிரியா பவானி சங்கர் 60 லட்சமும், தளபதி 68 நாயகி மீனாட்சி செளத்ரி 50 லட்சமும் சம்பளமாக வாங்குகின்றனர்.