2019-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்தப் படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்ட இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் தான் ரஜினியை மீண்டும் பழைய மாதிரி பார்க்க முடிந்ததாக, அவர்களுடைய ரசிகர்கள் தரப்பில் தெரிவித்தார்கள்.
இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.
குறிப்பாக, விஜய் சேதுபதியை மாற்றச் சொன்ன விநியோகஸ்தர் குறித்த அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்
இது குறித்து விரிவாக அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..