Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

“காசுக்காக, கேவலமா, யு டியுபர்ஸ்”: வெளுத்த சாய் பல்லவி, த்ரிஷா!  

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிவகார்த்திகேயனின் ஜோடியாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார், சாய் பல்லவி.

இப்படத்தின் பூஜையின் போது நடிகை சாய் பல்லவியும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியும் கழுத்தில் மாலையுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த சிலர் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுவிட்டதாக இணையத்தில் வதந்தியைப் பரப்பி வருகின்றனர். இந்நிலையில் இந்த வதந்திக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக சாய் பல்லவி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

“உண்மையாக நான் வதந்திகள் குறித்து கண்டுகொள்வதில்லை. ஆனால், அது குடும்ப நண்பர்களை உள்ளடக்கியிருக்கும்போது அது குறித்து பேசுவேன். என்னுடைய படத்தின் பூஜை நிகழ்வில் இருந்த புகைப்படத்தை வேண்டுமென்றே க்ராப் செய்து கேவலமான நோக்கத்துக்காகவும், காசுக்காகவும் சிலர் பரப்பியிருக்கிறார்கள்.

எனது வேலை தொடர்பான மகிழ்ச்சியான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது, இப்படியான வேலையில்லாதவர்களின் செயல்களுக்கு விளக்கமளிப்பது வருத்தமளிக்கிறது. இதுபோன்ற அசவுகரியத்தை ஏற்படுத்தும் செயல்கள் முற்றிலும் கேவலமானவை” எனப் பதிவிட்டுள்ளார்.

நடிகை சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘எஸ்கே21’ என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தின் பூஜை நிகழ்வில் இருந்த புகைப்படத்தை க்ராப் செய்து ‘சாய் பல்லவிக்கு திருமணம்’ என பரப்பி வந்த நிலையில், சாய் பல்லவி ஆதங்கமாக தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News