Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

விஜயகாந்தால் வீட்டை இழக்க தயாரான இயக்குநர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்க, விஜயகாந்த் நடித்து, சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம், வைதகி காத்திருந்தாள். இந்த படம் உருவான சுவாரஸ்யமான விசயத்தை, பிரபலமான டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், பத்திரிகையாளரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் பகிர்ந்துகொண்டார்:

“ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய, நான் பாடும் பாடல் பெரிய வெற்றி பெற்றது. அவரது அடுத்த படத்தை தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்றனர். அப்போது சுந்தர்ராஜன் வாடகை வீட்டில் இருந்தார். அவர், ‘எனக்கு வீடு கட்ட யார் பணம் தருகிறார்களோ, அவர்களுக்கே அடுத்த படம்’ என்று சொல்லிவிட்டார். இதை அறிந்த ஏவி.எம். நிறுவனம் பணம் தர முன் வந்து, ரூ.2 லட்ச ரூபாய் அட்வான்ஸாக கொடுத்தது.

அந்த நிறுவனத்துக்கு, வைதேகி காத்திருந்தாள் படத்தின் கதையை ஆர்.சுந்தர்ராஜன் கூறினார். அதோடு, படத்தின் ஹீரோ விஜயகாந்த் என்றும் தெரிவித்தார்.

ஏவி.எம். தரப்பில், “உங்கள் முந்தைய படமான, நான் பாடும் பாடல் படத்தில் சிவகுமார் ஹீரோவாக நடித்தார். அவரையே இந்த படத்தில் நடிக்க வைக்கலாம்” என சொல்லப்பட்டது.

ஆனால் சுந்தர்ராஜன், “இந்த படத்துக்கு விஜயகாந்த்தான் சரியாக வருவார்” என்று உறுதியாக இருந்தார்.

ஏவி.எம். தரப்பில், “நாம் இன்னொரு சந்தர்ப்பத்தில் இணைோம். நாங்கள் கொடுத்த ரூ. 2 லட்ச ரூபாயை திருப்பிக் கொடுத்துவிடுங்கள்” என்று சொல்லப்பட்டது.

இந்த தகவல் தயாரிப்பாளர்கள் தூயவன் மற்றும் பஞ்சு அருணாசலம் ஆகியோருக்கு தெரிந்தது. உடனே அவர்கள் சுந்தர்ராஜனுக்கு 2 லட்ச ரூபாய் பணம் கொடுத்தனர். அதை, ஏவி.எம்.முக்கு திருப்பிக் கொடுத்தார், ஆர் சுந்தர்ராஜன். இப்படித்தான் வைதேகி காத்திருந்தாள் படம் உருவானது.

தான் மனதில் வைத்திருந்த ஹீரோதான் நடிக்க வேண்டும்” என்பதில்  சுந்தரர்ராஜான்  எவ்வளவு உறுதியாக இருப்பார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்!” என்று  தெரிவித்தார் சித்ரா லட்சுமணன்.

குறிப்பிட்ட சுவாரஸ்யமான வீடியோவை முழுதும் பார்க்க…  டூரிங் டாக்கீஸ் யு டியுப் லிங்க் கீழே..

- Advertisement -

Read more

Local News