Friday, April 12, 2024

‘சிதம்பரம் ரயில்வே கேட்’ படத்தின் போஸ்டரை வெளியிட்ட வெங்கட் பிரபு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தயாரிப்பாளர் எஸ்.எம். இப்ராஹிம் அவர்களின் ‘S Crown Pictures’ தயாரிப்பு நிறுவனத்தின் தனது முதல் படைப்பு ‘சிதம்பரம் ரயில்வே கேட்’.

பிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமியும், மாஸ்டர் மகேந்திரனும் இந்தப் படத்தில் நாயகர்களாக நடித்துள்ளனர்.

நீரஜா மற்றும் காயத்ரி இருவரும் நாயகிகளாக நடிக்க, பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் வில்லனாக களமிறங்கி உள்ளார். மேலும், ரேகா, ஜி.எம்.குமார், டேனியல் மற்றும் ‘லொள்ளு சபா’ மனோகர் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இசைஞானியின் மகனும், பிரபல இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத் தொகுப்பு பணியை சுரேஷ் அர்ஸ் மேற்கொள்ள R.வேல் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார், மற்றும் அசோக் ராஜா நடன  இயக்குநராக களமிறங்குகிறார். அறிமுக இயக்குநரான சிவ பாலவன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் இசைஞானி இளையராஜா ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.

திரில்லர் கலந்த கமர்சியல் படமாக உருவாகி உள்ள இப்படத்தின் First Look போஸ்டரை பிரபல இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News