ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இமானுவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. படம் குறித்து, இயக்குநர் ராஜுமுருகன், தெரிவித்ததாவது:
“இது முழுக்க முழுக்க ஜாலியான ஒரு படமாக இருக்கும். கார்த்தி நடிக்கிறார் என்பதால் அவரோட நடிப்புத் திறன், அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என எல்லாவற்றுக்கான படமாக இருக்கும்.
அதே நேரம் என் படத்தில் இருக்கக் கூடிய சமுதாயம் சார்ந்த விஷயங்களும் இருக்கும். அந்த அம்சங்கள் வேண்டும் என கார்த்தியும் தீவிரமாக இருந்தார். எனவே இது கார்த்தி – ராஜுமுருகன் என இருவரது முத்திரைகளும் இருக்கும் படம்.
ஜப்பான் என்கிற கதாபாத்திரம் அடுத்த என்ன செய்யும் என்று அவனுக்கே தெரியாது. கோவிட்டுக்கு பிந்தைய நமது உலகத்தின் ஒரு பிரதிநிதியே அவன்” என்றார் ராஜுமுருகன்