Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

“டாஸ்மாக் கடையில் கள் விற்கலாம்!” : இயக்குநர் பேரரசு ஐடியா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“டாஸ்மாக் கடைகளில்  கள் விற்பனை செய்தால், பனை மரத்தை நம்பி இருக்கும் அனைவரின் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம்” என டைரக்டர் பேரரசு தெரிவித்துள்ளார்.

பனை மர தொழில் மற்றும் அதை சார்ந்து வாழ்வோரின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘நெடுமி’என்ற படம் தயாராகி இருக்கிறது. நாயகனாக பிரதீப் செல்வராஜ், நாயகியாக அபிநயா நடித்து உள்ளனர். நந்தா லட்சுமன் இயக்கி உள்ளார். எம்.வேல்முருகன் தயாரித்துள்ளார்.

 ‘நெடுமி’ பட விழா நிகழ்ச்சியில் இயக்குநர் பேரரசு பேசும்போது, “பனை ஓலை, மரம், பழம், கருப்பட்டி, நுங்கு, கள், பதநீர் என பனை மரத்தின் எல்லா பாகங்களும் பயன்படும். இதன் சிறப்புகளைப் பேசும் வகையில் இந்தப் படம் உருவாகி இருக்கிறது.

கள், கொஞ்சம் போதை தரும். மற்றபடி  உடல் நலத்துக்குக் கேடு கிடையாது. அப்படி இருந்தும் கள்ளுக்கடைகளை ஊருக்கு ஒதுக்குப் புறமாக அந்தக்காலத்தில் வைத்தார்கள்.

ஆனால் இப்போது தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் வந்து விட்டன. டாஸ்மாக்கில் கள்ளை விற்கலாம்.  உடலை கெடுக்கும் மதுவை விட ஊட்டச்சத்து நிறைந்த கள் எவ்வளவோ மேல் என்றார்.

- Advertisement -

Read more

Local News