திருஷ்யம்-2 கன்னட ரீமேக் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.
திருஷ்யம் முதல் பாகத்தின் கன்னட ரீமேக்கில் கன்னட நடிகர் ரவிச்சந்திரன் நாயகனாகவும், மலையாள நாயகியான நவ்யா நாயர் ஹீரோயினாகவும் நடித்திருந்தனர்.
மலையாளத்தில் ஆஷா சரத் செய்திருந்த கதாபாத்திரத்தில் அவரேதான் நடித்திருந்தார். இவருக்கு கணவராக நடிகர் பிரபு நடித்திருந்தார்.
தற்போது இந்தப் பாகத்திலும் இதே டீம் மீண்டும் நடிக்கிறது. கூடுதலாக எழுத்தாளர் வேடத்தில் கன்னட சினிமாவின் மூத்த நடிகரான ஆனந்த் நாக் நடிக்கிறார்.
தமிழின் மூத்த இயக்குநரான பி.வாசு இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று பெங்களூரில் துவங்கியது. இந்தாண்டு இறுதியில் படத்தை வெளியிடவுள்ளனர்.
