Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் இயக்குனர் மிஷ்கின்… படத்தின் தலைப்பு இதுதானாம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் மிஷ்கின், “சித்திரம் பேசுதடி”, “அஞ்சாதே”, “துப்பறிவாளன்” போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர். வெற்றி மற்றும் தோல்வியை தாண்டியும், மிஷ்கின் படங்களில் எப்போதும் ஒரு தனித்துவம் இருப்பதால், அவருக்கு தனித்துவமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

சமீப காலங்களில், “சவரக்கத்தி”, “மாவீரன்”, “லியோ” போன்ற சில படங்களில் மிஷ்கின் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தார்.மேலும் சில படங்களில் நடித்துவருகிறார். கடைசியாக பிசாசு 2 மற்றும் ட்ரெயின் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்போது, “ஓல்ட் இஸ் கோல்ட்” எனும் படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் மிஷ்கின்.

இந்த படத்தை “ரைட்டர்” பட இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப்பின் உதவி இயக்குநரான கோகுல் என்பவர் இயக்குகிறார். “நந்தலாலா” படத்திற்கு பிறகு 14 ஆண்டுகளுக்குப் பின்னர், மிஷ்கின் ஒரு படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News