மராட்டிய மாநிலம் புனேவில் அமைந்துள்ள எம்.ஐ.டி. உலக அமைதி கல்வி நிறுவனம் இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை தேர்வு செய்து அதில் ஐவருக்கு ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
அதன்படி இந்த வருடம், இந்தியத் திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக, இயக்குநர் மணிரத்னத்திற்கு ‘பாரத் அஷ்மிதா’ விருதினை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த விருது வழங்கும் விழா இன்று, பிப்ரவரி 3-ம் தேதியன்று இணைய வழியில் நடைபெறுவதாக அறிவித்துள்ளனர்.
இந்த விருது அறிவிப்பினை தொடர்ந்து மணிரத்னத்தின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.