நடிகை நயன்தாரா தமிழ்,தெலுங்கு, மலையாளம் என 75 படங்களுக்கும் மேலாக பல மொழிகளில் நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டில் அறிமுகமாகி ஷாருக்கானுடன் ஜோடி சேர்ந்து ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.
ஆனால் இவரை தனது படத்தில் நடிக்க வைக்க மறுத்திருக்கிறார் இயக்குநர் பார்த்திபன். இதை அவரே ஒரு நிகழ்ச்சியில் சொல்லி இருக்கிறார்.
2003 ஆம் ஆண்டு பார்த்திபன் இயக்கி நடித்த படம், குடைக்குள் மழை. இதில் நடிக்க புகைப்படம் அனுப்பி இருந்தார் நயன்தார். இதுதான் அவர் தமிழில் தேடிய முதல் வாய்ப்பு.
பார்த்திபனும் வரச் சொல்லி இருந்தார். ஆனால் குறிப்பிட்ட நாளில் வர முடியாத நயன்தாரா, மறு நாள் வருவதாக சொல்லி இருக்கிறார். இதனால் டென்சன் ஆன பார்த்திபன், நயன்தாராவை வரவே வேண்டாம் என சொல்லிவிட்டார்.
பிறகு, மதுமிதாவை நடிக்க வைத்தார்.
அடுத்த ஒரு வருடத்தில் நயன்தாரா நடித்த ஐயா படம், ஹிட்டானது.