தமிழ் திரையுலகில் நான்கு தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் எழுதி அசத்தியவர் வாலி. பக்தி, தத்துவ, பாச பாடல்களுடன் காதல் பாடல்களில் கலக்கியவர். அதனால்தான் வாலிப கவிஞர் என புகழப்பட்டார்.
ஆனால் அவரும் மனம் நொந்த சம்பவம் நடந்தது.
இயக்குநர் கே.பாலச்சந்தர் பத்திரிக்கை பேட்டி ஒன்றில், “காட்சிக்கு பொருத்தமான பாடல்களை எழுதுவதை விட, பிரபலமடைய வேண்டும் என்கிற நோக்கத்தில் பாடல்களை எழுதுவார் வாலி” என்று கூறிவிட்டார்.
பதிலுக்கு வேறு ஒரு பேட்டியில், “காட்சிக்குப் பொருத்தமான பாடல்கள் எழுதவில்லை என்றால் இத்தனை வருடங்களாக திரையுலகம் என்னை ஏற்றுக்கொண்டிருக்குமா?” பாலசந்தருக்கு கண்டனம் தெரிவித்தார் வாலி.
இது குறித்து டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் கூறிய நடிகர் சித்ரா லட்சுமணன், “ஆனாலும், இந்த கருத்து மோதல்களால் எங்களுக்குள் பிளவு ஏற்படவில்லை. என்னை முதன் முதலில் பொய்க்கால் குதிரை படத்தில் நடிக்க வைத்தவர் பாலசந்தர்தான்.
அதுமட்டுமல்ல… “பொய்க்கால் குதிரை” படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின்போது பாலச்சந்தரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார் வாலி. அதுதான் இருவரின் சிறப்பு” என நினைவலைகளை பகிர்ந்து கொண்டார் சித்ரா லட்சுமணன்.
சித்ரா லட்சுமணன் வழங்கும் மேலும் பல சுவாரஸ்ய திரைச் செய்திகளை அறிய… touring talkies யுடிப் சேனலை பாருங்கள்.