Touring Talkies
100% Cinema

Wednesday, September 10, 2025

Touring Talkies

சின்ன வயசு ஆசை, பல கோடி செலவு செய்த தனுஷ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

 

தனுஷ் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை பத்திரிகையாளர் மணி  தெரிவித்தார்.

 

தனுஷின்  அப்பா கஸ்தூரிராஜா சினிமாவிற்குள் வரும் முன் ரொம்பவே சிரமமகரமான சூழலில் இருந்தார். அந்த நேரத்தில் சிறுவன் தனுஷ் தனது பக்கத்து வீட்டு பையன் காஸ்ட்லி ரிமோட் கார் வைத்து விளையாடிக் கொண்டிருப்பதை ஏக்கத்துடன் பார்த்து அந்தப் பையனிடம் அந்த காரை ஒருமுறை தருகிறாயா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்தப் பையன் தர முடியாது என்று மறுத்து இருக்கிறார். அந்த நேரத்தில் அங்கு வந்த அப்பாவிடம் தனுஷ் எனக்கும் இதே மாதிரி ரிமோட் கார் வேண்டும் என்று கேட்டு அடம் பிடித்து இருக்கிறார்.

அதற்கு அவருடைய அப்பா இதெல்லாம் ரொம்ப காஸ்ட்லி என்னால வாங்கி தர முடியாது என்று சொல்லி மறுத்து இருக்கிறார். இந்த  விஷயம் தனுஷ் மனதை ரொம்ப பாதித்ததால் தன் வாழ்நாளில் எப்படியாவது நிஜமானஒரு காஸ்ட்லி காரை வாங்க வேண்டும் என்று வைராக்கியத்தோடு இருந்திருக்கிறார்.

நல்ல நிலைமைக்கு வளர்ந்து வந்த தனுஷ் சின்ன வயசு நிராசையை நிறைவேற்றி விட்டார். அதாவது இந்தியாவிலேயே நம்பர் ஒன் காஸ்ட்லி காரை வாங்கி அவருடைய வீட்டுக்கு முன் நிறுத்தி வைத்து அழகு பார்த்து வருகிறார். ஆனால் இது வெறும் ஷோகேஸ் ஆக தான் அவருடைய வீட்டில் இருக்கிறது.

அதற்கு காரணம் இந்த காரை இந்திய சாலையில் ஓட்டுவது மிகவும் கடினம். அது மட்டுமல்லாமல் 500 மீட்டர் செல்வதற்கு இரண்டு லிட்டர் பெட்ரோல் தேவைப்படுமாம். அதன் காரணமாக இந்த காரை வாங்கி அவருடைய ஆசையை நிறைவேற்றிக் கொண்டார்.

- Advertisement -

Read more

Local News