Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

பாராட்டிய தனுஷ், நன்றி சொல்லிப் பதிவிட்ட லாரன்ஸ் !!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழின் முன்னணி நடிகர், நடன இயக்குநர் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளி கொண்டாட்டமாக நாளை வெளியாகிறது “ஜிகர்தண்டா 2” திரைப்படம். இப்படத்தைப் பார்த்த நடிகர் தனுஷ் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.

முன்னணி நடிகராக மிகச்சிறந்த எண்டர்டெயினராக வலம் வரும் நடிகர் ராகவா லாரன்ஸ், தொடர்ச்சியாக குடும்பங்கள் கொண்டாடும் நகைச்சுவை கலந்த ஹாரர் படங்கள் மூலம், ப்ளாக்பஸ்டர் வெற்றிகளை, தந்து வருகிறார். இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா 2 படத்தில், முதல் முறையாக வழக்கத்திற்கு மாறாக தன் தோற்றம் மேனரிசம் முதல் அனைத்தையும் மாற்றி, வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார்.

ஜிகர்தண்டா படத்தின் வெற்றிக்குப் பிறகு ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் எனப் பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் நாளை 10.11.2023 தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தினை முன்னதாக பார்த்த நடிகர் தனுஷ், தன் சமூக வலைத்தள பக்கத்தில் இப்படத்தையும் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பையும் பாராட்டிப் பதிவு செய்துள்ளார் அப்பதிவில்…

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் பார்த்தேன். @karthiksubbaraj இன் அருமையான படைப்பு, அற்புதமான நடிப்பைத் தருவது @iam_SJSuryahக்கு வழக்கமானதாகிவிட்டது. ஒரு நடிகராக @offl_Lawrence புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். @Music_Santhosh படத்திற்கு அழகு. கடைசி 40 நிமிடம் இந்த திரைப்படம் உங்கள் இதயத்தைத் திருடிவிடும். படக்குழுவினர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் தனுஷின் பதிவையொட்டி நடிகர் ராகவா லாரன்ஸ்

சகோதரரே உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி  உங்களின் கேப்டன் மில்லர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய ராகவேந்திரா ஸ்வாமியை பிரார்த்திக்கிறேன். என்று நன்றி கூறி பதிவிட்டுள்ளார்.

இரண்டு முன்னணி நடிகர்களின் ஈகோ இல்லாத இந்த உரையாடல்களை, ரசிகர்கள் இணையத்தில் பாராட்டிப் பகிர்ந்து வருகின்றனர். இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News