தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு, தென்காசி மாவட்டம், முண்டந்துறை வனப்பகுதியில் நடந்தது.
அப்பகுதி மக்கள், “படப்பிடிப்பில் வெடிகுண்டு காட்சிகளை எடுக்கிறார்கள். இதனால் விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. தவிர காட்டுப்பகுதியில் இருக்கும் ஓடைகளை நாசம் செய்துவிட்டனர் படக்குழுவினர்” என்று குற்றம் சாட்டினார்கள்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர், “அனுமதி இன்றி படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள்” என கூறி, படப்பிடிப்பை தடுத்து நிறுத்தினார்.
இந்நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை பாயும்” என தெரிவித்து உள்ளார்.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.