Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவதாக அறிவிப்பு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் தனுஷ் தானும் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் இல்லற வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளார்.

தமிழ்ச் சினிமாவின் தற்போது மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் தனுஷ் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை 2004-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 18 ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு யாத்ரா ராஜா மற்றும் லிங்கா ராஜா என்ற இரு மகன்கள் உள்ளனர். 

இந்த நிலையில் தாங்கள் இருவரும் மனமொத்து பிரிவதாக இன்றைக்கு அறிவித்துள்ளனர். இது குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கை இது :

“18 வருடங்கள் நண்பர்கள், தம்பதிகள், பெற்றோர்கள் மற்றும் நலம் விரும்புபவர்கள் என ஒருவரையொருவர் ஒன்றாக இணைத்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.  இன்று நாங்கள் ஒருவரை ஒருவர் பிரியும் இடத்தில் நிற்கிறோம்.  ஐஸ்வர்யாவும், நானும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும், இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்கவும்.” என்று அந்த அறிக்கையில் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். 

இந்தத் தம்பதிகள் பற்றிய எந்தவொரு நெகட்டிவ் செய்தியும் எப்போதும் வெளிவந்திருக்காத நிலையில் இந்தத் திடீர் பிரிவுக்கு என்ன காரணம் என்று தெரியாமல் தமிழ்த் திரையுலகத்தினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

- Advertisement -

Read more

Local News