களஞ்சியம் இயக்கத்தில் 1996-ல் வெளியான பூமணி திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்தது. இதில் முரளி, தேவயானி, மணிவண்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
படப்பிடிப்பின் போது, நடிகை தேவயானியை புகைப்படம் எடுத்திருக்கிறார் புகைப்படக்காரர் பூபதி. இடையில், “தேவயானி இங்கே பாருங்க” என்று அவர் சொல்ல.. தேவயானிக்கு கோபம் வந்துவிட்டது.
“அவர் எப்படி என் பெயரைச் சொல்லலாம்.. யார் அவர்” என கொதித்துப்போய்விட்டார்.

அருகில் இருந்த மணிவணன், “இதுக்கெல்லாம் கோபப்படக்கூடாது. கூப்பிடுறதுக்குத்தானே எல்லாருக்கும் பெயர் வச்சிருக்காங்க.. புகைப்படக்காரர் பூபதி மிகச் சிறந்த கலைஞர். அவர்கிட்ட மன்னிப்பு கேளு” என்று விளக்கிச் சொல்ல நடிகை தேவயானியும் மன்னிப்பு கேட்டாராம். சமீபத்தில் இயக்குநர் களஞ்சியம் அளித்த பேட்டி ஒன்றில் இந்த சம்பவத்தை கூறினார்.