Wednesday, November 20, 2024

விமர்சனம்: டிடி ரிட்டர்ன்ஸ்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் சந்தானம்,சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மாசூம் சங்கர்,டைகர் தங்கதுரை, மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், பெப்சி விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரோகித் ஆபிரகாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். டிடி ரிட்டர்ன்ஸ் படம் முன்னதாக சந்தானம் நடித்து வெளியாகியிருந்த தில்லுக்கு துட்டு படத்தின் 3வது பாகம்.

ஒரு  காலத்தில் பாண்டிச்சேரியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு பங்களா.. அங்கே சூதாட்டத்தை தொழிலாக கொண்டு போட்டியில் தோற்பவர்களை கொலை செய்யும் குடும்பத்தினர். இவர்கள் ஊர் மக்களால் எரித்து கொல்லப்படுகிறார்கள்.

நிகழ்காலத்தில் பாண்டிச்சேரியின் ஊர் பெரிய மனிதர் பெப்சி விஜயனிடம் இருந்த பணம், நகை உள்ளிட்டவை பிபின், முனிஷ்காந்த் குழுவால் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்த பக்கம் பிபின் போதைப்பொருள் பிசினஸில் சம்பாதிக்கும் பணத்தை திருட மொட்டை ராஜேந்திரன் குரூப் முயல்கிறது.  இந்த நிலையில் பிபின் குழு கொள்ளையடித்த பணம், நகை மொட்டை ராஜேந்திரன் குழுவால் கைப்பற்றப்படுகிறது. அடுத்த நிமிடமே அது சந்தானம் வசமாகிறது.  அவரது நண்பர்களோ, அந்த பணத்தை பாழடைந்த மாளிகையில் வைக்கிறார்கள். அதைத் தேடி சந்தானம் உள்ளிட்டவர்கள் அங்கு செல்ல.. மற்றவர்களும் அதே இடத்துக்கு வர.. அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை.

ரசிகர்களை சிரிக்க  வைப்பதே குறிக்கோள் என்பதால், அதில் அசால்டாக வெற்றி கண்டு இருக்கிறார்கள்.  சந்தானம், ரெடின் கிங்ஸ்லி, பெப்சி விஜயன், மாறன், சைதை சேது, முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், பிபின் என பலரும் காமெடி காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். வித்தியாசமான பேயாக வில்லன் நடிகர் , பிரதீப் ராவத் மிரட்டுகிறார். சுரபிக்கு பெரிய அளவில் பாத்திரம் இல்லை.

லாஜிக் பார்க்காமல் ரசிக்கலாம்.  டைமிங் டயலாக்குகளும் ரசிக்க வைக்கின்றன. அரசியல்வாதிகள் தொடங்கி, சினிமா பிரபலங்கள் வரை பலரையும் கிண்டல் அடித்து உள்ளனர்.  பேயிடம் சென்டிமென்ட் பாடல், பக்தி பாடல் போட்டு காட்டுவது, யூட்யூப் விளம்பரத்தை நக்கலடிப்பது என அதிரடிதான்.

இறுதியில் தெனாலிராமன் கதையை வைத்து படத்தை முடித்து இருக்கிறார்கள்.

மொத்தத்தில் படம் ரசிக்கவைக்கிறது.

- Advertisement -

Read more

Local News