Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

ஸ்ரீ தேவி உடையை அணிந்த மகள் குஷி கபூர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

த நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி கபூர். இவர்கள் இருவரும் தற்போது படங்களில் நடிக்க துவங்கியுள்ளனர். ஜான்வி கபூர் கடந்த சில ஆண்டுகளாகவே நடித்து வருகிறார். தற்போது தெலுங்கிலும் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடி சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீதேவி -போனிகபூரின் இளைய மகள் குஷி கபூரும் தற்போது படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். நடிகை ஸ்ரீதேவி: மறைந்த நடிகை ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப்படங்களில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். தொடர்ந்து பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்த இவர், முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து நடித்து முன்னணி நடிகையாக மாறினார். இறப்பதற்கு முன்னதாக நடிகர் விஜய்யின் புலி படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

ஸ்ரீதேவி மகள்கள்: இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டில் அவர் துபாயில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மகள்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் இருவரும் தற்போது பாலிவுட்டில் நடிகைகளாக இருந்து வருகின்றனர். ஜான்வி கபூர் ஸ்ரீதேவி உயிருடன் இருந்தபோதே ஜான்வி கபூர் நடிகையாகிவிட்டார். பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழிலிருந்து ரீமேக் செய்யப்பட்ட கோலமாவு கோகிலா படத்திலும் இவர் நடித்திருந்தார்

நடிகை ஜான்வி கபூர்: படங்களில் சிறப்பான கேரக்டர்களில் நடித்து வந்தாலும் சமூக வலைதளங்களில் அதீத கவர்ச்சியுடன் கூடிய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஸ்ரீதேவி – அம்மா அணிந்த உடையை போனிகபூரின் இளையமகள் குஷி கபூர் போட்டுக்கொண்டு போட்டோ ஹூட் நடத்தியுள்ளார்.

 

தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

 

 

- Advertisement -

Read more

Local News