Friday, April 12, 2024

தெலுங்கில் ஹிட்டடித்த ‘க்ராக்’ படம் பிப்ரவரி 5-ல் தமிழில் வெளியாகிறது..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீபத்தில் ஆந்திரா, தெலுங்கானாவில் ‘சங்கராந்தி’ தின சிறப்பு திரைப்படமாக வெளியாகி பம்பர் ஹிட்டடித்த க்ராக்’ தெலுங்கு திரைப்படம், வரும் பிப்ரவரி 5-ம் தேதி முதல் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளிவரவுள்ளது.

இந்தப் படத்தைத் தயாரிப்பாளர் B.மது தனது சரஸ்வதி ஃபிலிம்ஸ் டிவிஷன் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.  

தெலுங்கு திரையுலகில் மாஸ் மகராஜா’ என கொண்டாடப்படும் நடிகர் ரவி தேஜா நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ஸ்ருதிஹாசன், முக்கிய கதாப்பாத்திரத்தில் வரலஷ்மி சரத்குமார், வில்லன்களாக சமுத்திரக்கனி, ஸ்டன்’ சிவா என்று தமிழக நடிகர்களே இந்தப் படத்தில் அதிகம் நடித்துள்ளனர். தமிழ்த் தொழில் நுட்பக் கலைஞர்களும் இப்படத்தில் பங்கு கொண்டுள்ளனர்.

நீண்ட பொது முடக்கக் காலத்திற்குப் பிறகு சமீபத்தில் சங்கராந்தி தின சிறப்பு திரைப்படமாக 2021 ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் வெளியானது.

சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான இத்திரைப்படம் மாஸூம், கிளாஸூம் கலந்த கமர்ஷியல் படமாக வெளிவந்து ரசிகர்களின் கோலாகல வரவேற்பில், பம்பர் ஹிட்டடித்துள்ளது. தமிழில் ‘மாஸ்டர்’ படம் போல் திரையரங்குகளுக்கு அலை, அலையாக பெரும் கூட்டத்தை கூட்டி வந்தது இத்திரைப்படம்.

பல முன்னணி நடிகர்களின் இதுவரையிலான பல்வேறு வசூல் சாதனையை முறியடித்து, சாதனை படைத்திருக்கிறது. பல மாதங்களுக்கு பிறகு தியேட்டர்களை திருவிழாக் கோலம் காண வைத்துள்ளது இப்படம்.

படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய வரவேற்பால் ஆஹா ஓடிடி தளத்தில் இம்மாதம் வெளியாகவிருந்த இப்படம் தியேட்டர்களில் கூட்டம் குறையாததால் ஓடிடி வெளியீடு பிப்ரவரி 5-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களையும் தாண்டி தமிழ். மலையாளம் மொழிகளிலும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழகத்திலும், கேரளாவிலும் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் மொழி மாற்றம் செய்யப்பட்டால் மொழி தெரியாத ரசிகர்கள் கூட்டமும் ரசிக்க முடியும் என விநியோகஸ்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இக்கோரிக்கையினை ஏற்ற படக் குழு தற்போது க்ராக்’ படத்தின் டப்பிங் பணிகளை தீவிரமாக செய்து வருகிறது.

தெலுங்கு ரசிகர்களை குதூகலப்படுத்திய க்ராக்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 5-ம் தேதி முதல் தமிழ் மற்றும் மலையாள மொழிகளிலும் வெளிவரவுள்ளது.

- Advertisement -

Read more

Local News