Thursday, April 11, 2024

காமெடி எனக்கு வராது: டெல்லி கணேஷ்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் டெல்லி கணேஷ்  பெரும்பாலும் சினிமாவில் குணச்சித்திர வேடத்தில் நடித்தவர். தமிழ் சினிமாவில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். கமலின் மைக்கேல் மதன காமராஜன், நாயகன்,அவ்வை சண்முகி  போன்ற படங்களில்  டெல்லி கணேசனுக்கு நல்ல காமெடியன் என்ற பாராட்டைப் பெற்று தந்தது.

அவ்வை சண்முகி படத்தில் நடித்தது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் இப்படி முழு படத்தில்  காமெடியனாக நடித்தது இல்லை.  ஒரு நாள்,இரண்டாவது நாள் பார்த்தேன் அப்புறம் எனக்கு பயம் வந்து விட்டது.

கிரேசி மோகனிடம்  எத்தனை சீன் இருக்கு என்று கேட்டேன். படம் முழுவதும் நீ வருகிறாய் என்றார்.

கமலிடம் சென்று நீங்கள் நல்ல காமெடியன் யாரையாவது வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு முழு படத்தையும் முடிக்க முடியுமா  தெரியவில்லை என்றேன்.

உங்களால் முடியும் நீங்கதான் பன்னனும் என்று கமல் தைரியம் கொடுத்தார் நடித்தேன் நல்ல பெயர் கிடைத்தது என்றார் டெல்லி கணேஷ்.

- Advertisement -

Read more

Local News