பிரபல இயக்குநர் வெற்றிமாறன் 13 வயதிலிருந்து 33 வயது வரை செயின் ஸ்மோக்கர் ஆக இருந்திருக்கிறார். அந்த பழக்கத்தில் இருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பதை சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். இதன் மூலம் பல இளைஞர்களுக்கு புகைப் பிடிக்கும் பழக்கத்தை விடுவதற்கான வழிகளையும் சொல்லி இருக்கிறார்.
“எனக்கு காலையில் சாப்பிடும் பழக்கமே கிடையாது. டீ.. சிகரெட்.. மறுபடி டீ.. சிகரெட்! இதுதான் என் பழக்கம். இந்த சிகெரட் பழக்கத்தை மாற்ற டயட் பின்பற்ற துவங்கினேன். மேலும் சிகெரட்டை நிறுத்திவிட்டு சுவிங்கம் தான் பயன்படுத்தினேன். அதுவும் நல்ல பழக்கமல்ல. இருந்தாலும் அந்த சமயத்தில் அதையும் ஒரு வழியாக எடுத்துக் கொண்டேன். ஆனால் அதைவிட எனக்கு சிறந்த தீர்வாக அமைந்தது கோல்டு வாட்டர் தான். பெரிய டம்ளரில் குளிர்ந்த நீரை எடுத்துக் கொண்டு அதை முழுவதுமாக அருந்திவிட்டு ஒரு பெருமூச்சு விடுவேன்.
அந்த மூச்சுக்காற்றை காற்றை வெளிவிடும் போது புகைப்பிடிக்க தூண்டும் உணர்வும் தன்னை விட்டு போய்விடும். இது ஒரு நல்ல தீர்வாக அமைந்தது. ஆகையால் பல வருடங்களாக புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து வெளிவர முடியாமல் தவிப்பவர்கள் இதை ஒருமுறை செய்து பார்க்கலாம்” என வெற்றிமாறன் தெரிவித்து உள்ளார்.