Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

‘நெஞ்சுக்கு நீதி’ படம் பார்த்து பட குழுவினரை வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

Zee Studios மற்றும் போனி கபூர் அவர்களின் Bayview Projects மற்றும் ROMEO PICTURES ராகுல் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நெஞ்சுக்கு நீதி.’

இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை நேற்று மாலை  நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் பார்த்தார்.

படத்தை பார்த்த பின்  படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் என அனைத்து படக் குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்,

வரும் மே மாதம் 20 அன்று வெளியாகவுள்ள நெஞ்சுக்கு நீதி’ படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

- Advertisement -

Read more

Local News