Thursday, November 21, 2024

“ரீல் ஹீரோவா இருக்காதீங்க..” – நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கண்டனம் தெரிவித்துள்ளது.

நடிகர் விஜய் 2012-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ என்ற ஆடம்பர காரை இறக்குமதி செய்தார். அந்தக் காருக்கான இறக்குமதி வரியையும் அவர் செலுத்திவிட்டார்.

அதன் பின்பு அந்தக் காருக்கு உரிமம் வாங்குவதற்காக சென்னையில் இருக்கும் தென் சென்னை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை நாடியிருக்கிறார் விஜய். அந்த அலுவலகத்தில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் என்றால் அதற்கு நுழைவு வரி செலுத்த வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.

ஆனால் நடிகர் விஜய் அந்த வரியைச் செலுத்த மறுத்திருக்கிறார். தான் கஸ்டம்ஸ் வரியை கட்டிவிட்டதால் மேற்கொண்டு எந்த வரியையும் கட்ட முடியாது என்று மறுத்திருக்கிறார். இதனால் அந்தக் காருக்கு உரிமம் தர முடியாது என்று போக்குவரத்து அலுவலகத்திலும் சொல்லிவிட்டார்கள்.

இதனால் நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது குறித்து வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் “நான் கஸ்டம்ஸ் வரியை ஏற்கெனவே கட்டிவிட்டதால் நுழைவு வரியைக் கட்டத் தேவையில்லை. ஒரே காருக்கு இரண்டு முறை வரி வசூலிப்பது அநியாயம். எனவே நுழைவு வரிக்கு தடை விதிக்க வேண்டும்…” என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த 8-ம் தேதியன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

இந்தத் தீர்ப்பில், “வரி என்பது நன்கொடையல்ல, கட்டாய பங்களிப்பு…” எனக் கூறி விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். அந்த அபராதத் தொகையான ரூ.1 லட்சத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

மேலும் நீதிபதி தனது தீர்ப்பில், “மனுதாரர் தான் யார்.. என்ன தொழில் செய்கிறேன் என்பதை தனது சத்தியப்பிரமாணத்தில் குறிப்பிடவே இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

நாம் கட்டும் வரிகளை வைத்துதான் நாட்டில் பல்வேறு மக்கள் நலப் பணிகளை அரசு தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. அதற்குக் கண்டிப்பாக இது போன்ற வரிகள் அவசியம் தேவைதான்.

சமூக நீதிக்கு பாடுபடுவதாக திரையில் பிரதிபலிக்கும் நடிகர்கள் இப்படி வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது…” என்று கண்டித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News