Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி-2’ படப்பிடிப்பு துவங்கியது..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராகவா லாரன்ஸ்  கதையின் நாயகனாக நடிக்க, ‘வைகை புயல்’ வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது அனைவரும் அறிந்ததே.

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில்  இந்த ‘சந்திரமுகி-2’ என்னும் பிரம்மாண்டமான படத்தை தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள். மேலும் ராதிகா சரத்குமார் மிக முக்கியமான ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நடிகர் ரவி மரியா, கூல் சுரேஷ், நடிகைகள் சுபிக்ஷா, சிருஷ்டி டாங்கே மற்றும் பல முக்கிய நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர்.

‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி வாசுவே இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜி.கே.எம்.தமிழ் குமரனின் மேற்பார்வையில் உருவாகவிருக்கும் இந்த ‘சந்திரமுகி-2’ படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளை பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார்.

‘பாகுபலி’, ‘ஆர்.ஆர்.ஆர்.’ பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா பானு கலை இயக்குநர் பொறுப்பை ஏற்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு மைசூரில் தொடங்கி இருக்கிறது.

- Advertisement -

Read more

Local News