பி.வாசு இயக்கத்தில், ரஜினி, புரபு, ஜோதிகா உள்ளிட்டோர் நடிப்பி 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘சந்திரமுகி’. இதன் இரண்டாம் பாகத்தை பி.வாசு இயக்க, ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
முதல் பாகத்தில் புரியாத புதிராக இருந்த அரண்மனை அண்டகோண்டா பாம்பின் கேமியோவுடன் ட்ரெய்லர் துவங்குகிறது. அந்த பாம்புக்கு ஒரு பின்னணி இருக்கும் என்று தெரிகிறது. ‘ராஜாதி ராஜ’ என்று தொடங்கும் கோரஸ் குரலுக்கு மத்தியில் லாரன்ஸின் மாஸ் அறிமுகம், தொடர்ந்து வடிவேலுவின் என்ட்ரி என வரிசையாக நடிகர்கள் அறிமுகம் செய்யப்படுகின்றனர். முந்தைய பாகத்தைப் போல அல்லாமல் இதில் கங்கனாவை சந்திரமுகியாக ட்ரெய்லரிலேயே காட்டிவிட்டனர்.
ஆக படத்தின் மீதான எதிர்பார்ப்பை, இந்த டிரெய்லர் அதிகரித்து உள்ளது.