Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
சினிமா வரலாறு – Touring Talkies https://touringtalkies.co Wed, 19 Oct 2022 17:05:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png சினிமா வரலாறு – Touring Talkies https://touringtalkies.co 32 32 சினிமா வரலாறு-84 – காற்றோடு கலந்துவிட்ட கனவுக் கன்னி ஸ்ரீதேவி https://touringtalkies.co/cinema-history-84-sridevi-the-dream-girl-who-has-mixed-with-the-wind/ Wed, 19 Oct 2022 17:04:38 +0000 https://touringtalkies.co/?p=25676 முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து  மொழிப் படங்களிலும் முடிசூடா ராணியாகத் திகழ்ந்த ஸ்ரீதேவி, சினிமா பார்ப்பதையே அதிகம் விரும்பாத பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் திரை உலகிற்கு அடையாளம் காட்டப்பட்டவர். ஐம்பது ஆண்டுகளில் முன்னூறு திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்ரீதேவியின் தந்தை ஐயப்பன். தாய் ராஜேஸ்வரி. காங்கிரஸ் இயக்கத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட ஐயப்பன் பெருந்தலைவர் காமராஜரை சநதிக்க அடிக்கடி அவரது இல்லத்துக்குச்  செல்வார். ஒரு முறை அவர் காமராஜரைச் […]

The post சினிமா வரலாறு-84 – காற்றோடு கலந்துவிட்ட கனவுக் கன்னி ஸ்ரீதேவி appeared first on Touring Talkies.

]]>
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து  மொழிப் படங்களிலும் முடிசூடா ராணியாகத் திகழ்ந்த ஸ்ரீதேவி, சினிமா பார்ப்பதையே அதிகம் விரும்பாத பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் திரை உலகிற்கு அடையாளம் காட்டப்பட்டவர்.

ஐம்பது ஆண்டுகளில் முன்னூறு திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்ரீதேவியின் தந்தை ஐயப்பன். தாய் ராஜேஸ்வரி. காங்கிரஸ் இயக்கத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட ஐயப்பன் பெருந்தலைவர் காமராஜரை சநதிக்க அடிக்கடி அவரது இல்லத்துக்குச்  செல்வார்.

ஒரு முறை அவர் காமராஜரைச்  சந்திக்கச் சென்றபோது  தனது நான்கு வயது மகளான ஸ்ரீதேவியையும் தன்னுடன் அவர் அழைத்துக் சென்றிருந்தார். அப்போது கவிஞர் கண்ணதாசனும் காமராஜர் வீட்டுக்கு வந்திருந்தார். சிறுமி ஸ்ரீதேவியின் சுறுசுறுப்பைப்  பார்த்த பெருந்தலைவர் “இந்தச்  சிறுமியை நீ சினிமாவில் அறிமுகப்படுத்தலாமே” என்று கண்ணதாசனிடம் கூறினார்.

அந்த நேரத்தில் ‘துணைவன்’ என்ற பக்திப் படத்தை ஆரம்பித்திருந்த சின்னப்பா தேவர் அந்தப் படத்தில் முருகனாக நடிக்க அழகான தோற்றமுள்ள ஒரு சிறுவனைத் தேடிக் கொண்டிருந்தார். அவரிடம் ஸ்ரீதேவியை பற்றி கண்ணதாசன் சொல்ல ‘துணைவன்’ படத்தில் பாலமுருகனாக அறிமுகமானார் ஸ்ரீதேவி.

அதற்குப் பிறகு எல்லா தென்னிந்திய மொழிப் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீதேவி ‘ராணி மேரா நாம்’ என்ற படத்தின் மூலம் இந்திப் படவுலகில் குழந்தை நட்சத்திரமாகக்  கால் பதித்தார்.

ஸ்ரீதேவிக்குப் பதின்மூன்று வயதானபோது அவரை தனது ‘மூன்று முடிச்சு’  படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அந்தப் படத்தில் ரஜினிகாந்துக்கு சிற்றன்னையாக அவரை நடிக்க வைத்தார்.  அந்த மூன்று முடிச்சு படம் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவிஆகிய மூன்று உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்த முதல் படமாக அமைந்தது.

அந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் அவர் நடித்த ‘16 வயதினிலே’ படமும்,  காமிரா கவிஞர் பாலு மகேந்திராவின் இயக்கத்தில் அவர் நடித்த ‘மூன்றாம் பிறை’ படமும், இயக்குநர் மகேந்திரனின் இயக்கத்தில் அவர் நடித்த ‘ஜானி’ திரைப்படமும் அவரது வாழ்க்கையில் திருப்புமுனைப் படங்களாக அமைந்தன.

‘மூன்று முடிச்சு’ படத்தில் நடிக்க கமல்ஹாசனுக்குத் தரப்பட்ட  சம்பளம் முப்பதாயிரம் ரூபாய். எனக்கு சம்பளம் ஐயாயிரம் ரூபாய். ரஜினிகாந்துக்கு மூவாயிரம் ரூபாய். அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய தாயாரிடம் மிகவும் நெருக்கமாக ரஜினி பழகுவார். என்னுடைய தாயாரும் தன்னுடைய மகன் போல அவர் மீது பாசத்தைப் பொழிவார். அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது  ரஜினியின் ஒரே லட்சியம் நாம் எப்போது கமல்ஹாசன் போல பெரிய நடிகராக வந்து முப்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவது என்பதாகத்தான் இருந்தது.

“நீ நிச்சயமாக பெரிய நடிகனாக வருவாய். முப்பதாயிரம் என்ன.. அதற்கும் மேலாக சம்பளம் வாங்குவாய்” என்று என்னுடைய அம்மா அவருக்கு ஆறுதல் கூறுவார்” என்று ‘மூன்று முடிச்சு’ பட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் ஸ்ரீதேவி.

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி அதற்குப் பின்னால் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தவர்கள் கமல்ஹாசனும் ஸ்ரீதேவியும் மட்டுமே. அது தவிர வேறு சில ஒற்றுமைகளும் அவர்களுக்கு உண்டு. இருவருமே திரையுலகில் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்த சாதனையாளர்கள்.

ஸ்ரீதேவி  கதாநாயகியாக திரையுலகில் அடி எடுத்து வைத்தபோது ஜமுனா, காஞ்சனா, மஞ்சுளா, லதா, சந்திரகலா, ஜெயப்பிரதா, மாதவி, ஜெயசுதா, ஜெயசித்ரா என்று எண்ணற்ற நடிகைகள் கதாநாயகிகளாக இருந்தனர்.

அவர்களோடு போட்டி போட்டு வென்றது மட்டுமின்றி  அவர்களை அடுத்து திரையுலகில் அடி எடுத்து வைத்த அம்பிகா, ராதா, சுகாசினி, ராதிகா, ரதி அக்னிஹோத்ரி, விஜயசாந்தி ஆகியோருடனும் போட்டி போட்டு ஜெயித்தவர் ஸ்ரீதேவி.

ஏ.நாகேஸ்வரராவோடு இணைந்து நடித்துவிட்டு அவரது மகன் நாகார்ஜுனாவிற்கும்   ஜோடியாக நடித்த பெருமையும் அவருக்கு உண்டு.

குழந்தை நட்சத்திரமாக சிவாஜியுடன் பல படங்களில் நடித்த ஸ்ரீதேவி ‘கவரிமான்’ படத்தில் அவரது மகளாக நடித்தார். பின்னர் ‘சந்திப்பு’ படத்திலே அவருக்கு ஜோடியானார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் எல்லா முன்னணி கதாநாயகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ள ஸ்ரீதேவி மலையாளத்தில் மட்டுமே குறைவான படங்களில் நடித்துள்ளார்.

1960-களில் எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இருவருக்கும் ஜோடியாக எண்ணற்ற படங்களில் நடித்த சரோஜாதேவியைப் போல ரஜினி, கமல் ஆகிய இருவரின் படங்களிலும் மாறி மாறி நடித்த ஸ்ரீதேவி தமிழ்ப் பட உலகில் மிகப் பெரிய சாதனைகளைப் புரிந்துவிட்டு இந்திப்பட உலகில் அடி எடுத்து வைத்தார்.

ஸ்ரீதேவியைப்போல தமிழ்ப் பட உலகிலிருந்து இந்திப் பட உலகிற்கு எண்ணற்ற நடிகைகள் சென்றிருக்கிறார்கள் என்றாலும் இந்தித்  திரை ரசிகர்களின் பாராட்டுக்களைப பெற்று அங்கு நிலைத்து நின்றவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

தென்னகத்திலிருந்து இந்திக்குச் சென்று சாதனை படைத்த வைஜயந்திமாலா, பத்மினி, ரேகா, ஹேமமாலினி ஆகியோரைத் தொடர்ந்து 1983-ம் ஆண்டில் பிரபல தெலுங்கு பட இயக்குநரான ராகவேந்திரராவ் இயக்கிய ‘ஹிம்மத்வாலா’ என்ற படத்தின் மூலம் இந்தித் திரைப்பட ரசிகர்களின் நெஞ்சங்களில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்தவர் ஸ்ரீதேவி.

அவர் இந்தியில் நடித்த முதல் படமான ‘சோல்வா சாவன்’  மிகப் பெரிய தோல்விப் படமாக அமைந்தது. ’16 வயதினிலே’ படத்தின் இந்திப் பதிப்பான  அந்தப் படம்தான் பாரதிராஜா, ஸ்ரீதேவி இருவருக்குமே முதல் இந்திப் படம்.

1979-ல் இந்தித் திரையுலகில் தோல்வி கண்ட ஸ்ரீதேவி, சரியாக அதற்கடுத்த நான்கே ஆண்டுகளில் ‘ஹிம்மத்வாலா’ படத்தின் மூலம் இந்திப் பட உலகின் கனவுக் கன்னி ஆனார். ஜிதேந்திராவுடன் 16 திரைப்ப்டங்களில் ஜோடியாக நடித்துள்ள ஸ்ரீதேவி இந்திப் பட உலகின் சூப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சன் தொடங்கி எல்லா இந்திப் பட கதாநாயகர்களுடனும் ஜோடியாக நடித்தவர்.

சிறு வயது முதலே சினிமாவில் இருந்தாலும் ஸ்ரீதேவியைப் பற்றி கிசு கிசுக்களே வந்ததில்லை. அந்த அளவு கட்டுப்பாடாக தன்னுடைய தாயார் ராஜேஸ்வரியின் கண்ணசைவிற்கு ஏற்ப வாழ்ந்தவர். ஸ்ரீதேவி.விழாக்களில் அவரை சந்திக்கும் மற்ற நடிகைகள் “இன்னிக்கு இந்த டிரஸ்ஸைத்தான் போடணும்னு உங்க அம்மா சொன்னாங்களா” என்றெல்லாம்கூட அவர் அணிந்து வரும்  உடையைப் பற்றி கிண்டல் செய்ததுண்டு. “ஆமாம்.. இது அம்மா எடுத்துக் கொடுத்த உடைதான்” என்று அவர்களுக்கு பளிச் என்று பதில் சொல்வார் ஸ்ரீதேவி. தாயாரின் கட்டுப்பாட்டில்தான் நானிருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ள  ஸ்ரீதேவி எப்போதுமே தயங்கியதில்லை.

இரும்பு மலராக இருந்த ஸ்ரீதேவியின் வாழ்வில் இரு முறை காதல் வந்தது. அவரது முதல் காதல் ‘ஜானி’ படத்தில் அவர் நடிக்கும்போது வந்தது. அவருக்கு யாருடன்  காதல் பிறந்தது என்பதைப் பற்றி ஸ்ரீதேவியின் பெயரைச்  சொல்லாமல் ‘தினத்தந்தி’ பத்திரிகையில் வெளிவந்த ஒரு பேட்டியில் இயக்குநர் மகேந்திரன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். 

“ரஜினி உச்சக்கட்டப் புகழை அடைந்திருந்தபோது அவரைத் திருமணம் செய்ய பல நடிகைகள் தயாராக இருந்தார்கள். ரஜினி ஒரு நடிகையை விரும்பினார். அந்த நடிகைக்கும் ரஜினி மேல் விருப்பம். ஒரு நாள் படப்பிடிப்பு நேரத்தில் “அந்த நடிகையைத் திருமணம் செய்து கொள்ள விருப்பப்படுகிறேன். உங்கள் கருத்து என்ன?” என்று என்னிடம் கேட்டார்.

“அந்தப் பொண்ணு உங்க மனைவியாக அமைந்தால் நீங்க ரெண்டு பேருமே நல்லா இருப்பீங்க” என்று சொன்னேன். அன்று அந்த நடிகையின் வீட்டு கிரகப் பிரவேசம். ரஜினியையும் என்னையும் இரவு எட்டு மணிக்கு வரச் சொல்லியிருந்தார் அந்த நடிகை. நாங்கள் இருவரும் போனபோது வாசலுக்கு வந்து எங்களை வரவேற்ற அவர் தன்னுடைய அம்மாவை அழைக்க வீட்டுக்கு உள்ளே போனார்.

”நடிகையின் அம்மா வந்தவுடன் கல்யாணப் பேச்சை ஆரம்பிக்கலாமா?” என்று என்னிடம் ரஜினி  கேட்டார். அப்போது திடீரென்று மின்சாரம் “கட்” ஆனது. நீண்ட நேரம் மின்சாரம் வரவில்லை.

மீண்டும் வெளிச்சம் வந்த நேரத்தில் ரஜினியின் மனம் மாறி இருந்தது. மின்சாரம் போனதை சகுனத்  தடையாக அவர் நினைத்துவிட்டதால் அந்தத் திருமணம் நடைபெறவில்லை…” என்று குறிப்பிட்டிருக்கிறார் மகேந்திரன்.

அந்தக் காதல் தோல்வியைத் தொடர்ந்து  நீண்ட இடைவெளிக்குப் பின்னால் இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி மீது ஸ்ரீதேவிக்குக்  காதல் பிறந்தது. மூன்று ஆண்டுகள் அவரோடு இணைந்து வாழ்ந்த ஸ்ரீதேவி தனது முதல் மனைவியான யோகிதா பாலியை மிதுன் விவாகரத்து செய்யத் தயாராக இல்லை என்பது தெரிந்ததும் மிகுந்த அதிர்ச்சியோடு அவரை விட்டு விலகினார்.

பின்னர் 1996-ல் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும், நடிகர் அனில் கபூரின் அண்ணனுமான போனி கபூரைத் திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவி, அதன் பிறகு திரையுலகைவிட்டு விலகினார். இவருக்கு ஜான்வி, குஷி என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீதேவி நடித்த தமிழ்ப் படமாக விஜய் கதாநாயகனாக நடித்த ‘புலி’ படம் அமைந்தது.

ஸ்ரீதேவி நடித்த முதல் திரைப்படமான  ‘துணைவன்’ 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வாரத்திலே வெளியானது. அவர் நடித்த  கடைசி படமான ‘மாம்’ திரைப்படமும் அதே ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியானதை ஒரு விசேஷ ஒற்றுமை என்றுதான் சொல்ல வேண்டும்.

இயற்கையை வெல்ல முடியாது என்ற நியதி காரணமாக  அவர் இறந்துவிட்டார் என்றாலும் திரைப்பட ரசிகர்கள் மனதில் அவர் என்றும் வாழ்வார் என்பதில் சந்தேகமில்லை.

(தொடரும்)

The post சினிமா வரலாறு-84 – காற்றோடு கலந்துவிட்ட கனவுக் கன்னி ஸ்ரீதேவி appeared first on Touring Talkies.

]]>
சினிமா வரலாறு-83 – ‘சோ’விற்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருந்த சுதந்திரம்..! https://touringtalkies.co/cinema-history-83-mgr-gives-freedom-to-actor-cho/ Fri, 14 Oct 2022 17:46:39 +0000 https://touringtalkies.co/?p=25428 ‘துக்ளக்’ பத்திரிகையைத் தொடங்கிய பிறகு  எம்.ஜி.ஆரை அரசியல் ரீதியாக  சோ விமர்சித்துக் கொண்டிருந்தபோதிலும் அதைப்  பெரிதாக பொருட்படுத்தாமல் தன்னுடைய திரைப்படங்களில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு தந்து கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். பொதுவாக தன்னை விமர்சிப்பவர்களை எம்.ஜி.ஆர் தன்னருகில் வைத்துக் கொள்ளமாட்டார் என்றாலும் கவிஞர் கண்ணதாசன், சோ போன்ற ஒரு  சிலருக்கு அந்தக் கொள்கையிலிருந்து விதிவிலக்கு அளித்திருந்தார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆருக்கு திரையுலகில் இருந்த செல்வாக்கு எப்படிப்பட்டது   என்பதை சோ நான்கு அறிந்திருந்தபோதிலும் அவரை விமர்சிக்கும் போக்கை சோ கை விடவேயில்லை. […]

The post சினிமா வரலாறு-83 – ‘சோ’விற்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருந்த சுதந்திரம்..! appeared first on Touring Talkies.

]]>
‘துக்ளக்’ பத்திரிகையைத் தொடங்கிய பிறகு  எம்.ஜி.ஆரை அரசியல் ரீதியாக  சோ விமர்சித்துக் கொண்டிருந்தபோதிலும் அதைப்  பெரிதாக பொருட்படுத்தாமல் தன்னுடைய திரைப்படங்களில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு தந்து கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.

பொதுவாக தன்னை விமர்சிப்பவர்களை எம்.ஜி.ஆர் தன்னருகில் வைத்துக் கொள்ளமாட்டார் என்றாலும் கவிஞர் கண்ணதாசன், சோ போன்ற ஒரு  சிலருக்கு அந்தக் கொள்கையிலிருந்து விதிவிலக்கு அளித்திருந்தார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆருக்கு திரையுலகில் இருந்த செல்வாக்கு எப்படிப்பட்டது   என்பதை சோ நான்கு அறிந்திருந்தபோதிலும் அவரை விமர்சிக்கும் போக்கை சோ கை விடவேயில்லை. அதே போன்று  படப்பிடிப்பு தளத்திலும்  மற்றவர்கள் எம்.ஜி.ஆரோடு பேசத் தயங்குகின்ற விஷயங்கள் பற்றி சர்வசாதாரணமாக அவரோடு பேசுவது  சோவின் வழக்கம்.

கலைஞர் கருணாநிதி துவங்கிய ‘மேகலா பிக்சர்ஸ்’ தயாரித்த படம் ‘எங்கள் தங்கம்.’ .அந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டபோது எம்.ஜி.ஆருக்கும், கலைஞருக்கும் இடையே இருந்த சுமுக உறவு, படம் முடிவடைகின்ற கட்டத்தை நெருங்கியபோது இல்லை.

அவர்கள் இருவருக்கும் பனிப்போர் நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் அந்தப் படத்தின்  கடைசி நாள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர்.வந்தார்.

சண்டைக் காட்சியில், இரண்டு ஷாட்டுகளும்  ‘சோ’வுடன் எம்.ஜி.ஆர் நடித்த ஒரு காட்சியில் விடுபட்டுப்போன இரண்டு ஷாட்களும் மட்டுமே அன்று படமாக்கப்படவிருந்தன. எம்.ஜி.ஆர். ஒத்துழைத்தால் ஒரு மணி நேரத்தில் முடிந்துவிட கூடிய படப்பிடிப்பு அது.

அன்றைய  படப்பிடிப்பை முடித்துவிட்டு மறுநாள் எம்.ஜி.ஆர். வெளிநாடு செல்லவிருந்தார். அன்று படப்பிடிப்பை  முடிக்கவில்லையென்றால் அறிவிக்கப்பட்டிருந்த தேதியில் அந்தப் படம் வெளிவருவது சிக்கலாகிவிடும் என்பதால் படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட எல்லோரையும் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டிருந்தது.

 9 மணிக்கு துவங்க இருந்த படப்பிடிப்பிற்கு எம்.ஜி.ஆர். சரியாக எட்டு மணிக்கே வந்துவிட்டார். அவர் அவ்வளவு சீக்கிரம் வருவார் என்று படக் குழுவினர் எவரும் எதிர்பார்க்கவில்லை.

அவர் சரியான நேரத்துக்கு  வந்து விட்டதால் 9 மணிக்கு படப்பிடிப்பை ஆரம்பித்தால் பத்து மணிக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிடலாம் என்று கணக்குப் போட்டு அந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகளை இயக்குநர்களான கிருஷ்ணன்-பஞ்சு ஆகிய இருவரும் துரிதப்படுத்தினார்கள்.

அப்போது மேக்கப் அறைக்கு  வெளியே ஒரு நாற்காலியைப் போட்டுக் கொண்டு அமர்ந்த எம்.ஜி.ஆர். அங்கிருந்தவர்களை கூப்பிட்டு பேசிக் கொண்டிருந்தார். பேசி முடித்துவிட்டு மேக்கப் போட்டு படப்பிடிப்புக்கு அவர் தயாராகிவிடுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது காரில் ஏறி யாரையோ சந்திக்க புறப்பட்டுவிட்டார் அவர்.

அவர் திரும்பி வந்தபோது மணி பன்னிரண்டு. அவர் இப்படி போக்குக் காட்டிக் கொண்டு இருந்ததால் அன்றைய படப்பிடிப்பை முடிக்க மாட்டார் என்று ‘சோ’-விற்கு தோன்றியது. அதை எம்.ஜி.ஆரிடமே கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள விரும்பிய அவர் எம்.ஜி.ஆர். அருகில் சென்றார். 

“இன்னிக்கு ஷூட்டிங் இருக்கா இல்லையான்னு எனக்கு மட்டுமாவது சொல்லுங்க. ஷூட்டிங் இல்லேன்னா நான் எதுக்கு தண்டமா இங்கே காத்துக் கிட்டு இருக்கணும்?” என்று அவரிடம் சோ கேட்டபோது “எனக்கு ஒரு உதவி பண்ணுங்க” என்று சோவிடம் கேட்டுக் கொண்ட எம்.ஜி.ஆர் “நீங்க கொஞ்சம் பேசாம இருங்க” என்று அவரிடம்  சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.

அன்று ஷூட்டிங்கில் கலந்து கொள்வதில்லை என்று எம்.ஜி.ஆர் முடிவெடுத்திருந்தால் நிச்சயம் தன்னை அவர் காக்க வைக்க மாட்டார் என்று எண்ணிய சோ பேசாமல் இருக்கச் சொல்லி எம்.ஜி.ஆர் சொல்லியதால் அமைதியாக மேக்கப் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டார்.

அன்று இரவு எட்டு மணிவரை ஸ்டுடியோவில் இருந்த பலரோடு பேசுவதும்  அடிக்கடி வெளியே போவதும், வருவதுமாக எம்.ஜி.ஆர். இருந்தாரே தவிர மேக்கப் போட்டுக் கொள்ளவேயில்லை.

“இன்று ஷூட்டிங் உண்டா இல்லையா?” என்று எம்.ஜி.ஆரிடம் நேரடியாகக் கேட்கக் கூடிய தைரியம் படத் தயாரிப்பாளரான முரசொலி மாறனுக்கோ, இயக்குநர்களான கிருஷ்ணன்-பஞ்சுவிற்கோ அறவே இல்லை. அவரிடம் அப்படி கேட்டு அதுவே பிரச்னையாகி அவர் கிளம்பிவிட்டால் என்ன செய்வது என்று எல்லோரும் பயந்தனர்.

நிச்சயமாக இன்று படம் முடியாது என்ற முடிவுக்கு படப்பிடிப்புக் குழுவினர் வந்துவிட்ட நிலையில் இரவு பதினொரு மணிக்கு மேக்கப் போட்டுக் கொண்டு படப்பிடிப்புக்கு வந்தார் எம்.ஜி.ஆர்.

இரவு பன்னிரண்டு மணிக்கு படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் ”என்ன தெளிவு வந்ததா?” என்று ‘சோ’வைப் பார்த்து எம்.ஜி.ஆர்.  கேட்டபோது “இல்லை சார்… தூக்கம்தான் வந்தது” என்று பதில் சொன்னார் சோ.

“என்ன காரணத்திற்காக அன்றைய படப்பிடிப்பில் எம். ஜி. ஆர் அப்படி நடந்து கொண்டார் என்று எனக்குத் தெரியவில்லை என்றாலும் எம்.ஜி.ஆருக்கும், கலைஞருக்கும் இடையே அப்போது இருந்த கருத்து மோதல்கள்தான் அதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும் என்று நானே ஒரு முடிவுக்கு வந்தேன் ”என்று ஒரு கட்டுரையில் ‘சோ’ குறிப்பிட்டிருக்கிறார்.

ப.நீலகண்டன் இயக்கத்தில்  எம்.ஜி.ஆருடன் ஒரு படப்பிடிப்பில் சோ கலந்து கொண்டபோது எம்.ஜி.ஆரை  தொடர்ந்து விமர்சித்துக் கொண்டிருந்த சோவைக்   கிண்டல் செய்யும் நோக்கத்துடன் அவரை வம்புக்கு இழுத்த இயக்குநர் ப.நீலகண்டன், ”என்ன சோ… உங்க ‘துக்ளக்’ பத்திரிக்கை விற்பனை எப்படி இருக்கு?” என்று அவரிடம் கேட்டார்.

“ரொம்ப நல்லா இருக்கு சார்“ என்று ‘சோ’ பதில் சொன்னவுடன் எம்.ஜி.ஆரைப் பார்த்து சிரித்தபடியே ”கலைமகள் பத்திரிகையின் விற்பனை எப்படி இருக்கு..?” என்று நீலகண்டன் கேட்க “பரவாயில்லை சார்..” என்று பதில் பிறந்தது ‘சோ’விடமிருந்து.

அடுத்து ”துக்ளக்கைவிட ‘கலைமகள்’ விற்பனை குறைவுதான் இல்லையா?” என்று நீலகண்டன் கேட்டபோது  அவரது கேள்வியின் நோக்கம் சோவிற்கு புரிந்து விட்டது.   அடுத்து ‘சோ’ எதிர்பார்த்த மாதிரியே ஒரு கேள்வியினை  எழுப்பினார் நீலகண்டன்.

“கலைமகள் எப்படிப்பட்ட பத்திரிகை?” என்று அவர் கேட்ட கேள்விக்கு “ரொம்பவும் தரமான ஒரு பத்திரிகை சார்” என்று பதிலளித்தார் சோ. அடுத்து “துக்ளக்”பத்திரிகை  ‘கலைமகள்’  அளவிற்கு தரமான பத்திரிகையா?” என்று  அவர் கேட்க “நிச்சயமாக இல்லை” என்று சோவிடமிருந்து பதில் வந்தது.

“துக்ளக்’கின் விற்பனை ‘கலைமகளு’க்கு இல்லை என்பது எதைக் காட்டுகிறது? தமிழ் நாட்டில் தரமுள்ள சரக்கு விற்பதில்லை. தரமில்லாத சரக்கு நன்கு விற்பனையாகிறது என்பதைத்தானே“ என்று எம்.ஜி.ஆரைப் பார்த்து  சிரித்தபடியே சொன்ன ப.நீலகண்டன் அடுத்து அப்படியொரு பதிலை ‘சோ’ சொல்வார் என்று எதிர்பார்க்கவில்லை.

“தமிழ் நாட்டில் எப்போதும் அப்படித்தான் சார். தரமான பல படங்கள் இங்கே ஒடுவதில்லை.  தரமில்லாத படங்கள்தான்  நன்றாக ஓடுகின்றன. பல நல்ல படங்கள் தோல்வியடைந்துள்ளன. அதே சமயம் நீங்க டைரக்ட் செய்த ‘என் அண்ணன்’ நன்றாக ஓடுகிறது” என்று சிரித்தபடியே அவருக்கு பதில் சொன்னார் ‘சோ’.

ப.நீலகண்டன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்த படம் ‘என் அண்ணன்’. ‘சோ’ அப்படி சொன்னவுடன் ப.நீலகண்டனால் எதுவும் பேச முடியவில்லை.அப்போது ப.நீலகண்டனின் பக்கத்திலிருந்த எம்.ஜி.ஆர் “அவரிடம் என் வம்புக்கு போனீங்க? அவர்கிட்ட வம்பு பண்ணா அவர் இப்படித்தான் பதில் சொல்வாருன்னு தெரியுமில்லே?” என்று சொன்னாரே தவிர சோ மீது கோபம் கொள்ளவில்லை.

தமிழக அரசியலிலும் சரி, தேசிய அரசியலிலும் சரி.. சோவை அறியாத தலைவர்களே இல்லை என்ற நிலைமைக்கு ஒரு கட்டத்தில் உயர்ந்த சோ தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜ், கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஜி.கே.மூப்பனார் ஆகியோருடனும் வி.பி.சிங், சந்திரசேகர், வாஜ்பாய், அத்வானி, நரேந்திர மோடி போன்ற பல தேசியத் தலைவர்களுடன் மிகவும் நெருக்கமாகப்  பழகியவர் என்ற போதிலும் அவர்களையும் விமர்சிக்க  என்றுமே அவர்  தயங்கியதில்லை. அந்த விமர்சனங்களை மீறி பல அரசியல் தலைவர்கள் அவரோடு நெருக்கமான உறவை வைத்துக் கொண்டிருந்தனர்.

அதனால்தான் சோ உடல் நலமின்றி  சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது  அவரது நலம் விசாரிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் அவரைத் தேடிச் சென்றனர்.

நாடக உலகிலும், பத்திரிகை உலகிலும் சோ  நிகழ்த்திய சாதனைகளை அவருடைய  அளவிற்கு துணிச்சலோடு இனி எவராலும் நடத்த முடியாது என்பதும் அதற்கான அரசியல் சூழல்  இப்போது இல்லை என்பதும் நிதர்சனமான உண்மைகள்.

(தொடரும்)

The post சினிமா வரலாறு-83 – ‘சோ’விற்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருந்த சுதந்திரம்..! appeared first on Touring Talkies.

]]>
சினிமா வரலாறு – 82 – கலைவாணரின் கடைசி மாணவரான ‘குலதெய்வம்’ ராஜகோபால் https://touringtalkies.co/cinema-history-82-kalavainaar-n-s-krishnans-last-student-kuladeivam-rajagopal/ Wed, 12 Oct 2022 18:02:11 +0000 https://touringtalkies.co/?p=25316 1960-களில் தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகராக கொடிகட்டிப் பறந்தவர் ‘குலதெய்வம்’ ராஜகோபால். நாடக நடிகராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய ராஜகோபால், கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்களின் இயக்கத்திலே ஏவி.எம். நிறுவனம் தயாரித்த ‘குலதெய்வம்’ படத்தில் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில்  மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றதால் அதுவரையிலே  ‘ராஜகோபாலாக’ இருந்த   அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘குலதெய்வம்’ ராஜகோபால் ஆனார். சிறுவயது முதலே அவர்  கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மிகத் தீவிர ரசிகர். ராஜகோபால் நடித்த ‘எதிர்பாராதது’ என்ற நாடகம் நாகர்கோவிலில் […]

The post சினிமா வரலாறு – 82 – கலைவாணரின் கடைசி மாணவரான ‘குலதெய்வம்’ ராஜகோபால் appeared first on Touring Talkies.

]]>
1960-களில் தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகராக கொடிகட்டிப் பறந்தவர் ‘குலதெய்வம்’ ராஜகோபால். நாடக நடிகராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய ராஜகோபால், கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்களின் இயக்கத்திலே ஏவி.எம். நிறுவனம் தயாரித்த ‘குலதெய்வம்’ படத்தில் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்திருந்தார்.

அந்தப் படத்தில் அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில்  மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றதால் அதுவரையிலே  ‘ராஜகோபாலாக’ இருந்த   அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘குலதெய்வம்’ ராஜகோபால் ஆனார்.

சிறுவயது முதலே அவர்  கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மிகத் தீவிர ரசிகர். ராஜகோபால் நடித்த ‘எதிர்பாராதது’ என்ற நாடகம் நாகர்கோவிலில் நடைபெற்றபோது அந்த நாடகத்துக்கு தலைமை தாங்க வந்த என்.எஸ்.கிருஷ்ணன்  ராஜகோபாலின் நடிப்பைப்  பாராட்டியது மட்டுமின்றி “இந்த மாதிரி திறமையான கலைஞர்கள் எல்லாம் மேம்போக்காக நடித்துவிட்டுப் போகாமல் கலைத்துறையில் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ள  வேண்டும்” என்று பேசினார்.

“நான் யாருடைய ரசிகனாக இருந்தேனோ அவரே என்னை அப்படிப் பாராட்டியபோது  நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என்னுடைய   வாழ்க்கையில் பல முக்கியமான திருப்பங்களுக்குக் காரணமானவர் கலைவாணர்தான். நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த நான்   திரைப்படங்களில்  நடிக்கவும் அவர்தான்  காரணமாக அமைந்தார்.  கலைவாணரது கடைசி மாணவன் நான்தான்”  என்று  ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ராஜகோபால், கலைவாணரைப் பற்றி பல அரிய தகவல்களை அந்தக் கட்டுரையில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

“கலைவாணர் ஒரு அபூர்வப் பிறவி. அவரோடு சேர்ந்து நாடகங்களில் நடித்த போதும்,  சினிமாவில் நடித்தபோதும் எத்தனையோ இனிய அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன.

நாடகம் முடிந்து நாங்கள் வீடு திரும்பும்போது நாடகம் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் தந்த சம்பளம் போக கலைவாணருடைய  சம்பளப்  பணம் என்னிடம்தான்  இருக்கும். அந்த சமயத்தில் அவரிடம் உதவி கேட்டு வருபவர்கள் எல்லோருக்கும் அவர் அந்தப் பணத்திலிருந்து எடுத்துக் கொடுக்கச் சொல்வார். பெரும்பாலான நாட்கள்  வீடு திரும்பும்போது  அவருடைய சம்பளப்  பணம் முழுமையாக தீர்ந்து வெறும் கையுடன்தான் நாங்கள் வீடு திரும்புவோம். தன்னிடம் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று எப்போதும் சொல்லாத வள்ளல் அவர்.  

1954-ம் ஆண்டில் தந்தை பெரியார் புத்த மத மாநாடு ஒன்றை நடத்தினார். அந்த மாநாட்டில் புத்தரைப் பற்றி கலைவாணர் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டேன்.

அந்த நிகழ்ச்சியின் முடிவில் பேசிய தந்தை  பெரியார் “எல்லோரும் என்னை பெரியார் என்று சொல்கிறீர்கள். ஆனால்  எனக்கும் மேலே  ஒரு பெரியார் இருக்கிறார். அது உங்களுக்குத்  தெரியுமா?” என்று அந்த கூட்டத்தில் இருந்தவர்களைப் பார்த்து கேட்டார்.  

பெரியார் அப்படி கேட்டதும் கூட்டத்தில் மிகப் பெரிய சலசலப்பு ஏற்பட்டது. “பெரியாருக்கு மேலே ஒரு பெரியாரா? யார் அவர்?” என்று அந்தக் கூட்டத்திலிருந்த எல்லோரும் ஒருவரோடு ஒருவர் கிசுகிசுக்கத்  தொடங்கியபோது தன்னுடைய பேச்சுக்கான விளக்கத்தை தந்தை பெரியாரே சொல்லத் தொடங்கினார்.

“உங்களுக்கு எல்லாம்  நான்  பெரியார். எனக்குப் பெரியார் கலைவாணர்தான். ஏனென்றால் நான் மேடை ஏறி சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களைச்  சொன்னால்  கல்லால் அடிக்கிறார்கள். நான் பேசுகின்ற அதே கருத்துக்களைத்தான் கலைவாணர் சினிமாவில் சொல்கிறார். ஆனால் அதைப் பார்க்கவும், கேட்கவும் காசு கொடுத்து போகிறார்கள். இப்போது சொல்லுங்கள். நான் சொன்னது நியாயம்தானே. அவர்தானே எனக்குப் பெரியார்” என்று தந்தை பெரியார் சொல்லி முடித்தபோது மக்களுடைய ஆரவாரம் அடங்க வெகு நேரம் ஆயிற்று.

கொடைத் தன்மை மட்டுமின்றி பல நல்ல குணங்களுக்கு சொந்தக்காரராக இருந்தவர் கலைவாணர். அதனால்தான் கட்சி வேறுபாடு இன்றி எல்லா அரசியல் தலைவர்களாலும் விரும்பப்பட்ட  கலைஞராக  அவர் இருந்தார்.

திறமைசாலிகளைத் தேடிப் பிடித்து அவர்களுக்கான  வாய்ப்புகளை பெற்றுத் தருவதில்  கலைவாணருக்கு நிகராக  யாரையும் சொல்ல முடியாது. 

காத்தவராயன் கதையை ‘ஆர்யமாலா’ என்ற பெயரில் திரைப்படமாக   எடுக்க திட்டமிட்ட  பட்சிராஜா ஸ்டுடியோ அதிபர்   ஸ்ரீராமுலு நாயுடு கலைவாணரைச்  சந்தித்து ‘ஆர்யமாலா’ கதையைச்  சொல்லிவிட்டு அந்தப் படத்தில் யாரை நடிக்க வைத்தால் சரியாக இருக்கும்  என்று அவரிடம் யோசனை கேட்டார். “படம் சக்சஸ் ஆகணும்னா கதாநாயகனாக பி.யு.சின்னப்பாவையும், வில்லனாக   பாலையாவையும் போடு” என்று கலைவாணர் சொன்னபோது ஸ்ரீராமுலு நாயுடு அடைந்த  அதிர்ச்சிக்கு அளவேயில்லை.

ஏனென்றால் அந்த கால கட்டத்தில் பி.யு.சின்னப்பா திரைப்பட மார்க்கெட்டை முற்றிலுமாக  இழந்துவிட்டு  ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்கப் போய்விட்டிருந்தார். டி.எஸ்.பாலையா அதற்கும் மேலே ஒரு படி சென்று சாமியாராக மாறிவிட்டிருந்தார். அவர் எங்கேயிருக்கிறார் என்பதைப் பற்றி அவரது குடும்பத்துக்கே அப்போது தெரியாமல் இருந்தது. ஆகவே, கலைவாணர் அவர்கள் இருவரது பெயரையும் சொன்னவுடன் ஸ்ரீராமுலு நாயுடு மிகப் பெரிய குழப்பத்துக்கு ஆளானார்.

ஸ்ரீராமுலுவின் முகத்தைப் பார்த்தே தான் சொன்ன யோசனையைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட கலைவாணர் “நீங்க எதையும் யோசிக்காதீங்க. நான் சொல்றதை கேளுங்க. இந்த படத்தில அவங்க ரெண்டு பெரும் நடிச்சாதான் நல்லா இருக்கும். நீங்க சரின்னு சொன்னா அவங்க எங்கே இருந்தாலும் அவங்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது என் பொறுப்பு. என்ன சொல்றீங்க?” என்று ஸ்ரீராமுலு நாயுடுவிடம் கேட்டார். ஸ்ரீராமுலு நாயுடு, கலைவாணர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தவர். ஆகவே   அவர் சொன்னதை மறுத்துப் பேச முடியாமல் “சரி” என்று ஏற்றுக் கொண்டார்.

ஸ்ரீராமுலு நாயுடு ஒப்புக் கொண்டவுடன் பி.யு.சின்னப்பாவையும், பாலையாவையும் தேடிப் பிடித்து அழைத்து வந்து ‘ஆர்யமாலா’ படத்தில் அவர்கள் இருவரையும் நடிக்க வைத்தார் கலைவாணர். மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்த அந்த  படத்திற்குப் பிறகு அவர்கள் இருவரின் மார்க்கெட்டும் மீண்டும் சூடு பிடித்தது.

ஒரு முறை சிவாஜிக்கும், கண்ணதாசனுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பத்திரிகைகளில் அறிக்கை விடத் தொடங்கியபோது  கலைவாணர் அவர்களை சமாதானப்படுத்தியது மட்டுமின்றி இனி ஒற்றுமையாக இருப்போம் என்று தனக்கு முன்னால் அவர்களை  சத்தியம் செய்ய வைத்தார். அவரது பெருமைகளை எடுத்துச் சொல்ல  ஆரம்பித்தால் அதற்கு நாட்கள் போதாது” என்று கலைவாணரது பெருமைகளை எடுத்துச் சொல்லியுள்ள ‘குலதெய்வம்’  ராஜகோபால்  “நடிகனாக இருந்த என்னை வில்லுப்பாட்டுக் கலைஞராக ஆக்கியவரும் அவர்தான்” என்று கூறியுள்ளார்.

1957-ம் ஆண்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் கலைவாணர் உயிர் பிரிந்தது.1958-ம் ஆண்டு அவரது இல்லத்தில் கலைவாணரின் வாழ்க்கை வரலாற்றை வில்லுப் பாட்டு நிகழ்ச்சியாக முதன்முதலில் நடத்திய ‘குலதெய்வம்’  ராஜகோபால் அதற்குப் பிறகு எண்ணற்ற மேடைகளில் கலைவாணரைப் பற்றி வில்லுப் பாட்டு நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார்.

“என் வாழ்க்கையில் எல்லாமுமாக இருந்த அவருக்கு அவர் வாழ்ந்த காலத்தில் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அந்த வருத்தத்தில் இருந்த என்னுடைய மனதிற்கு அவர் இறந்த பிறகு வில்லுப் பாட்டு நிகழ்ச்சியின் மூலம் அவரது வாழ்க்கையைச் சொன்னது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது என்று ‘குலதெய்வம்’ ராஜகோபால் குறிப்பிட்டிருக்கிறார்.

(தொடரும்)

The post சினிமா வரலாறு – 82 – கலைவாணரின் கடைசி மாணவரான ‘குலதெய்வம்’ ராஜகோபால் appeared first on Touring Talkies.

]]>
சினிமா வரலாறு-81 – ரஜினிகாந்த் பேசிய முதல் ‘பன்ச்’ வசனம் https://touringtalkies.co/cinema-history-81-rajinikanths-first-punch-dialogue/ Wed, 28 Sep 2022 05:51:17 +0000 https://touringtalkies.co/?p=24704 ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த ஆறிலிருந்து அறுபதுவரை’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ போன்ற வித்தியாசமான படங்களையும் ‘காயத்ரி’, ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘குரு சிஷ்யன்’ போன்ற வர்த்தக ரீதியான  வெற்றிப் படங்களையும் தயாரித்த  பஞ்சு அருணாசலம், ரஜினிகாந்தின் திரையுலகப் பயணத்தில் கே.பாலச்சந்தருக்கு அடுத்து மிகவும் முக்கியமான நபர். ரஜினிகாந்தை முதன்முதலாக பஞ்சு அருணாசலம் நேரில் சந்தித்தது ‘கவிக் குயில்’ படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பில்தான். அந்தப் படத்தின் படப்பிடிப்பு சிக்மளூரில் நடைபெற்றபோது  தினமும் மாலை வேலைகளில் பஞ்சு […]

The post சினிமா வரலாறு-81 – ரஜினிகாந்த் பேசிய முதல் ‘பன்ச்’ வசனம் appeared first on Touring Talkies.

]]>
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த ஆறிலிருந்து அறுபதுவரை’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ போன்ற வித்தியாசமான படங்களையும் ‘காயத்ரி’, ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘குரு சிஷ்யன்’ போன்ற வர்த்தக ரீதியான  வெற்றிப் படங்களையும் தயாரித்த  பஞ்சு அருணாசலம், ரஜினிகாந்தின் திரையுலகப் பயணத்தில் கே.பாலச்சந்தருக்கு அடுத்து மிகவும் முக்கியமான நபர்.

ரஜினிகாந்தை முதன்முதலாக பஞ்சு அருணாசலம் நேரில் சந்தித்தது ‘கவிக் குயில்’ படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பில்தான்.

அந்தப் படத்தின் படப்பிடிப்பு சிக்மளூரில் நடைபெற்றபோது  தினமும் மாலை வேலைகளில் பஞ்சு அருணாசலத்தை சந்திப்பதை  வழக்கமாக்கிக் கொண்டார் ரஜினி. அவரோடு பழகத் தொடங்கிய சில நாட்களிலேயே ரஜினிகாந்த், இந்தியத் திரையுலகில் மிகப் பெரிய உயரத்தைத் தொடப் போகும் நடிகர் என்று பஞ்சு அருணாசலத்துக்குப் புரிந்துவிட்டது.

தொடர்ந்து தனது படங்களில் அவரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முடிவை அந்த முதல் சந்திப்பின்போதே  பஞ்சுஅருணாசலம் எடுத்துவிட்டார்.

கவிக் குயில்’ படத்தைத் தொடர்ந்து விஜய பாஸ்கர் பிலிம்ஸ்’ பாஸ்கருடன் இணைந்து ‘விஜய மீனா’ என்ற பட நிறுவனத்தைத் தொடங்கிய பஞ்சு அருணாசலம் அந்த நிறுவனத்தின் சார்பில் காயத்ரி’ என்ற படத்தை தயாரித்தார்.

‘காயத்ரி’ சுஜாதா எழுதிய கதை. ‘தினமணி கதிர்’ பத்திரிகையில் வெளி வந்திருந்தது. அந்தக் கதையைப் படித்த பஞ்சு அருணாசலத்துக்கு அதைப் படமாக எடுத்தால் நிச்சயம் சினிமாவுக்கு புதிதாக இருக்கும் என்று தோன்றியதால் உடனடியாக எழுத்தாளர் சுஜாதாவுடன் தொடர்பு கொண்டு பேசினார்.

“சாவி சார் கேட்டார் என்பதற்காக நான் அவசரத்தில் எழுதிக் கொடுத்த கதை அது. “தினமணி கதிரில்” அந்தக் கதை வந்தபோதே ‘நீங்கள் இப்படி எழுதலாமா?’ என்று எனக்கு நிறையக் கண்டனக் கடிதங்கள் வந்தன. பத்திரிகையில் வெளியானதற்கே அவ்வளவு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட அந்தக் கதையை நீங்கள் எப்படிப் படமாக எடுப்பீர்கள்?’ என்று சுஜாதா கேட்டபோது, “அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் கதையை மட்டும் கொடுங்கள்..” என்றார் பஞ்சு அருணாசலம்.

அந்தக் காலக்கட்டத்தில் பஞ்சு அருணாசலத்துடன் தொடர்ந்து பணியாற்றியது இரண்டு இயக்குநர்கள்தான். ஒருவர் எஸ்.பி.முத்துராமன், இன்னொருவர் தேவராஜ் மோகன்.

எஸ்.பி.முத்துராமன் அப்போது பஞ்சு அருணாசலம் எழுதிக் கொண்டிருந்த வேறு இரண்டு படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தார். தேவராஜ் மோகன் தனது சொந்தப் படத்தை இயக்கிக் கொண்டிருந்தார்.

ஆகவே இந்த ‘காயத்ரி’ படத்தை இயக்கும் வாய்ப்பினைப் பட்டு என்கிற பட்டாபிராமனுக்கு அளித்தார் பஞ்சு அருணாசலம். சிவாஜி அறிமுகமான ‘பராசக்தி’ படம்  முதல் கிருஷ்ணன் பஞ்சுவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் பட்டு.

ஜெய்சங்கர் கதாநாயகனாகவும், ரஜினிகாந்த் வில்லனாகவும்  நடிக்க 1977-ம் ஆண்டு வெளிவந்த காயத்ரி’ வெற்றிப் படமாகவும் அமைந்தது.

சுஜாதா எழுதியிருந்த அந்தக் கதையில் தான் செய்திருந்த மாறுதல்களை ரசிகர்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பதை சுஜாதாவிற்குக் காட்டி அவரைஅசத்துவதற்காக ‘காயத்ரி’ படம் ஓடிக் கொண்டிருந்த தியேட்டருக்கு சுஜாதாவை அழைத்துச் சென்றார் பஞ்சு. ஆனால் அன்று தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரத்தைப் பார்த்து சுஜாதா அசந்ததைவிட அதிகமாக அசந்து போனவர் பஞ்சு அருணாசலம்தான்.

‘காயத்ரி’ படத்தின் வில்லனான ரஜினியை ஹீரோ ஜெய்சங்கர் அடித்தபோது ரசிகர்கள் ஆவேசமாக ஜெய்சங்கரைத் திட்டினார்கள். அதே நேரத்தில் ஹீரோ ஜெய்சங்கரை வில்லன் ரஜினி அடித்தபோது, தியேட்டரில் விசில் பறந்தது.

இனி ரஜினிகாந்த் வில்லனல்ல என்பதையும், தொடர்ந்து அவரை வில்லனாக நடிக்க வைத்துப் படம் எடுத்தால் அது மாதிரியான படங்களை ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்பதையும் பஞ்சு அருணாசலத்திற்கு இந்த ‘காயத்ரி’ படம் தெளிவாக உணர்த்தியது.

‘காயத்ரி’ படத்தில் பஞ்சு அருணாச்சலம் பெற்ற அந்த அனுபவம்தான் ‘புவனா ஒரு கேள்விக் குறி’ படத்தில் ஒரு முக்கியமான மாறுதலை அவர் செய்யக் காரணமாக அமைந்தது.

‘புவனா ஒரு கேள்விக் குறி’ படத்தின் தயாரிப்பாளரான  எம்.ஏ.எம்.மணியும், இயக்குநர் எஸ்.பி.முத்துராமனும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். ஏவி.எம்.ஸ்டுடியோவில் மணி புரொடக்‌ஷன் மேனேஜராகப் பணியாற்றியபோது எஸ்.பி.முத்துராமன், அங்கே எடிட்டிங் பிரிவில் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

தன்னுடைய நெருங்கிய நண்பரான எஸ்.பி.முத்துராமன் மிகப் பெரிய இயக்குராக உயர்ந்ததும் அவரது இயக்கத்தில் ஒரு படத்தைத் தயாரிக்க விரும்பினார் மணி.

அப்போது மகரிஷி எழுதிய ‘பத்ரகாளி’ கதை திருலோகசந்தர் இயக்கத்தில் மிகப் பெரிய வெற்றியை அடைந்திருந்தது. ஆகவே அவர் எழுதி ‘குமுதம்’ இதழில் வெளியான ‘புவனா ஒரு கேள்விக் குறி’ கதையின் உரிமையை வாங்கிய மணி, அந்தக் கதையின் மூன்று முக்கியமான பாத்திரங்களுக்கு சிவகுமார், ரஜினிகாந்த், சுமித்ரா ஆகியோரின் கால்ஷீட்டை வாங்கிவிட்டு இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுடன் பஞ்சு அருணாசலத்தை சந்திக்க வந்தார்.

மகரிஷி எழுதிய நாவலை அவர்களிடமிருந்து வாங்கிக் கொண்ட பஞ்சு அருணாசலம் உடனே அதைப் படித்து முடித்தார். அந்த நாவல் அவருக்கும் பிடித்திருந்தது.

அந்தக் கதைக்கான திரைக்கதையை எழுதி முடித்தபோது வாழ்க்கையைப் பறி கொடுத்த பெண்ணை ஏற்றுக் கொள்ளும் கதாநாயகன் பாத்திரத்தில் சிவகுமாரும், கதாநாயகியைக் கெடுத்துவிட்டு அவளைவிட்டு விலகும் பாத்திரத்தில் ரஜினியும் நடித்தால் அந்தப் படம் வழக்கமான ஒரு படமாக ஆகிவிடக் கூடிய அபாயம் இருப்பதாக பஞ்சு அருணாசலத்துக்குத் தோன்றியது.

தன்னுடைய கருத்தை தயாரிப்பாளரான மணியிடமும், இயக்குநரான எஸ்.பி.முத்துராமனிடமும் சொன்னார் அவர். அவரது அந்தப் பயம் நியாயமானது என்று அவர்களும் ஒப்புக் கொண்டார்கள் என்றாலும்  அந்த நல்லவன் வேடம்தான் சிவகுமாருக்கு என்று ஒப்பந்தம் செய்யும்போதே, சிவகுமாரிடம் சொல்லிவிட்டதால் மீண்டும் அவரிடம் போய் எப்படி மாற்றி சொல்வது என்று அவர்கள் இருவரும் சங்கடப்பட்டார்கள்.

“நெகடிவ்வான பாத்திரத்தை ஏற்று நடித்தால் அவருக்கும் அது வித்தியாசமான பாத்திரமாக இருக்கும். அதே நேரத்தில் படம் வெற்றி பெறவும் அது உதவியாக இருக்கும் என்பதை சிவகுமாருக்கு சொல்வோம். அதற்குப் பிறகும் ‘எனக்கு அதில் எல்லாம் விருப்பம் இல்லை. நான் அந்த நல்லவன் பாத்திரத்திலேயே நடிக்கிறேன்’ என்று அவர் சொன்னால் அந்தப் பாத்திரத்திலேயே நடிக்கட்டும்” என்றார் பஞ்சு.

சிவகுமாரை சந்தித்து புவனா ஒரு கேள்விக் குறி’ படத்தில் அவருடைய பாத்திரத்தை   மாற்றியிருப்பது பற்றி இயக்குநர் எஸ்.பி.முத்துராமனும், பஞ்சு அருணாசலமும் சொன்னபோது “என்ன சார் இப்படிப் பண்ணிட்டீங்க?” என்று முதலில் ஆதங்கப்பட்டாலும், பாத்திரங்களை மாற்றியதற்கான காரணங்களை பஞ்சு அருணாசலம் விளக்கிச் சொன்ன பிறகு பெருந்தன்மையோடு சிவகுமார் ஒப்புக் கொண்டார்.

அப்போது ரஜினிகாந்த் பல படங்களில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த ஒரு நடிகராக இருந்த போதிலும் பெரும்பாலான படங்களில் எதிர்மறைப் பாத்திரங்களிலேயே நடித்து வந்தார். ஆகவே இந்த ‘புவனா ஒரு கேள்விக் குறி’ படத்தில் தான் ஏற்கவிருந்த பாத்திரம் மாற்றப்பட்டது பற்றி அறிந்ததும் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தார் அவர்.

ரஜினிகாந்தின் திரையுலக வாழ்க்கையில் பஞ்சு அருணாசலம் கொண்டு வந்த முதல் மாற்றம் அது. அந்த மாற்றத்தைக் கொண்டு வந்த பஞ்சு அருணாசலம்தான் ரஜினியின் முதல் ‘பஞ்ச்’ டயலாக்கையும்  எழுதியவர்.

‘புவனா ஒரு கேள்விக் குறி’ படத்தின் கதைப்படி சிவகுமார் தவறு செய்துவிட்டு வர, அதனைத் தெரிந்து கொள்ளும் ரஜினி அவரை கண்டிப்பார். அதற்கு சிவகுமார் “பத்தோடு பதினொண்ணு விட்றா” என்று அலட்சியமாக பதில் சொல்ல   ‘‘கடப்பாரையை முழுங்கிட்டு சுக்குத் தண்ணி குடிச்சாலும் அது செரிக்காது. வயித்த கிழிச்சுக்கிட்டு வெளியே வரும்”என்று அழுத்தம் திருத்தமாக ரஜினிகாந்த் சொல்வார். ரஜினிகாந்த் திரையில் பேசிய முதல்  ‘பஞ்ச்’ டயலாக் இதுதான்.

(தொடரும்)

The post சினிமா வரலாறு-81 – ரஜினிகாந்த் பேசிய முதல் ‘பன்ச்’ வசனம் appeared first on Touring Talkies.

]]>
சினிமா வரலாறு-80 – ‘சொன்னது நீதானா’ பாடல் பிறந்த கதை https://touringtalkies.co/cinema-history-80-sonnathu-neethaanaa-song-story/ Fri, 21 Jan 2022 15:27:15 +0000 https://touringtalkies.co/?p=20356 காலை ஏழு மணி முதல் ஸ்ரீதரும், எம்.எஸ்.விஸ்வநாதனும் பாடல் கம்போசிங்கிற்காக காத்திருக்க பத்து மணிக்கு அங்கே வந்த கவிஞர் கண்ணதாசன் “நான் கம்போசிங்கிற்கு தயார். நீங்கள் தயாரா?” என்று கேட்டவுடன் லேசாக எரிச்சலடைந்த ஸ்ரீதர் “நாங்க ஏழு மணியிலே இருந்து இங்க உட்கார்ந்துகிட்டு இருக்கோம். காலையிலே சீக்கிரமே இந்த பாட்டை முடிக்கணும்னு நேற்றே உங்ககிட்ட சொன்னேன் இல்லே. அப்படியும் இவ்வளவு லேட்டா வந்தா எப்படி?” என்று  கேட்க, “கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன். அதுதான் லேட்டாகிவிட்டது” என்றார் கவிஞர். […]

The post சினிமா வரலாறு-80 – ‘சொன்னது நீதானா’ பாடல் பிறந்த கதை appeared first on Touring Talkies.

]]>
காலை ஏழு மணி முதல் ஸ்ரீதரும், எம்.எஸ்.விஸ்வநாதனும் பாடல் கம்போசிங்கிற்காக காத்திருக்க பத்து மணிக்கு அங்கே வந்த கவிஞர் கண்ணதாசன் “நான் கம்போசிங்கிற்கு தயார். நீங்கள் தயாரா?” என்று கேட்டவுடன் லேசாக எரிச்சலடைந்த ஸ்ரீதர் “நாங்க ஏழு மணியிலே இருந்து இங்க உட்கார்ந்துகிட்டு இருக்கோம். காலையிலே சீக்கிரமே இந்த பாட்டை முடிக்கணும்னு நேற்றே உங்ககிட்ட சொன்னேன் இல்லே. அப்படியும் இவ்வளவு லேட்டா வந்தா எப்படி?” என்று  கேட்க, “கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன். அதுதான் லேட்டாகிவிட்டது” என்றார் கவிஞர்.

“எனக்கு எல்லாம் தெரியும். நேற்று  இரவு இரண்டு மணிவரைக்கும்  நீங்க தூங்கவேயில்லையாம்.  .அப்புறம் எப்படி ஏழு மணிக்கு உங்களால  வர முடியும்?” என்று ஸ்ரீதர் சொல்லிக் கொண்டே போக கண்ணதாசன், விஸ்வநாதன் பக்கம் திரும்பி அவரைப் பார்த்தார். கண்ணதாசனின் பார்வையைத் தாங்கிக் கொள்ள முடியாத  எம்.எஸ்.விஸ்வநாதன்  தலையைக் குனிந்து கொண்டார்.

சிறிது நேரத்திலே கம்போசிங் தொடங்கியது. ஸ்ரீதர் பாடல் எழுதப்பட்ட வேண்டிய காட்சியை விளக்க,  “நீங்க  முதல்ல பாட்டை எழுதி விடுங்கள். நீங்கள் எழுதுகின்ற  பாடலுக்கு நான்  இசையமைக்கிறேன்..” என்றார் எம்.எஸ்.விஸ்வநாதன். 

“பரவாயில்லை… நீ மெட்டைச்  சொல்லு..” என்று  கண்ணதாசன் சொல்ல  “ல ல ல லா லா லா …” என்று விஸ்வநாதன் மெட்டைப் பாடிக் காட்டினார். அடுத்த நிமிடம் பாடலை சொல்லத் தொடங்கிய கண்ணதாசன் பாடல் வரிகளை மட்டும் சொல்லவில்லை. விஸ்வநாதனைப் பார்த்து தான் கேட்க நினைத்த  கேள்வியையும் அந்தப் பாடலின் வழியே கேட்டார்.

“சொன்னது நீ தானா ?…..”

கண்ணதாசனின் அந்த  வார்த்தைகளை சொன்னவுடன் விஸ்வநாதன்  முகம் லேசாக மாறியது. கவியரசர் இன்று பாட்டால் தன்னை அடிக்கப் போகிறார் என்று புரிந்து கொண்ட அவர் அடுத்து “ல ல ல” என்று சொல்ல ஒரு கணம்கூட தாமதிக்காமல் “சொல் … சொல்.. சொல்…” என்றார் கண்ணதாசன்.

அத்துடன் நிற்காமல், “சம்மதம்தானா?  ஏன் ஏன் ஏன் என்னுயிரே… இன்னொரு கைகளிலே, யார், யார், யார்.. நானா? என்னை மறந்தாயா..? ஏன் ஏன் ஏன் என்னுயிரே…?” என்று  கண்ணதாசன் பல்லவியைச்  சொல்லி   முடித்தபோது விஸ்வநாதன் முழித்ததைப்  பார்த்த ஸ்ரீதர் குலுங்கி, குலுங்கி சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

பின்னர் மற்ற மற்ற சரணங்களையும் மடை திறந்த வெள்ளம் போல கண்ணதாசன் சொல்ல அடுத்த இரண்டு மணி நேரத்தில் அந்த  பாடல் கம்போசிங் முடிவடைந்தது.

ஸ்ரீதரின் ‘காதலிக்க நேரமில்லை’ பாடலுக்குப் பின்னேயும் இது போன்ற ஒரு சுவையான சம்பவம் உண்டு.

‘காதலிக்க நேரமில்லை’ பாடல் கம்போசிங்கிற்காக சித்ராலயா அலுவலகத்தில் எம்.எஸ்.விஸ்வநாதனும், கண்ணதாசனும்  அமர்ந்திருந்தபோது செய்தித் தாளில் அமெரிக்க அதிபர் ஐசனோவர் பற்றி வந்திருந்த செய்தியை அங்கிருந்த ஒருவர் உரக்கப் படிக்க, விஸ்வநாதன் உடனே “ஐசனோவர் யார் அண்ணே..?” என்று கண்ணதாசனைக் கேட்டார்.

எம்.எஸ்.வி.க்கு இசையைத் தவிர வேறு எதிலும் மிகப் பெரிய ஞானம்  கிடையாது என்பதை நன்கு அறிந்திருந்த  கண்ணதாசன் “அடே மண்டு.. அவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர்..” என்றார்.

அப்போது அங்கு வந்த ஸ்ரீதர், “அடடே, ரெண்டு பேரும் வந்துட்டீங்களா? சரி காட்சி  என்னன்னா, தன்னை வேலையிலிருந்து நீக்கிய எஸ்டேட் ஓனரை எதிர்த்து ரவிச்சந்திரன் போராட்டம் நடத்துகிறார். அந்த காட்சிக்குத்தான் இப்ப கம்போசிங். நீங்க டியூன் போட்டுக்கிட்டு இருங்க. எனக்கு கொஞ்சம்  டிஸ்கஷன் வேலை பாக்கி இருக்கு. அதை முடித்துக் கொண்டு வந்துவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு சி.வி.ராஜேந்திரனோடும், கதாசிரியர் கோபுவோடும் கதை பேச போய்விட்டார்.

சற்று முன்னர் யாரோ சொன்ன ஐசனோவர் என்ற பெயர் விஸ்வநாதனின் மனதில் சுற்றிக் கொண்டே இருந்ததால்  “ஐசனோவர்…. ஆவலோவா….” என்று வாய்விட்டு  சத்தம் போட்டு அவர் டியூனை பாடத் தொடங்கினார்.

உடனே  உள் அறையிலிருந்து எட்டிப் பார்த்த ஸ்ரீதர் “அண்ணே இப்போ நீங்க பாடினீங்களே,  அந்த  ட்யூன் ரொம்ப நல்லா இருக்கு. அதை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்…” என்றார்.

ஸ்ரீதருக்கு டியூன் பிடித்து விட்டதில் மகிழ்ச்சி அடைந்த விஸ்வநாதன் “அண்ணே சீக்கிரம் இந்த டியூனுக்கு பாட்டை சொல்லுங்கண்ணே. இதை முடிச்சிட்டு இன்னொரு  கம்பெனியின்  கம்போசிங்கிற்கு   நான் போகணும்..” என்றார்.

“இதோ பாருடா விசு. ஒரு வாரமா பெங்களூர்ல தங்கி கையில இருந்த காசையெல்லாம் செலவழிச்சிட்டேன். அதனால இன்னைக்கு ஸ்ரீதருக்கு ரெண்டு, மூணு பாட்டு எழுதிக் கொடுத்திட்டு  அவர்கிட்ட மொத்தமா காசை வாங்கிகிட்டு போகணும் அப்படீங்கிற முடிவோடு நான் வந்திருக்கேன்.  அதனால நீ என்னை விட்டுட்டு அங்கே இங்கேன்னு போகாதேடா.  இன்னிக்கு எனக்கு வேலை கொடுடா விஸ்வநாதா….!” என்றார்.

கவிஞர் அப்படிச்  சொன்னதும் மீண்டும் டிஸ்கஷன் அறையிலே இருந்து  தலையை  வெளியே நீட்டிய ஸ்ரீதர் “கவிஞரே, இப்போ கடைசியா சொன்னீங்களே ‘வேலை கொடுடா விஸ்வநாதா’… என்று அதையே  பல்லவியா வைச்சிக்கலாம்” என்றார்.

அவர் அப்படிச்  சொன்னவுடன் விஸ்வநாதன்  கண்ணதாசனைப் பார்த்து  “ஏண்ணே, இன்னைக்கு ஸ்ரீதருக்கு என்ன ஆச்சு….? நான் வாய்க்கு வந்தபடி ‘ஐசனோவர் ஆவலோவா’னு பாடினேன்  ‘அதுதான் ட்யூன்’ அப்படின்னார். இப்ப  ‘வேலை கொடுடா விஸ்வநாதா’ன்னு நீங்க சொன்னதை ‘அதுதான் பல்லவி’ என்கிறார். என்னண்ணே இதெல்லாம்?” என்று கேட்டார்.

“இதோ பார் விசு. நம்ம ரெண்டு பேருக்கும் ஸ்ரீதர் இன்னைக்கு ஏதோ ஒரு  டெஸ்ட் வச்சிருக்கார்னு நினைக்கிறேன். அதை சாதிச்சுக் காட்டி நாம்ப பேர் வாங்கணும். நீ கத்தியதுதான் ட்யூன்.. நான் சொன்னதுதான் பல்லவி… ஆரம்பி” என்றார்.

“ஐசனோவர்…. ஆவலோவா…. என்ற மெட்டுக்கு  “வேலை கொடு விஸ்வநாதா” என்று கண்ணதாசன் சொன்னபோது  “அண்ணே எஸ்டேட் ஓனர் பாலையா வயசானவர்.  தவிர முதலாளி, ரவிச்சந்திரனோ சின்ன வயசுக்காரர். அவரிடம் வேலை பார்க்கும் குமாஸ்தா. வேலை கொடுன்னு கேட்பது மரியாதைக் குறைவா இருக்குதே அண்ணே” என்று விஸ்வநாதன்  சொல்ல, “சரி, அப்படீன்னா இப்படி வைச்சிக்க… வேலை கொடு விஸ்வநாதா” என்பதற்கு பதிலாக “விஸ்வநாதன் வேலை வேணும்’ என்று போட்டுக் கொள்”  என்று சொல்லிவிட்டு  மளமளவென மற்ற வரிகளைச் சொல்ல ஆரம்பித்தார் கண்ணதாசன். அப்படி உருவான பாடல்தான் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் இடம் பெற்ற ‘விஸ்வநாதன் வேலை வேணும்’ என்ற பாடல்.

கே.பாலச்சந்தரின் ‘வறுமையின் நிறம் சிகப்பு’ படத்திலே இடம் பெற்ற ‘சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி’ என்ற பாடல் மெல்லிசை ரசிகர்கள் எல்லோரையும் கவர்ந்த ஒரு பாடல்.

அந்தப் பாடல் காட்சியில் ஸ்ரீதேவி பாடலின் சந்தத்தை  சொல்ல கமல்ஹாசன் அந்த சந்தத்திற்கான வார்த்தைகளை சொல்வதாக காட்சியை அமைத்திருந்தார் பாலச்சந்தர்.

‘வறுமையின் நிறம் சிகப்பு’ படத்தின்  பாடல் கம்போசிங்கின்போது  அந்தக் காட்சியை தான் உருவாக்கியிருந்த அதே பாணியில்தான் அந்தப் பாடல் உருவாகப் போகிறது என்பதை  பாலச்சந்தர் கனவிலும் எதிர்பார்த்திருக்க  மாட்டார்.

அந்தப் பாடல் காட்சிக்கான சூழ்நிலையை  பாலச்சந்தர் விளக்கியதும் விஸ்வநாதன் சந்தத்தை சொல்ல அடுத்த கணம் கண்ணதாசனின் வாயிலிருந்து அற்புதமான வார்த்தைகள் வந்து விழுந்தன.

“இன்னும் சரியாக சொல்வதென்றால் ரசிகர்கள் படத்திலே அந்தப் பாடல் காட்சியில் அந்த பாடலை எப்படிக் கேட்டார்களோ அதைவிட வேகமாக  நான் சந்தத்தைச்  சொல்லச் சொல்ல  கண்ணதாசன் வார்த்தைகளைச்  சொன்னார். அந்த பாடல் உருவானவிதம் பற்றி  இன்று நினைத்தாலும் என் உடம்பு சிலிர்க்கிறது…” என்று ஒரு கட்டுரையிலே குறிப்பிட்டிருக்கிறார் விஸ்வநாதன்.

கவிஞர் கண்ணதாசன் எத்தனையோ இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி இருக்கிறார். அதேபோல எம்.எஸ்.விஸ்வநாதனும், பல கவிஞர்களுடன் பணியாற்றி இருக்கிறார் என்ற போதிலும் கவிஞருக்கும், மெல்லிசை மன்னருக்கும் இருந்த உறவை ‘தெய்வீக உறவு’ என்றுதான் சொல்ல வேண்டும்.

விஸ்வநாதனை ஒரு நாள் சந்திக்கவில்லை என்றால்கூட பித்துப் பிடித்தவர் போல ஆகிவிடுவார் கண்ணதாசன். நாளில் ஒரு முறையாவது அவரை சந்தித்தே ஆக வேண்டும். அப்படி இல்லை என்றால் குறைந்தபட்சம் போனிலாவது அவரோடு பேசியாக வேண்டும்.

கண்ணதாசன்-விஸ்வநாதன் ஆகிய இருவருக்குமிடையே அவ்வளவு நெருக்கம் இருந்த போதிலும் கண்ணதாசனின் ஆசை ஒன்றை அவர் பல முறை கேட்டும் நிறைவேற்ற மறுத்துவிட்டார் விஸ்வநாதன்.

கண்ணதாசனுக்கு பாட வேண்டும் என்பது தீராத ஒரு ஆசையாக இருந்தது. இப்போதுள்ளது போல கதாநாயகர்களையும், நாயகிகளையும் பாட வைக்கும் இசை அமைப்பாளர்கள் இருந்திருந்தால் அவரது ஆசை எளிதில் நிறைவேறி இருந்திருக்கும்.

ஆனால், அப்போது இருந்த விஸ்வநாதன், கே.வி.மகாதேவன் போன்றவர்கள் எல்லாம் தங்களது நட்பைவிட தொழிலுக்கு அதிக  முக்கியத்துவம் கொடுத்ததால் கவிஞரின் ஆசை கடைசிவரையிலும்  நிறைவேறவில்லை. “ஒரு படத்தில்  எனக்கு பாட சான்ஸ் கொடுக்கக் கூடாதாடா” என்று கம்போசிங்கில் விஸ்வநாதனைப் பார்க்கும் போதெல்லாம் கேட்பார் கண்ணதாசன்.

‘பாவ மன்னிப்பு’ படத்திலே இடம் பெற்ற ‘வந்த நாள் முதல் இந்த நாள் வரை’ பாடலை எழுதி முடித்தவுடன் “இந்தப் பாட்டை நானே பாடறேனே” என்று விஸ்வநாதனிடம் முதலில் கேட்க ஆரம்பித்த கண்ணதாசன்  சிறிது நேரம் சென்றதும் “நான் பாடற மாதிரி சுலபமான ஒரு டியூனை இந்தப் பாட்டுக்கு போடு. இந்தப் பாட்டை நான்தான் பாடப் போகிறேன்” என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

“அதெல்லாம் வேண்டாம் கவிஞரே.. இப்ப தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்க  நல்ல பேரோட இருக்கீங்க. நீங்க பாடினீங்கன்னா  ஜனங்களுக்கு உங்க மேல உள்ள மரியாதை, அன்பு எல்லாம் போயிடும். அதனாலே பேசாம எழுதற வேலையை மட்டும்  பாருங்க” என்று அவரது முகத்துக்கு  நேராக சொல்லிவிட்டார் எம்.எஸ்.வி.

கண்ணதாசன் -விஸ்வநாதன் ஆகிய இருவரும் இணைந்து திரைப்பாடல்களில் மட்டுமின்றி பக்திப் பாடல்களிலும் பல சாதனைகளைப்  புரிந்துள்ளனர். 

கொலம்பியா நிறுவனத்துக்காக அவர்கள் இருவரும் இணைந்து “கிருஷ்ண கானம்” என்ற பெயரிலே பத்து  பக்திப்  பாடல்களை  உருவாக்கினார்கள். அந்த “கிருஷ்ணகானத்”தில் தன்னுடைய பாடல் வரிகளுக்கு விஸ்வநாதன் அமைத்திருந்த மெட்டுக்களைக் கேட்ட கண்ணதாசன் அந்தப் பாடல்களில் தன் மனதைப் பறி கொடுத்தார். நாளடைவில் படுக்கைக்குப் போகும் முன்னர் அந்தப் பாடல்களை ஒரு முறையாவது கேட்பது அவரது வழக்கமாகிப் போனது.

இரவு பதினோரு மணிக்கு விஸ்வநாதன் வீட்டில் போன் மணி அடித்தால் போனை எடுத்தவுடன் மறுமுனையில் யார் என்று விஸ்வநாதன் கேட்கவே மாட்டார். அது நிச்சயமாக கவிஞர் கண்ணதாசனாகத்தான் இருக்கும் என்பது அவருக்குத் தெரியும்.

“விசு, புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாட்டை கேட்டுக் கொண்டிருக்கிறேன்” என்பார் கவிஞர். அந்தப் பாடல் ‘கிருஷ்ண கான’த்தில் இடம் பெற்ற ஒரு பாட்டு.

“நீ எப்போது மேடையில் கச்சேரி பண்ணினாலும் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாட்டை முதலில் பாடி விட்டுத்தான் கச்சேரியைத் தொடங்க வேண்டும்” என்று ஒரு முறை விஸ்வநாதனிடம் கேட்டுக் கொண்டார் கவிஞர்.

அன்றிலிருந்து அந்தப் பாட்டைப் பாடாமல் ஒரு நாளும் கச்சேரியைத் தொடங்கியதில்லை விஸ்வநாதன். கண்ணதாசன் மறைவிற்குப் பிறகு அந்தப் பாடல் வரிகளை சற்று மாற்றி “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்” என்பதற்கு பதிலாக “அந்த கண்ணதாசன் புகழ் பாடுங்களேன்” என்று பாடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தார் அவர்.

கண்ணதாசன் இறந்த பிறகு விஸ்வநாதனின் கனவில் அவர்  வராத நாட்களே இல்லை. தினமும் கனவில் அவரோடு  பேசிக் கொண்டிருப்பாராம் விஸ்வநாதன். இந்தத் தகவலை அவரே ஒரு கட்டுரையில் பதிவு செய்துள்ளார்

நல்லதொரு நட்பை மரணம்கூட பிரிக்க முடியாது என்பதற்கு கவிஞரும் விஸ்வநாதனும் கொண்டிருந்த நட்புதான் சிறந்த உதாரணம்.

(தொடரும்)

The post சினிமா வரலாறு-80 – ‘சொன்னது நீதானா’ பாடல் பிறந்த கதை appeared first on Touring Talkies.

]]>
சினிமா வரலாறு-78 – கண்ணதாசன் எழுதிய பல்லவியை ஏற்க மறுத்த எம்.எஸ்.விஸ்வநாதன் https://touringtalkies.co/cinema-varalaaru-78-msv-refuses-of-kannadasans-lyrics/ Mon, 17 Jan 2022 13:57:47 +0000 https://touringtalkies.co/?p=20275 தமிழ்த் திரையுலகம் எத்தனையோ பாடலாசிரியர்களையும், இசையமைப்பாளர்களையும் சந்தித்திருந்தாலும் கண்ணதாசன் – எம்.எஸ்.விஸ்வநாதன்போல பாசத்துடன் பணியாற்றிய இரட்டையர்களை  இதுவரை சந்திக்கவில்லை என்பது நிஜம். கண்ணதாசனுக்கு ஒன்று என்றால் அப்படியே நிலை குலைந்து போவார் விஸ்வநாதன். அவர் கண்ணதாசன் மீது வைத்திருந்த பாசத்திற்கு சற்றும் குறைவில்லாத பாசத்தை விஸ்வநாதன் மிது வைத்திருந்தார் கண்ணதாசன். அந்த இருவரின் ஒற்றுமை அவர்கள் பிறந்த தேதியில் இருந்து ஆரம்பிக்கிறது. கண்ணதாசன் -விஸ்வநாதன் ஆகிய இருவருமே பிறந்தது ஒரே தேதியில். ஜூன் 24-தான் அவர்கள் இருவரும் […]

The post சினிமா வரலாறு-78 – கண்ணதாசன் எழுதிய பல்லவியை ஏற்க மறுத்த எம்.எஸ்.விஸ்வநாதன் appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரையுலகம் எத்தனையோ பாடலாசிரியர்களையும், இசையமைப்பாளர்களையும் சந்தித்திருந்தாலும் கண்ணதாசன் – எம்.எஸ்.விஸ்வநாதன்போல பாசத்துடன் பணியாற்றிய இரட்டையர்களை  இதுவரை சந்திக்கவில்லை என்பது நிஜம்.

கண்ணதாசனுக்கு ஒன்று என்றால் அப்படியே நிலை குலைந்து போவார் விஸ்வநாதன். அவர் கண்ணதாசன் மீது வைத்திருந்த பாசத்திற்கு சற்றும் குறைவில்லாத பாசத்தை விஸ்வநாதன் மிது வைத்திருந்தார் கண்ணதாசன்.

அந்த இருவரின் ஒற்றுமை அவர்கள் பிறந்த தேதியில் இருந்து ஆரம்பிக்கிறது. கண்ணதாசன் -விஸ்வநாதன் ஆகிய இருவருமே பிறந்தது ஒரே தேதியில். ஜூன் 24-தான் அவர்கள் இருவரும் பிறந்த தினம்.

1927-ம் ஆண்டு கண்ணதாசன் பிறக்க,  அதற்கு ஒரு வருடம் தள்ளி 1928-ம் ஆண்டு எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தார்.

சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்த பாலும் பழமும்’ படத்தில இடம் பெற்றிருந்த  நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்’ என்று தொடங்கும் பாடலை  எழுதிய கவிஞர் கண்ணதாசன், அந்தப் பாடலுக்கு இசையமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகிய இருவருமே அந்த வரிகளுக்கு உதாரணமாக வாழ்ந்தவர்கள். அப்படி அன்போடும் பாசத்தோடும் வாழ்ந்த  அவர்களுடைய முதல் சந்திப்பு மோதலில்தான் ஆரம்பித்தது.

அப்போது  ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில்  இசை உதவியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன் . எந்த இசையமைப்பாளர் இசையமைத்தாலும்  அந்த மெட்டை கவிஞர்களிடம் வாசித்துக் காட்டி  அந்த மெட்டுக்குரிய பாடலை அவர்களிடம் எழுதி வாங்குகின்ற வேலை அவருடையதாக இருந்தது.

ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த  கன்னியின் காதலி’ என்ற படத்திலதான்  கண்ணதாசன் பாடலாசிரியராக அறிமுகமானார். அந்தப் படத்துக்காக கண்ணதாசன் எழுதிய  முதல் இரண்டு பாடல்களுக்கும் அவர் பாடல்களை எழுதிய பிறகே  எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைத்தார். ஆகவே அவரைச்  சந்திக்கக் கூடிய வாய்ப்பு விஸ்வநாதனுக்குக் கிடைக்கவில்லை. அந்தப் படத்தில் இடம் பெற்ற  மூன்றாவது பாட்டுதான் அவர்களுடைய முதல் சந்திப்பிற்கு வழி வகுத்தது.

பாடலுக்கான மெட்டை விஸ்வநாதன் வாசித்துக் காண்பித்தவுடன் “காரணம் தெரியாமல் உள்ளம் களி கொண்டு கூத்தாடுதே” என்று அந்தப் பாடலுக்கான பல்லவியை எழுதி விஸ்வநாதனிடம் கொடுத்தார் கண்ணதாசன்.  

எம்.எஸ்.விஸ்வநாதன் வாசித்துக் காட்டிய மெட்டுக்கு அந்தப்  பாடல் வரிகள் மிகச்   சரியாக பொருந்தி  இருந்தாலும் அந்தப் பல்லவியில் இடம் பெற்றிருந்த களி’, ‘கூத்து’ போன்ற வார்த்தைகள் விஸ்வநாதனுக்குப் பிடிக்கவில்லை.

“அது என்ன ‘களி’, ‘கூத்து’? அதெல்லாம் சரியாக இல்லை. மாற்றி எழுதிக் கொடுங்கள்” என்று எம்.எஸ்.விஸ்வநாதன் சொன்னபோது அவரைப் பார்த்து கண்ணதாசன் முறைத்த முறைப்பில் விஸ்வநாதன் எரிந்து போகாமல் இருந்தது அதிசயம்தான் . அந்த அளவு கோபத்தோடு அவரைப் பார்த்து முறைத்தார் அவர். “நீயெல்லாம்  எப்படி பாட்டை எழுதவேண்டுமென்று எனக்கு சொல்லித் தருகிறாயா?” என்ற கேள்வியும்  அந்த முறைப்புக்குள்  இருந்தது.

அப்போது விஸ்வநாதன் இருபத்தியோரு வயது இளைஞர். ஆகவே கண்ணதாசனின் முறைப்புக்கெல்லாம் அவர் கொஞ்சம் கூட  அசரவில்லை. அந்த நேரம் பார்த்து அங்கே வந்தார் ஜுபிடர் பிக்சர்சில் ஆஸ்தான கவிஞராக இருந்த உடுமலை நாராயணகவி.

“என்னடா பல்லவியை எழுதிட்டானா?” என்று விஸ்வநாதனைப் பார்த்து கேட்ட அவர்  “எங்கே பல்லவியைப் படி பார்க்கலாம்” என்றார். “காரணம் தெரியாமல் உள்ளம் களி கொண்டு கூத்தாடுதே” என்று கண்ணதாசன் எழுதியிருந்த பல்லவியை விஸ்வநாதன் படித்துக் காட்டிய உடன் “என்னடா இது களி’, ‘கூத்து’ன்னு? இந்த வார்த்தைகள் எல்லாம் இவனுக்கு ஒத்து வராதே” என்று கண்ணதாசனைப் பார்த்து சொன்ன அவர் “சரி சரி அதை மாத்தி எழுதிக் கொடுத்து விடு” என்று கண்ணதாசனிடம்  சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அவர் மேல் உள்ளுக்குள் ஆத்திரம் இருந்தாலும் கண்ணதாசனால் அதை வெளியே காட்ட முடியவில்லை. அதற்கிடையில் சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்தப் பக்கம்  வந்த உடுமலை நாராயணகவி  “என்னடா மாத்தி எழுதி கொடுத்தானா இல்லையா?” என்று விஸ்வநாதனிடம்  கேட்டார்

“இன்னும் எழுதித் தரவில்லை” என்று அவர் பதில் சொன்னதும் “சரி இப்படி மாத்திக்கோ” என்று சொல்லி விட்டு “காரணம் தெரியாமல் உள்ளம் களி கொண்டு கூத்தாடுதே” என்பதற்கு பதிலாக “காரணம் தெரியாமல் உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதேன்னு போட்டுப் பார்” என்றார் அவர்.

அவர் சொன்ன வார்த்தைகளை அந்த மெட்டுக்குள் பொருத்திப் பார்த்த விஸ்வநாதன் “ரொம்ப சரியாக  இருக்கு” என்றார். உடுமலை நாராயண கவி எந்த அளவிற்கு பண்பாளர் என்பதற்கு அடையாளம்  அடுத்து  அவர் கண்ணதாசனைப் பார்த்து சொன்ன வார்த்தைகள்தான். 

“காரணம் தெரியாமல் உள்ளம் களி கொண்டு கூத்தாடுதே” என்ற வார்த்தைகள்தான் கவிதை நயமிக்க அழகான வார்த்தைகள் என்பதெல்லாம் இந்த மடையன் விஸ்வநாதனுக்கு புரியாது. அவனை மாதிரி இருக்கிற மடையங்களுக்குத்தானே இந்தப் பாட்டு. அதனால அவங்களுக்குப் புரியணும்கிறதுக்காகத்தான் அதை மாத்தி கேட்கிறான் அவன்” என்று கண்ணதாசனிடம் கூறினார் அவர்.

அதற்குப் பிறகு பல படங்களில் இணைந்து கண்ணதாசனும், விஸ்வநாதனும் இணைந்து பணியாற்றினாலும் அவர்களது நட்பிலே நெருக்கம் உண்டானது மகாதேவி’ படத்தில பணியாற்றியபோதுதான்.

அந்தப் படத்திற்குப் பிறகுதான்  கண்ணதாசனை கவிஞரே’ என்று விஸ்வநாதனும் ‘விசு’ என்று விஸ்வநாதனை கண்ணதாசனும் அழைக்கத் தொடங்கினார்கள். அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியபோது நிகழ்ந்த சுவையான சம்பவங்களை தனி புத்தகமாகவே எழுதலாம்.

கண்ணதாசனுக்கும், விஸ்வநாதனுக்கும் இருந்த உறவு ஒரு பாடலாசிரியர்-இசையமைப்பாளர் என்பதை தாண்டிய ஒரு உறவு. அப்படி கண்ணதாசன்  மீது நேசம் கொண்டிருந்த  விஸ்வநாதன்தான் கவிஞர் வாலியின் வளர்ச்சிக்கும் காரணமாக இருந்திருக்கிறார் என்பதைப் பார்க்கும் போது நட்பு,தொழில் ஆகிய இரண்டையும் எவ்வளவு அழகாக அவர் கையாண்டிருக்கிறார் என்று  வியப்பு கொள்ளாமல் யாராலும் இருக்க முடியாது.

கண்ணதாசன்  அறிமுகமானதில் இருந்தே பல படங்களில் பாட்டு எழுத அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருந்தாலும் அந்தப் படங்களில் எல்லாம் மெட்டுக்கு பாட்டு எழுதும் சூழ்நிலையே இருந்தது.  தனது பாட்டுச் சுதந்திரத்தை அந்த மெட்டுகள் பறிப்பதாக  எண்ணினார் கவிஞர்.

ஒரு நாள் திடீரென்று விஸ்வநாதனை அழைத்த அவர் “டேய் நான் ஒரு படம் எடுக்கப் போகிறேன். அதில் மொத்தம் பத்துப் பாட்டுக்கள். அந்த பத்துப் பாடல்களையும் நான் முதலில் எழுதிக் கொடுத்துவிடுவேன். அந்த வரிகளுக்குத்தான் நீ மெட்டுப் போட வேண்டும் என்ன சரியா? இடையில இந்த பாட்டுக்கு மட்டும்நான் முதல்ல மெட்டுப் போட்டு விடுகிறேன் என்றெல்லாம் சொல்லக் கூடாது…” என்றார் கண்ணதாசன்.

விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகிய இருவரும்  அதற்கு ஒப்புக் கொண்டனர். அப்படி உருவாகிய படம்தான் மாலையிட்ட மங்கை’. டி.ஆர்.மகாலிங்கத்துக்கு மறு வாழ்வு தந்த அந்தப் படத்தில் எல்லா பாடல்களுமே அவ்வளவு இனிமையாக அமைந்திருந்தன. “அந்தப் படம் வந்த பிறகுதான் என்னுடைய தொழிலில் இருந்த மந்த நிலைமை மாறி வெகு வேகமான முன்னேற்றம் பிறந்தது” என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

‘மாலையிட்ட மங்கை’ படம் வெளியான அன்று  பயத்துடன்தான் நான் ‘பாரகன்’ தியேட்டருக்குப் போனேன். டைட்டில் காட்டும்போதே மகாலிங்கத்தின் கம்பீரமான குரல் ‘எங்கள் திராவிடப் பொன்னாடே’ என்று முழங்கியது.படத்தைப் பார்க்க   பெருவாரியாக வந்திருந்த கழகத் தோழர்கள் அனைவரும் பலமாக கை தட்டினார்கள். மகாலிங்கத்திடம் அவர்களுக்குப் பிரியம் வந்துவிட்டது. படத்தையும் பிரமாதமாக அவர்கள் ரசித்தார்கள் படமும் நன்றாக ஓடியது…” என்று குறிப்பிட்டுள்ளார் கண்ணதாசன்.

கண்ணதாசனும், விஸ்வநாதனும் பாடல் ஒத்திகைக்காக அமர்ந்துவிட்டால் அந்த இடமே கலகலப்பாகிவிடும். ஒருவரையொருவர் அந்த அளவிற்கு கிண்டல் செய்து கொள்வார்கள்.

கண்ணதாசன் எழுதிய பல பாடல்கள் சூழ்நிலைக்கு ஏற்ற பாடல்களாக அமைந்ததை விஸ்வநாதன் பல கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார்.அதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது? எந்த பாடலாசிரியராக இருந்தாலும் சூழ்நிலைக்கு ஏற்பதானே எழுதுவார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். சூழ்நிலை என்றால் படத்தின் சூழ்நிலை அல்ல – பாடல் எழுதும்போது கண்ணதாசன் எந்த சூழ்நிலையில் இருந்தாரோ அது அவரது பல பாடல்களில் எதிரொலித்திருக்கிறது.

The post சினிமா வரலாறு-78 – கண்ணதாசன் எழுதிய பல்லவியை ஏற்க மறுத்த எம்.எஸ்.விஸ்வநாதன் appeared first on Touring Talkies.

]]>
சினிமா வரலாறு-77-வி.என்.ஜானகிக்காக கூண்டில் ஏறி சாட்சி சொன்ன எஸ்.எஸ்.வாசன் https://touringtalkies.co/cinema-history-77-ss-vasan-who-witnessed-the-imprisonment-for-vn-janaki/ Tue, 30 Nov 2021 13:34:03 +0000 https://touringtalkies.co/?p=19659 ‘மருத நாட்டு இளவரசி’ படம் முடிவடையாததால் ஜானகியிடம் அந்தப்   படத்தின் கால்ஷீட்டைப் பற்றி பேச படத் தயாரிப்பாளர்  முத்துசாமி  அவரது வீட்டுக்குச் சென்ற போது ”என்ன எம்.ஜி.ஆருக்காக  தூது வந்திருக்கிறீர்களா?” என்று அவரைப் பார்த்து ஜானகியின் மாமா கேட்க “எங்களுடைய “மருத நாட்டு இளவரசி” படத்தில் நடிக்கும் ஜானகியைப் பார்த்து ஷூட்டிங்கிற்கு கால்ஷீட் வாங்க வந்திருக்கிறேன்” என்று சற்று கோபத்தோடு பதில் சொன்னார் முத்துசாமி. அவருடைய அந்தப் பதிலால் ஆத்திரமடைந்த ஜானகியின் மாமா, ”இது என் வீடு. […]

The post சினிமா வரலாறு-77-வி.என்.ஜானகிக்காக கூண்டில் ஏறி சாட்சி சொன்ன எஸ்.எஸ்.வாசன் appeared first on Touring Talkies.

]]>
‘மருத நாட்டு இளவரசி’ படம் முடிவடையாததால் ஜானகியிடம் அந்தப்   படத்தின் கால்ஷீட்டைப் பற்றி பேச படத் தயாரிப்பாளர்  முத்துசாமி  அவரது வீட்டுக்குச் சென்ற போது ”என்ன எம்.ஜி.ஆருக்காக  தூது வந்திருக்கிறீர்களா?” என்று அவரைப் பார்த்து ஜானகியின் மாமா கேட்க “எங்களுடைய “மருத நாட்டு இளவரசி” படத்தில் நடிக்கும் ஜானகியைப் பார்த்து ஷூட்டிங்கிற்கு கால்ஷீட் வாங்க வந்திருக்கிறேன்” என்று சற்று கோபத்தோடு பதில் சொன்னார் முத்துசாமி.

அவருடைய அந்தப் பதிலால் ஆத்திரமடைந்த ஜானகியின் மாமா, ”இது என் வீடு. என்னுடைய அனுமதியின்றி இங்கு இருப்பவர்களுடன் பேச முடியாது” என்று சொல்ல அவருடைய பதிலால் கோபத்தின் உச்சிக்குப் போன  முத்துசாமி, ஜானகி அவருக்கு அனுப்பியிருந்த தந்தியை  ஜானகியின் மாமா  முகத்துக்கு எதிராக  நீட்டினார்.

“இந்தத்  தந்தி எங்கள் படத்தில் நடிக்கும் நடிகை இந்த விலாசத்திலிருந்து எங்களுக்கு அனுப்பியது. அவருடன் நான் பேச நீங்கள் தடை விதித்தால்  எனது வக்கீல் மூலம் எப்படி அவரது கால்ஷீட்டை வாங்கி படத்தை முடிப்பது என்று எனக்குத் தெரியும்” என்று முத்துசாமி  சொன்னவுடன்  ஜானகியின் மாமா உடனே கீழே  இறங்கி வந்தது மட்டுமின்றி, ”சும்மா விளையாட்டாக நான் ஏதோ சொன்னால் அதற்குப் போய் இப்படி கோபப்படுகிறீர்களே” என்று அவரிடம் சொல்லிவிட்டு, ஜானகியை அழைத்து அந்தப் படத்திற்கான கால்ஷீட் தேதிகளை எல்லாம் குறித்து கொடுக்கச் சொன்னார்.

ஜானகி எழுதி கொடுத்த  கால்ஷீட் தேதிகளை வாங்கிக் கொண்டு  எம்.ஜி.ஆரை சந்திக்க வந்த முத்துசாமி ஜானகி விட்டில் நடந்தது அனைத்தையும் எம்ஜிஆரிடம் அப்படியே சொன்னார்.

கால்ஷீட்டுகளை ஜானகியே எழுதிக் கொடுத்தார் என்று முத்துசாமி சொன்னதிலிருந்து  தனது படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி தானே தீர்மானித்துக் கொள்ளும் உரிமையை ஜானகி பெற்றிருப்பதை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆர் மகிழ்ச்சி அடைந்தார்.

அதைத் தொடர்ந்து மீண்டும் “மருத நாட்டு இளவரசி” படத்தின் படப்படிப்பு  மைசூரில் தொடங்கியது.  அந்த முறை ஜானகியுடன் அவரது மாமா வரவில்லை. அதற்குப் பதிலாக ஜானகியின் தந்தையான ராஜகோபால அய்யர்  வந்திருந்தார்

இனி படப்பிடிப்பின் நடுவே ஜானகியுடன் பேச தனக்கு எந்தத் தடையும் இருக்காது என்று எம்.ஜி.ஆர். நம்பினார்.ஆனால் படப்படிப்பு தளத்தில் அந்த படத்தின் வசனங்களை மீறி எம்.ஜி.ஆரிடம் ஒரு வார்த்தைகூட ஜானகி பேசவில்லை. அவருடைய அந்த நடவடிக்கை எம்ஜிஆருக்கு புதிராக இருந்தது. மறுநாள் எம்.ஜி.ஆருக்கு ஜானகியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.

எம்.ஜி.ஆரைப் பற்றியும், தன்னைப் பற்றியும் தனது தந்தையிடம் தப்புத் தப்பாக அவரது மாமா சொல்லியிருப்பதாகவும், அது உண்மை என்று தனது தந்தை நம்பிவிடக் கூடாது என்பதால்தான் தான் ஒரு வார்த்தைகூட எம்.ஜி.ஆருடன் பேசாமல் தவிர்த்துவிட்டதாகவும் அந்தக் கடிதத்தின் மூலம் எம்.ஜி.ஆருக்கு தெளிவுபடுத்தியிருந்தார் ஜானகி.

இதற்கிடையில் ஜானகியை பத்து ஆண்டுகளுக்கு தான் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும்,தனது அனுமதியின்றி அவர் எந்த புதிய படத்தையும் ஒப்புக் கொள்ளக் கூடாது என்றும், மருத நாட்டு இளவரசி’ படத்தை முடிப்பதற்கான கால்ஷீட்டுகளைக்கூட அதன் தயாரிப்பாளர்கள் தன்னிடம்தான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஒரு கடிதத்தை எழுதி அதை பதிவுத் தபாலில் அனுப்பியிருந்தார் ஜானகியின் மாமா.

புதிதாக இரண்டு படங்களில் ஜானகி நடிக்க தான்  ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், அந்த படங்களில் நடிக்கவில்லை என்றால் அதற்கான நஷ்ட ஈட்டினை ஜானகி தர வேண்டும் என்ற மிரட்டலான வாசகங்களும் அந்த கடிதத்தில் இடம் பெற்றிருந்ததைப் பார்த்ததும் கலக்கத்தில் ஆழ்ந்த எம்.ஜி.ஆர். அந்த ஒப்பந்தம் பற்றி ஜானகியிடம் கேட்டபோது “அப்படி எந்த  ஒரு ஒப்பந்தத்திலும் நான் கையெழுத்து போடவில்லை” என்று அவரிடம் சொன்னார் ஜானகி.

மிகப் பெரிய குழப்பத்துடன் எம்.ஜி.ஆர் தனது வக்கீலை சந்தித்தபோது  அந்தக்  கடிதத்தை ஒரு முறைக்கு, இரு முறை படித்துப் பார்த்த அந்த வக்கீல்  அந்த வழக்கை சென்னையில்தான் நடத்த வேண்டும் என்றும் சென்னையில் நல்ல ஒரு வழக்கறிஞர் துணையுடன் வழக்கை நடத்துமாறும் எம். ஜி.ஆரிடம் சொன்னார்.

மருத நாட்டு இளவரசி’ படத்தின் படப்பிடிப்பு  முடிந்ததும் தனது தந்தையுடன் மெட்ராசிற்கு சென்ற ஜானகி இந்த முறை தனது மந்தவெளி வீட்டிலே  தங்காமல் இயக்குர் கே.சுப்ரமணியம் அவர்களின் மனைவியான எஸ்.டி.சுப்புலட்சுமி  வீட்டில்  தங்கினார்.

கே.சுப்ரமணியத்தைப்  பொறுத்தவரை ஜானகியை முதன்முதலாக திரையிலே அறிமுகப்படுத்தியவர் என்பதற்கு அப்பாற்பட்டு தனது மகளைப் போல அவரைப் பாவித்து அன்பு செலுத்தியவர் அவர். ஆகவே  தன்னுடைய  பிரச்னைகள் எல்லாவற்றையும் அவரிடம் எடுத்துச் சொன்னார் ஜானகி.

ஜானகி சொன்ன எல்லாற்றையும் கேட்ட பின்னர் ”இந்த பிரச்னை குறித்து நீ வழக்கு தொடர்ந்தால் உன்னுடைய மாமாவுக்கு சிறை தண்டனைகூட கிடைக்கலாம். அதற்குப் பின்னர் அவர் உன்னிடம் வந்து கண்ணீர் விட்டு அழ, நீ அவருக்காக மனமிரங்கி  வழக்கை  வாபஸ் பெற்றுக் கொள்ளும் முடிவுக்கு வந்தாய் என்றால் எல்லாம் தலைகீழ் ஆகிவிடும். அது மட்டுமில்லாமல்  உனக்கு உதவி செய்த பலருக்கும் சட்ட ரீதியாக பல தொல்லைகள் ஏற்படவும்  வாய்ப்பிருக்கிறது. அதனால்  நீ உறுதியாக இருப்பதாக இருந்தால் சொல். வழக்கைத் தொடரலாம்” என்று ஜானகியை எச்சரித்தார்.

அவர் சொன்னதை ஜானகி ஏற்றுக் கொண்டவுடன் அவருக்காக ஒரு பெரிய வக்கீலை அவர் ஏற்பாடு செய்து தந்தார்.

“முதலில் ஜானகியின் மாமாவிடம் நான் பேசிப் பார்க்கிறேன். அவர் எதற்கும் ஒத்துவராவிட்டால் அதற்குப் பிறகு வழக்கு தொடர்வதைப் பற்றி  யோசிக்கலாம்” என்று சொல்லிவிட்டு   ஜானகியின் மாமாவை வரவழைத்துப் பேசினார் அந்த வக்கீல்.

ஜானகியின் மாமாவோடு பேசியபோதுதான்  அவரது சுயரூபம் என்னவென்று அந்த வக்கீலுக்குப்  புரிந்தது. எம்.ஜி.ஆரையும், ஜானகியையும் பழி வாங்குவதையே முக்கிய குறிக்கோளாக அவர் வைத்திருப்பது தெரிந்ததும் வேறு வழியின்றி அவர் மீது வழக்குத் தொடர்ந்தார் அந்த வக்கீல்.

இதற்கிடையில் ஜெமினி அதிபரான எஸ்.எஸ்.வாசனுக்கு ஜானகியின் மாமாவைத் தெரியும் என்பதால் அவரிடம் சொல்லி தனது மாமாவிற்கு அறிவுரை கூறச் சொல்லலாம் என்ற எண்ணத்தில்  எஸ்.எஸ்.வாசனை சந்தித்த ஜானகி தன்னுடைய வாழ்க்கைப் பிரச்னையைப் பற்றி அவருக்கு விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

“இன்னொருவரை திருமணம் செய்து கொள்வது உனது சொந்த விஷயம். ஆகவே அது சரியா, தவறா என்றெல்லாம் நான் கருத்து சொல்லத் தயாராக இல்லை. ஆனால் ஒரு பெண்ணை ஏமாற்றி அவளுடைய பணத்தை அபகரிப்பது மிகப் பெரிய சமூகக் குற்றம். அதைத் தடுக்க வேண்டிய கடமை எல்லோருக்கும் இருக்கிறது. ஆகவே நான் உனது மாமாவை அழைத்து அவருக்கு நான் சொல்லக் கூடிய புத்திமதியை சொல்கிறேன்..” என்று ஜானகிக்கு உறுதியளித்த வாசன் அடுத்த நாளே ஜானகியின் மாமாவை வரச் சொன்னார்.

“ஜானகியின் பணத்தில் ஒரு காசுகூட எனக்கு வேண்டாம். ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றும் ஜானகியின் உறவினரிடம் ஜானகியின் மொத்த பணத்தையும், நான் தந்து விடுகிறேன். ராமச்சந்திரனைப் பொறுத்தவரை அவர் பணத்துக்காகத்தான் ஜானகியை காதலிப்பது போல நடிக்கிறார்.ஜானகியிடம் பணம் இல்லை என்றால் அவர் பக்கம் ராமச்சந்திரன் திரும்பவே மாட்டார்” என்று வாசனிடம் கூறினார்  ஜானகியின் மாமா.

அதற்குப் பிறகு ஜானகியை சந்தித்த வாசன்  எதிர்காலத்தைப் பற்றி நன்கு சிந்தித்து அதற்குப் பின் ஒரு முடிவை மேற்கொள்ளும்படி ஜானகிக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

ஜானகியின் மாமா  எந்த அளவு நாணயமில்லாதவர் என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்தால்தான் ஜானகியோடு அவர் போட்டுக் கொண்டதாக சொல்லப்பட்ட ஒப்பந்தம் போலியானது என்பதை அந்த நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும் என்ற சூழ்நிலை ஒரு காலக்கட்டத்தில் உருவானது.

இதற்கிடையில் ஜானகியின் பணத்தை ஜெமினி ஸ்டுடியோவிலே பணியாற்றிக் கொண்டிருந்த அவரது  உறவினரிடம் கொடுத்து விடுவதாகச் சொன்ன ஜானகியின் மாமா கொடுப்பது போல கொடுத்துவிட்டு அந்தப் பணத்தை திரும்பவும் வாங்கிச் சென்றுவிட்டிருந்தார்.

“அந்த   விஷயத்தை  நீதிமன்றத்தில் தக்க சாட்சியங்களோடு நிரூபித்தால் அது நிச்சயமாக ஜானகிக்கு சாதகமாக அமையும். ஆனால், அதை நிரூபிக்க வேண்டுமென்றால் ஜெமினி ஸ்டூடியோஸ் அதிபரான எஸ்.எஸ்.வாசன் அவர்கள்  கூண்டிலேறி சாட்சி சொல்லியாக வேண்டும்” என்றார் ஜானகியின் வக்கீல்.

ஒரு நடிகையின் சொந்த பிரச்னைக்காக அவ்வளவு பெரிய ஸ்டுடியோவின் அதிபர்  நீதிமன்றத்துக்கு வந்து சாட்சி சொல்வாரா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தபோதிலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் “நீங்கள் நீதிமன்றத்துக்கு நேரில்  வந்து சாட்சி சொல்ல  முடியுமா?” என்று எஸ்.எஸ்.வாசனை  நேரில் பார்த்து கேட்பதற்காக ஜானகியும், அவரது தந்தையும் ஜெமினி ஸ்டுடியோவிற்கு சென்றனர்.

அவர்கள் சொன்னதைக் கேட்ட அடுத்த நிமிடமே “நான் தாராளமாக வரத் தயார்” என்றார் எஸ்.எஸ்.வாசன். அவர் அப்படிச்  சொல்வார் என்று ஜானகியோ அவரது தந்தையோ கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவர் தாராளமாக வருகிறேன் என்று சொல்லிவிட்டாலும் நீதிமன்றத்துக்கு வந்தால் அவர் எப்படிப்பட்ட பிரச்னைகளை எல்லாம் சந்திக்க வேண்டி வரும் இருக்கும் என்பதை அவருக்குச் சொல்வது  தனது தார்மீகக் கடமை என்றெண்ணிய ராஜகோபால் அய்யர் அவைகளையெல்லாம் முழுமையாக அவருக்கு எடுத்துச் சொன்னார்.

“ஜானகியை கூண்டிலே நிற்க வைத்து மிகவும்  கேவலமான கேள்விகளை எல்லாம் அவரைப் பார்த்து கேட்டார்கள். நீங்கள் நீதிமன்றத்துக்கு வரும்போது அப்படிப்பட்ட கேள்விகளை அவர்கள் உங்களைப் பார்த்தும் கேட்கலாம். அதனால் நீங்கள் நீதிமன்றத்துக்கு வருவது பற்றி  ஒரு முறைக்கு, இரு முறை யோசித்து முடிவெடுங்கள்” என்று அவரிடம் சொன்னார் ஜானகியின் தந்தை.

“ஜானகியின் பணத்தை அவரது மாமா மிகவும் தந்திரமாக அபகரித்திருக்கிறார்.   அதை நான் நீதிமன்றத்தில் சொல்லாமல் வேறு எங்கு சொல்ல முடியும்?” என்று ஜானகியின் தந்தையைப் பார்த்து கேட்ட எஸ்.எஸ்.வாசன் “தங்களுடைய தவறுகளை மறைப்பதற்காக குற்றவாளிகள் சில தந்திரங்களை செய்யத்தான் செய்வார்கள். அதற்கெல்லாம் பயந்தால் ஆகுமா?” என்று  கேட்டது மட்டுமின்றி தைரியமாக நீதிமன்றத்திற்கு வந்து, கூண்டில் ஏறி ஜானகிக்கு ஆதரவாக தனது சாட்சியத்தைப் பதிவு செய்தார்.

அந்த வழக்கில் ஜானகிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததற்கும் அதைத் தொடர்ந்து ஜானகி எம்.ஜி.ஆரை திருமணம் செய்ததற்கும் எஸ்.எஸ். வாசனின் அந்த சாட்சியே காரணமாக  அமைந்தது.

(தொடரும்)

The post சினிமா வரலாறு-77-வி.என்.ஜானகிக்காக கூண்டில் ஏறி சாட்சி சொன்ன எஸ்.எஸ்.வாசன் appeared first on Touring Talkies.

]]>
சினிமா வரலாறு-76 சினிமா தியேட்டரிலிருந்து வி.என்.ஜானகியைக் கடத்திய அவரது மாமா https://touringtalkies.co/cinema-varalaaru-76-v-n-janaki-kidnapped-by-her-uncle-from-cinema-theatre/ Tue, 23 Nov 2021 13:18:33 +0000 https://touringtalkies.co/?p=19559 எம்.ஜி.ஆரிடமிருந்து வந்த கடிதத்தை  ஒரு முறைக்கு இரண்டு முறை படித்த ஜானகி,  “இன்னும் இரண்டு  மாதங்களில் பலதார தடைச் சட்டம் வரப் போவதாக அவர் எழுதியிருக்கிறாரே. அப்படி ஒரு சட்டம் வரப் போவது பற்றி உங்களுக்குத் தெரியுமா?” என்று தனது மாமாவிடம் கேட்டார் . “எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது” என்று அலட்சியமாக பதிலளித்தார் அவர். அப்படி அவர் பதிலளித்தவுடன்  “இனிமேல் நீங்கள் என்னை  நேரிலேயே சந்தித்துப் பேசலாம். நமது திருமணம் சட்டபூர்வமான திருமணமாக இருக்க […]

The post சினிமா வரலாறு-76 சினிமா தியேட்டரிலிருந்து வி.என்.ஜானகியைக் கடத்திய அவரது மாமா appeared first on Touring Talkies.

]]>
எம்.ஜி.ஆரிடமிருந்து வந்த கடிதத்தை  ஒரு முறைக்கு இரண்டு முறை படித்த ஜானகி,  “இன்னும் இரண்டு  மாதங்களில் பலதார தடைச் சட்டம் வரப் போவதாக அவர் எழுதியிருக்கிறாரே. அப்படி ஒரு சட்டம் வரப் போவது பற்றி உங்களுக்குத் தெரியுமா?” என்று தனது மாமாவிடம் கேட்டார் .

“எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது” என்று அலட்சியமாக பதிலளித்தார் அவர். அப்படி அவர் பதிலளித்தவுடன்  “இனிமேல் நீங்கள் என்னை  நேரிலேயே சந்தித்துப் பேசலாம். நமது திருமணம் சட்டபூர்வமான திருமணமாக இருக்க வேண்டும். ஆகவே உடனடியாக பெரிய வக்கீல் ஒருவரைப் பார்த்து பேசுங்கள்” என்று ஒரு கடிதம் எழுதி எம்.ஜி.ஆருக்கு அனுப்பி வைத்தார் ஜானகி.

ஜானகி கேட்டுக் கொண்டபடி வக்கீல் ஒருவரை சந்தித்த எம்.ஜி.ஆர். தன்னுடைய பிரச்னையை அவரிடம்  விளக்கமாகச்  சொன்னவுடன்  “இனி உங்களது சம்மதம் இல்லாமல் எந்த கடிதத்திலும் கையெழுத்து போட வேண்டாம் என்று அவருக்கு சொல்லுங்கள்…” என்றார்  வக்கீல்.

ஏற்கனவே பல காகிதங்களில் ஜானகியிடம் அவரது மாமா கையெழுத்து வாங்கி வைத்து இருக்கின்ற  விஷயத்தை எம்.ஜி.ஆர் அந்த வக்கீலிடம் சொன்னதும் சிரித்த அவர்  “ஜானகிக்கு ஆங்கிலம் தெரியுமா?’ என்று எம்ஜிஆரிடம் கேட்டார். ”தெரியாது” என்று எம்.ஜி.ஆர் சொன்னவுடன் ”அப்படிஎன்றால் பயப்படத் தேவையில்லை. ஆனால், இனிமேல் எச்சரிக்கையாக இருக்கச் சொல்லுங்கள்” என்றார்.

இந்தச் சம்பவம் நடந்த சில  நாட்களுக்குப் பிறகு ஜானகியிடமிருந்து எம்.ஜி.ஆருக்கு வந்த கடிதத்தின் உள்ளே இன்னொரு கடிதம் இருந்தது. அந்தக் கடிதம் ஜானகி கணக்கு வைத்துக் கொண்டிருந்த வங்கியிலிருந்து அவருக்கு அனுப்பபட்ட கடிதம்.

“உங்களது கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டிருந்தபடி உங்களது கணக்கில் இருந்த பணத்தை இன்னொருவர் பெயருக்கு மாற்றியாகி விட்டது” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததைப் பார்த்தவுடன் அதிர்ச்சியான எம்.ஜி.ஆர். அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு வக்கீலிடம் ஓடினார்.

அந்தக் கடிதத்தைப் பொறுமையாகப் படித்த வக்கீல் ”இது மோசடி வழக்கு. இந்த குற்றத்துக்கு  அவரது மாமா மீது கிரிமினல் வழக்கு தொடரலாம். ஆனால் இதன் மேல் எந்த மேல் நடவடிக்கையையும் எடுப்பதற்கு முன்னாலே ஜானகியைப் பார்த்து சில விவரங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் வழக்குத் தொடர்ந்த பிறகு ஜானகி அவரது மாமாவின் பக்கம் சேர்ந்து கொண்டார் என்றால், நாம் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும்” என்றார்.

அந்த நிலையில் தமிழ் வருட பிறப்பிற்கு முதல் நாள் காலையில் ஜானகியிடமிருந்து எம்.ஜி.ஆருக்கு  மீண்டும் ஒரு கடிதம் வந்தது. அன்று மாலையில்  நாகரத்தினம், மற்றும் அவருடைய தாயார் ஆகிய இருவரோடும் தான் “மாயக் குதிரை” படம் பார்க்க தியேட்டருக்கு போகப் போவதாக அதில் எழுதியிருந்தார் ஜானகி.

வருட பிறப்பு அன்று தான் கட்டிக் கொள்ள மாமா புதுப் புடவை எடுத்து வைத்திருப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த ஜானகி முன்பு போல அவர் தன்னிடம் அவர்  கண்டிப்பாக இருப்பது இல்லை என்றும், தான் தொடர்ந்து  கடிதம்  எழுதுவதுகூட அவருக்குத் தெரியும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

எத்தனை நாட்கள்தான் ஜானகியும்  வீட்டிலேயே அடைந்து கொண்டிருப்பார் என்று எண்ணிய எம்.ஜி.ஆர். சினிமாவிற்கு போய் வரும்படி அந்த வேலைக்காரப் பையன் மூலமே ஜானகிக்கு செய்தி அனுப்பினார். ஆனால், அதே சமயம் அவர்கள் சினிமாவிற்குப் போனபோது அவர்களைப் பின் தொடர வேலைக்காரப் பையனை அனுப்பி வைக்க அவர் தவறவில்லை. அவர் உள் மனதிற்குள் இருந்த ஏதோ உறுத்தல்தான் ஜானகியைத் தொடர்ந்து அந்தப் பையனை அனுப்பும்படி அவருக்குச்  சொன்னது. அவரது அந்த உறுத்தல் நியாயமானதுதான் என்பதை அடுத்து நடந்த சம்பவங்கள் உறுதி செய்தன.  

இரவு எம்.ஜி.ஆர் வெளியே சென்றுவிட்டுத் திரும்பியபோது “படம் பாதி முடிவடைவதற்கு முன்னாலேயே  காரில் ஏறிக் கொண்டு அவர்கள் அனைவரும் சென்றுவிட்டார்கள்” என்று சொன்ன அந்த பையன் அத்துடன் நிற்காமல் அந்தக் கார் அவர்களுடைய வீட்டுக்குப் போகவில்லை என்றும் வெளியூர் செல்லும் பாதையில் வேகமாகச் சென்றுவிட்டதால் தன்னால் அந்தக் காரைத் தொடர்ந்து போக முடியவில்லை  என்றும்  அடுக்கடுக்கான அதிர்ச்சித்  தகவல்களைச்  சொன்னான்.  

அதைக் கேட்டவுடன் வெறி பிடித்தவர் போல ஆனார் எம்.ஜி.ஆர். ஜானகிக்கு ஏதோ பெரிய ஆபத்து வரப் போகிறது என்று பயந்த அவர் கம்பெனி வேனைக் கொண்டு வரச் சொன்ன அவர் தனது நண்பர்களை அதில் ஏற்றிக் கொண்டு ஸ்ரீரங்கப்பட்டினம்வரை சென்றார். ஆனால் ஜானகியை ஏற்றிக் கொண்டு சென்ற கார் எந்தத் திசையில் போனது என்று அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை.

அடுத்து என்ன செய்வது, எங்கே ஜானகியைத் தேடுவது என்று தெரியாமல் தவித்த எம்.ஜி.ஆர் இருந்த பரிதாபமான  நிலையைப் பார்த்த அவரது சகோதரர் சக்ரபாணி “ஜானகியுடன் இரண்டு பெண்களும்  சென்றிருப்பதால் அவருக்கு எந்த ஆபத்தும் ஏற்பட வாய்ப்பில்லை. அதனால் தேவையில்லாமல் பயப்படாதே. இரண்டொரு நாளில் நிச்சயமாக ஜானகியிடமிருந்து நல்ல செய்தி வரும்” என்று தனது தம்பிக்கு ஆறுதல் கூறினார்..

அதற்குப் பிறகு ஒரு வாரம் ஆகியும் ஜானகியிடமிருந்து எந்தத் தகவலும் வராததால்  எம்.ஜி.ஆர்  மிகப் பெரிய குழப்பத்திற்கு ஆளானார். அப்போது   “வருடப் பிறப்பிற்காக சென்னை வந்திருக்கிறேன். படப்பிடிப்பு எப்போது என்பதை அறிவித்தால் புறப்பட்டு வருகிறேன்” என்று ஜானகியிடமிருந்து “மருத நாட்டு இளவரசி” படத்தின் தயாரிப்பாளருக்கு வந்த  தந்தி எம்.ஜி.ஆரின்  குழப்பத்தை இன்னும் அதிகப்படுத்துவதாக அமைந்தது.

முதலில் அந்தத் தந்தியை ஜானகிதான் கொடுத்தாரா இல்லை அவரது கார்டியனான மாமா கொடுத்திருக்கிறாரா என்பது பற்றி முடிவுக்கு வர முடியாமல் தவித்த எம்.ஜி.ஆர் “படப்பிடிப்பு எப்போது என்பதை அறிவித்தால் புறப்பட்டு வருகிறேன்” என்றால் என்ன அர்த்தம்?இனி திருமணத்தைப் பற்றி நான் அவருடன் பேசக்கூடாது என்று ஜானகி சொல்ல வருகிறாரா என்றெல்லாம் எண்ணி  முதலில்  குழம்பினார். அதன் பின்னர்  சென்னைக்குப்  போனால்தான் உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள முடியும் என்ற முடிவில் அவர் சென்னைக்கு புறப்பட்டார்.

எம்.ஜி.ஆரது வாழ்க்கையில் நடந்து கொண்டிருந்த இந்த குழப்பங்கள்   பற்றி எம்.ஜி.ஆரின் மனைவி சதானந்தவதிக்கோ ,அல்லது அவரது தாயாரான சத்யபாமா அம்மையாருக்கோ அப்போது எதுவும் தெரியாது. எல்லா விவரங்களையும்  அறிந்திருந்த ஒரே குடும்ப உறுப்பினர் அவரது அண்ணனான சக்ரபாணி மட்டுமே.

சென்னைக்கு வந்தவுடன்  தனியாகச் சென்று  ஜானகியை சந்திப்பது  சரியாக இருக்காது என்று  முடிவெடுத்த எம்.ஜி.ஆர் ஒரு போலிஸ் அதிகாரியின் துணையுடன் ஜானகி வீட்டுக்கு போக முடிவு செய்தார்.

அவரது ஒப்பனை நிபுணரான பீதாம்பரத்தின் அண்ணன் அப்பு நாயருக்கு காவல் துறை அதிகாரிகளிடம் நல்ல தொடர்பு உண்டு என்பதால் அவரிடம் எல்லா விவரங்களையும் எம்.ஜி.ஆர். சொன்னார். அதன் பின்னர் மந்தைவெளி பகுதியின் காவல்துறை அதிகாரியிடம் அப்பு நாயர் தொடர்பு கொண்டு தங்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ள அவர்களுடன்  ஜானகி தங்கியிருந்த இல்லத்துக்கு வர ஒப்புக் கொண்டார் அந்த அதிகாரி.

ஜானகி தங்கியிருந்த வீட்டுக்கு சென்றதும் ”உனக்கு ஏதாவது ஆபத்து என்றால் தைரியமாக சொல்லும்மா. போலீஸ் உனக்கு தக்க பாதுகாப்பு கொடுக்கும்” என்று ஜானகியிடம் அந்தக்  காவல்துறை அதிகாரி கூறினார். 

ஜீப் கார் ஒன்று வாங்க சொல்லியிருப்பதாகவும் அதை வாங்கியவுடன் அந்த ஜீப் காரிலேயே மோதி எம்.ஜி.ஆரை தீர்த்துக் கட்டி விட எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாகவும் அதற்கு முன்னால் எம்.ஜி.ஆர். ஜானகியை சந்திக்க மந்தைவெளிக்கு வந்தால் அவரது  காலை வெட்டிவிடப் போவதாகவும் ஜானகியின் மாமா விடுத்திருந்த மிரட்டல்களினால் பயந்து போயிருந்த ஜானகி தனக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அந்த காவல்துறை அதிகாரியிடம் கூறினார்.

அவர் ஒருவித பயத்தில் இருப்பதை அடையாளம் கண்டு கொண்ட அந்த காவல் அதிகாரி  “நீங்கள் பயப்பட வேண்டாம். உங்களுக்குத் தேவையான எல்லா பாதுகாப்புகளையும் நாங்கள் தருவோம்” என்று சொன்னவுடன் கொஞ்சம் பயம் தெளிந்த ஜானகி, ”இவரை கைது செய்து விடுவார்களா?” என்று கேட்டபோதுதான் ஜானகியை எம்ஜிஆர் சந்தித்தால் அவரை போலிஸ் கைது செய்துவிடும் என்று  சொல்லி யாரோ ஜானகியை மிரட்டியிருக்கிறார்கள் என்ற விவரம் அந்தக் காவல் துறை அதிகாரிக்குப் புரிந்தது.

அதற்குப் பிறகு ஜானகிக்கு ஆறுதலாக அந்த காவல்துறை அதிகாரி நீண்ட நேரம் பேசியவுடன் ”நான் என்ன விரும்புகிறேனோ அது நடப்பதற்கு  என்னுடைய சொந்தக்காரர்களும், பெரியவர்களும் பேசிக்கிட்டிருக்காங்க. கூடிய சீக்கிரத்திலேயே எல்லாம் சரியாகி விடும். அதற்கிடையில் இவருக்கு எந்த ஆபத்தும் வராம நீங்க பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார் ஜானகி.

“உங்களுக்கு எப்போது எங்களுடைய உதவி வேண்டும் என்றாலும் இந்த எண்ணுக்கு போன் செய்யுங்கள்” என்று சொல்லி காவல் நிலையத்தின் தொலைபேசி எண்ணை எழுதி ஜானகியிடம் கொடுத்துவிட்டு அந்த காவல் அதிகாரி கிளம்பியபோது அவருடன்  எம்.ஜி.ஆரும் கிளம்பினார்.

அப்போது எம்.ஜி.ஆரை மட்டும் சைகை மூலம் அழைத்த ஜானகி “நான் உங்களுக்குத்தான் என்பது முடிவாகிவிட்டது. என்றாலும் உங்களுக்கு எந்தத் தொல்லையும் ஏற்படாமல் இருக்க சில ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறேன். அதுவரை கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு, ”தனியாக வெளியில் எங்கும் செல்ல வேண்டாம்” என்று அவரை எச்சரித்து அனுப்பினார்.

(தொடரும்)

The post சினிமா வரலாறு-76 சினிமா தியேட்டரிலிருந்து வி.என்.ஜானகியைக் கடத்திய அவரது மாமா appeared first on Touring Talkies.

]]>
சினிமா வரலாறு-75 – எம்.ஜி.ஆர். வி.என்.ஜானகிக்கு எழுதிய கடிதம் https://touringtalkies.co/cinema-varalaaru-75-mgr-wrote-a-letter-to-v-n-janaki/ Fri, 12 Nov 2021 14:12:25 +0000 https://touringtalkies.co/?p=19368 ‘காளிதாசி’ பட காலத்திலிருந்து எம்.ஜி.ஆரைத் துரத்திக் கொண்டிருக்கும் பெண்ணின் வீட்டுக்கு போகத்தான் எம்.ஜி.ஆர் முடிவெடுத்து இருக்கிறார் என்பது தெரிந்ததும்  “இப்போது மணி என்னவென்று பார்த்தீர்களா? இரவு மணி பதினொன்று ஆகிறது. இந்த நேரத்தில் நீங்கள் அந்த பெண்ணைப்   பார்க்கப் போவது நன்றாக இருக்குமா?” என்று எம்.ஜி.ஆரைப் பார்த்து கேட்டார் அந்த நண்பர். “இரவு பதினொரு மணிக்குத்தானே நான் அவமானப்படுத்தப்பட்டேன். வீட்டைவிட்டு வெளியே துரத்தப்பட்டேன்” என்று எம்.ஜிஆர் சொன்னதும் தாள முடியாத மன வேதனையில் இருப்பதால்தான் அவர்  அப்படிப் […]

The post சினிமா வரலாறு-75 – எம்.ஜி.ஆர். வி.என்.ஜானகிக்கு எழுதிய கடிதம் appeared first on Touring Talkies.

]]>
‘காளிதாசி’ பட காலத்திலிருந்து எம்.ஜி.ஆரைத் துரத்திக் கொண்டிருக்கும் பெண்ணின் வீட்டுக்கு போகத்தான் எம்.ஜி.ஆர் முடிவெடுத்து இருக்கிறார் என்பது தெரிந்ததும்  “இப்போது மணி என்னவென்று பார்த்தீர்களா? இரவு மணி பதினொன்று ஆகிறது. இந்த நேரத்தில் நீங்கள் அந்த பெண்ணைப்   பார்க்கப் போவது நன்றாக இருக்குமா?” என்று எம்.ஜி.ஆரைப் பார்த்து கேட்டார் அந்த நண்பர்.

“இரவு பதினொரு மணிக்குத்தானே நான் அவமானப்படுத்தப்பட்டேன். வீட்டைவிட்டு வெளியே துரத்தப்பட்டேன்” என்று எம்.ஜிஆர் சொன்னதும் தாள முடியாத மன வேதனையில் இருப்பதால்தான் அவர்  அப்படிப் பேசுகிறார்  என்பதைப் புரிந்து கொண்ட அவரது நண்பர் சிறிது நேரம் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்தார். 

பின்னர் மெல்ல “கண்டிப்பாக அந்த விட்டுக்கு போய்த்தான் ஆக வேண்டுமா?” என்று எம்.ஜி.ஆரிடம் கேட்டார். “என் மானத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா? எந்த நிபந்தனையும் இல்லாமல் என்னையும் ஒருத்தி விரும்புகிறாள் என்று அவங்க இரண்டு பேருக்கும் நான் காட்ட வேண்டாமா? அப்போதுதானே என் மனது ஆறும்?” என்றார் எம்.ஜி.ஆர்.

“உண்மையில்  உங்களை அவர்கள் இரண்டு பேரும்  அவமானப்படுத்தி இருந்தாலும் அது இப்போது உங்களுக்கும் எனக்கும் மட்டும்தான் தெரியும். ஆனால் இப்போது நீங்கள் செய்யப் போகின்ற காரியத்தால் அது ஊர் உலகத்துக்கெல்லாம் தெரிந்துவிடும்.

உங்களைப் பற்றி எல்லோரும் எந்த அளவு உயர்ந்த அபிப்ராயம் வச்சிருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமா? அதனால்தான் ராத்திரி, பகல்னு நீங்க எப்போது எங்கே போனாலும் உங்கள் மீது உங்கள் அண்ணன் உட்பட யாரும் சந்தேகப்படுவதில்லை. இன்றைக்கு யார் மீதோ உங்களுக்கு உள்ள ஆத்திரத்தில் நீங்கள் இப்படி நடந்து கொண்டால் அதுக்குப் பிறகு உங்களை யாராவது நம்புவார்களா?” என்று அவரது நண்பர் கேட்ட  கேள்விகளில் நியாயம் இருந்தபோதிலும் அதைப் புரிந்து கொள்ள முடியாமல் எம்.ஜி.ஆரின் கோபம் அவர் கண்ணை மறைத்தது.

”அப்படீன்னா என்னைத் தூக்கி எறிந்தவர்கள் காலில் போய் விழச் சொல்றீங்களா?” என்று தனது நண்பரைப் பார்த்து கேட்டார் எம்.ஜி.ஆர்.

அந்த நண்பர் கொஞ்சம் விவரமானவர். எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்வது விவாதத்தைத்தான் வளர்க்குமே தவிர பிரச்னைக்குத் தீர்வைத் தராது என்பதை  புரிந்து கொண்டிருந்த அவர் மீண்டும் சிறிது நேரம் மவுனமாக இருந்தார்.

அவர் அப்படி மவுனமாக இருந்ததால் ஆத்திரமடைந்த எம்.ஜி.ஆர் “இனிமேல் நான் என் கல்யாணத்தைப் பற்றி யாரிடமும் பேசக் கூடாது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் கல்யாணத்தைப் பற்றியே நான் இனி நினைக்கக் கூடாது அப்படித்தானே“ என்று நண்பரிடம் கேட்டபோது ”யார் உங்களைத் திருமணம் பற்றி நினைக்க வேண்டாம் என்று சொன்னது? உங்களை விரும்புவதாக நீங்கள் சொன்ன அந்த பெண்ணின் தந்தையையும், தாயையும் நாளை காலையில் கம்பெனி விட்டுக்கு வரச் சொல்லி  பேசுங்கள். அப்படிப் பேச உங்களுக்கு சங்கடமாக இருந்தால் உங்களது அண்ணனை விட்டுப் பேசச்  சொல்லுங்கள்” என்றார் அந்த நண்பர்.

அவர் அப்படி சொன்னவுடன் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு போகின்ற திட்டத்தை கை விட்டுவிட்டு கம்பெனி வீட்டுக்குத் திரும்பினார் எம்.ஜிஆர்.

காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக அந்தப் பெண்ணின் வீட்டுக்கு ஆளை அனுப்பி அவர்களை வரச் சொல்ல வேண்டும் என்ற சிந்தனையிலே இரவு முழுவதும் படுக்கையிலே புரண்டு கொண்டிருந்த எம்.ஜி.ஆர்.எப்போது தூங்கினார் என்பது அவருக்கே தெரியாது.

காலையில் கண் விழித்தபோது வேலைக்காரப் பையன் ஒரு கடிதத்தை அவருக்கு முன்னே நீட்டியவாறு நின்று கொண்டிருந்தான்.

“இது யார் கொடுத்து அனுப்பிய கடிதம்?” என்று எம்.ஜி.ஆர் கேட்க “ஜானகியம்மா கொடுத்து அனுப்பினாங்க” என்று அந்தப் பையன் பதில் சொன்னவுடன் “இந்தக் கடிதத்தை அவங்க கொடுத்து அனுப்பும்போது அந்தம்மாவின்  மாமா அவர்கூட  இருந்தாரா..?” என்று அந்தப் பையனிடம் கேட்டார் எம்ஜிஆர்.

“அவரும் பக்கத்தில்தான் இருந்தார். இந்தக் கடிதத்தை உங்களுக்கு ஜானகியம்மா கொடுத்து அனுப்பியது அவருக்கும் தெரியும்” என்று  அவருடைய சந்தேகத்தை தீர்க்கின்ற வகையிலே தெளிவாக  பதில் சொன்னான் அந்தப் பையன்.

அதற்குப் பிறகு அந்தக் கடிதத்தை அவன் கையிலிருந்து வாங்கிய எம்.ஜி.ஆர் கடிதத்தைப் படிக்கத் தொடங்கினார்.

ஜானகி வீட்டிலிருந்து எம்.ஜி.ஆர். கிளம்பிய பிறகு ஜானகியும், அவரது மாமாவும் மேற்கொண்டு இந்த விஷயத்தைப் பற்றிப் பேசி என்ன முடிவெடுத்தார்கள் என்பதைப் பற்றி  அந்த கடிதத்தில் விளக்கமாக எழுதியிருந்தார் ஜானகி.

‘மருத நாட்டு இளவரசி’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் முடிந்துவிடும். அப்படி அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தாலும், முடிவடையவில்லை என்றாலும்  மூன்று மாதங்களுக்கு எம்.ஜி.ஆரும், நீயும் உங்களது  திருமண விஷயத்தைப் பற்றி பேசக் கூடாது. அப்படி நீங்கள் இருவரும்  பேசாமல்  இருந்து விட்டால் மூன்று மாதங்களுக்குப் பிறகு நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள  நான் நிச்சயமாக தடையாக இருக்க மாட்டேன் என்று எனது   மாமா சொன்னார். அவர் அப்படிச் சொன்னவுடன் ‘அப்படி நாங்கள் இருவரும் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்றால் அந்த மூன்று மாதங்களில் நான்  நடிப்பதற்கான  எந்தப் புதிய பட ஒப்பந்தத்திலும் நீங்கள் கையெழுத்து போடக் கூடாது’ என்று நான்  அவருக்கு எதிர் நிபந்தனை ஒன்றை விதித்தேன்.  அதை  மாமா ஏற்றுக் கொண்டுவிட்டார்” என்று அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார் ஜானகி.

அந்தக் கடிதம் எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய மன ஆறுதலைக் கொடுத்தது. கடிதத்தை திரும்பத் திரும்பப்  படித்துப் பார்த்தார் எம்.ஜி.ஆர்.  அந்தக் கடிதத்தைப் படித்த பிறகு மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர்கள் இருவரும்  திருமணம் செய்து கொள்ள எந்தத் தடையும் இருக்காது என்ற நம்பிக்கை எம்ஜிஆருக்கு ஏற்பட்டது.

அதையடுத்து  முதல் வேலையாக தனது நண்பரை அழைத்த எம்.ஜி.ஆர். ஜானகியின் கடிதத்தை அவருக்குப் படித்துக் காட்டி விட்டு “நேற்று இரவு நான் சொன்ன அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு எந்தத் தகவலும் சொல்லி அனுப்ப வேண்டாம்” என்று அவரிடம் சொன்னார்.

 “இன்னொரு முக்கியமான விஷயம். என் அண்ணனுக்கு நேற்று நடந்த எந்த விஷயமும் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு” என்று எம்.ஜி.ஆர். அந்த நண்பரிடம் சொன்னபோது அந்த நண்பரால்  சிரிப்பை அடக்க முடியவில்லை.

அவர் அப்படி சிரிப்பதைப் பார்த்து எதற்காக அவர் அப்படி சிரிக்கிறார் என்பது போல எம்.ஜி.ஆர் அவரைப் பார்த்தபோது “நான் நேற்று இரவு உங்களோடு வந்ததே, உங்கள் அண்ணன் சொல்லித்தான்…”  என்று உண்மையை உடைத்தார் அந்த நண்பர்.

“அந்த கார்டியன் ஏதாவது தப்பா பேச இவன் அவர்கிட்ட முரட்டுத்தனமாக நடந்து கொண்டான் என்றால் நன்றாக இருக்காது. அதனால் நீங்கள் கூடப் போய் ஆத்திரத்தில் அவன் எதுவும் செய்துவிடாமல் சமாதானப்படுத்தி அவனைக் கூட்டிக் கொண்டு வாருங்கள்” என்று அவர்தான் என்னை அனுப்பி வைத்தார்” என்று அந்த நண்பர் சொன்னவுடன் “இரவு அந்த பெண்ணின் வீட்டிற்கு தான் போக முடிவு செய்ததும் அண்ணனுக்குத் தெரிந்திருக்குமோ” என்ற அச்சத்தில் அதைப் பற்றி எம்.ஜி.ஆர். அந்த நண்பரிடம் கேட்க “அதைப் பற்றி எல்லாம் நான் அவரிடம் ஒன்றும் சொல்லவில்லை” என்று சொல்லி எம்.ஜி.ஆர். மனதில் நிம்மதியை ஏற்படுத்தினார் அந்த நண்பர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ‘மருத நாட்டு இளவரசி’ படத்தின் படப்பிடிப்பில் ஜானகி அவர்களின் மாமாவைப் பார்க்கும்போதெல்லாம் அவரை ஜெயித்துவிட்ட ஒருவித பெருமிதத்துடன் எம்.ஜி.ஆர். நடை போட்டாலும் ஜானகியின் மாமா அதை எல்லாம் பொருட்படுத்தவேயில்லை.

ஜானகியுடன் தனது திருமணம் நடைபெற்றுவிடும் என்று எம்.ஜி.ஆர். உறுதியாக நம்பிக் கொண்டிருந்த நேரத்தில் அவரது நம்பிக்கையை அடியோடு தகர்க்கின்ற ஒரு செய்தி அவரை வந்தடைந்தது.

பலதார தடைச் சட்டம் அடுத்த இரண்டு மாதங்களில் தமிழ்நாட்டில் அமுல்படுத்தப்படவிருக்கின்றது என்பதுதான்  அந்தச் செய்தி.

ஏற்கனவே தான் மணமுடித்திருக்கும் சதானந்தவதி நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சட்டம் அமுலுக்கு வருமானால் தன்னால் ஜானகியைத் திருமணம் செய்து கொள்ள முடியாதே என்று அதிர்ச்சி அடைந்தார் எம்.ஜி.ஆர்.

அப்படி ஒரு சட்டம் இரண்டு மாதத்தில் வரப் போகிறது என்று தெரிந்துதான் தங்களது திருமணத்திற்கு ஜானகியின் மாமா ஒப்புதல் தெரிவித்திருப்பாரோ என்ற சந்தேகமும் அவர் மனதிற்குள் தோன்றியது.

அப்படி ஒரு சட்டம் வரவிருப்பது பற்றியும், அவர்களது திருமணத்திற்கு ஜானகியின் மாமா சம்மதித்ததில் வேறு ஏதாவது சூழ்ச்சி இருக்குமா என்பது பற்றியும் ஜானகியோடு கலந்து பேச வேண்டும் என்று ஆசைப்பட்டார் எம்.ஜி.ஆர்.

ஆனால், படத்தில் நடிக்கும்போதுகூட படத்திற்கான வசனங்களைத் தவிர வேறு எதைப் பற்றியும் அவர்கள் இருவரும்  பேசிக் கொள்ளக் கூடாது என்று ஜானகியின் மாமா போட்டிருந்த நிபந்தனையை அவர்கள் இருவருமே ஏற்றுக்கொண்டிருந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் மிகப் பெரிய குழப்பத்துக்கு ஆளானார் அவர்.

அதையும் மீறி ஒருமுறை ஜானகியோடு அவர் பேச முற்பட்டபோது  மாமாவிடம் அவர்கள் இருவரும் செய்து கொடுத்திருக்கும் சத்தியத்தை மீண்டும் ஒருமுறை அவருக்கு நினைவுபடுத்திவிட்டு அவருடன் பேசாமலேயே சென்றுவிட்டார் ஜானகி .

எப்படியாவது அந்த விவரங்கள் எல்லாவற்றையும் அவருக்குத் தெரிவித்தே ஆக வேண்டும் என்பதால் ஜானகிக்கு ஒரு கடிதம் எழுதிய எம்.ஜி.ஆர். அந்தக் கடிதத்தை  வேலைக்காரப் பையனிடம் கொடுத்து அனுப்பினார்.

முதலில் அந்தக் கடிதத்தை வாங்கவே மறுத்த ஜானகி “மறுக்காமல் இதை வாங்கிப் படிக்க  வேண்டும் என்று நான் சொன்னதாக ஜானகியிடம் சொல்…” என்று அந்த பையனிடம் எம்.ஜி.ஆர். சொல்லி அனுப்பியிருந்தது தெரிந்ததும்  கடிதத்தை கையில் வாங்கிக் கொண்டார்.

ஆனாலும் உடனே அந்தக் கடிதத்தை அவர் படிக்கவில்லை. தான் மாமாவுக்கு கொடுத்திருந்த வாக்குக்கு கட்டுப்பட்டு அவர் வந்தவுடன் எம்.ஜி.ஆரிடமிருந்து ஒரு கடிதம் வந்திருப்பதாக அவரிடம்  சொன்ன ஜானகி அந்தக் கடிதத்தை படிக்கச் சொல்லி மாமா அனுமதி கொடுத்ததற்குப் பிறகே அந்த கடிதத்தைப் படித்துப் பார்த்தார்.

அந்த கடிதத்தில் எம்.ஜி.ஆர். என்ன எழுதியிருந்தார்…?

(தொடரும்)

The post சினிமா வரலாறு-75 – எம்.ஜி.ஆர். வி.என்.ஜானகிக்கு எழுதிய கடிதம் appeared first on Touring Talkies.

]]>
சினிமா வரலாறு-74 – திசை மாறிப் போக இருந்த எம்.ஜி.ஆரை தடுத்து நிறுத்திய நண்பர் https://touringtalkies.co/tamil-cinema-varalaaru-74-mgr-v-n-janaki-love-story/ Wed, 10 Nov 2021 13:13:00 +0000 https://touringtalkies.co/?p=19329 வி.என்.ஜானகியைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்றால்  அதற்கு முன்னால்  எம்.ஜி.ஆர்.  ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுத் தர வேண்டும் என்று நிபந்தனை விதித்த ஜானகியின் மாமா  அந்த ஒப்பந்தத்தை எம்.ஜி.ஆரிடம் நீட்டினார். அதைப் படித்துப் பார்த்த எம்.ஜி.ஆரின் கண்கள் கோவைப்பழமென சிவந்தது. பத்தாண்டு காலத்திற்கு எம்.ஜி.ஆரும், வி.என்.ஜானகியும் ஜானகியின் கார்டியனாக உள்ள அவரது மாமா சொல்லுகின்ற படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்றும், அவர்கள் இருவரும் படங்களில் நடிப்பதற்கு படத் தயாரிப்பாளர்கள் ஜானகியின் மாமாவிடம் மட்டுமே ஒப்பந்தம் செய்து […]

The post சினிமா வரலாறு-74 – திசை மாறிப் போக இருந்த எம்.ஜி.ஆரை தடுத்து நிறுத்திய நண்பர் appeared first on Touring Talkies.

]]>
வி.என்.ஜானகியைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்றால்  அதற்கு முன்னால்  எம்.ஜி.ஆர்.  ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுத் தர வேண்டும் என்று நிபந்தனை விதித்த ஜானகியின் மாமா  அந்த ஒப்பந்தத்தை எம்.ஜி.ஆரிடம் நீட்டினார். அதைப் படித்துப் பார்த்த எம்.ஜி.ஆரின் கண்கள் கோவைப்பழமென சிவந்தது.

பத்தாண்டு காலத்திற்கு எம்.ஜி.ஆரும், வி.என்.ஜானகியும் ஜானகியின் கார்டியனாக உள்ள அவரது மாமா சொல்லுகின்ற படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்றும், அவர்கள் இருவரும் படங்களில் நடிப்பதற்கு படத் தயாரிப்பாளர்கள் ஜானகியின் மாமாவிடம் மட்டுமே ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும், ஜானகி படங்களில் தொடர்ந்து நடிக்க எம்.ஜி.ஆர் எந்த மறுப்பும் சொல்லக் கூடாது என்றும் பல நிபந்தனைகளை அந்த ஒப்பந்தத்தில் விதித்திருந்தார் அவரது மாமா.

திருமணம் செய்து கொள்வது பற்றி ஜானகியிடம் முதல் முறையாகப் பேசியபோதே “திருமணத்திற்குப் பிறகு நடிப்புத் தொழிலில் இருந்து முழுமையாக விலகிவிட வேண்டும்” என்று எம்ஜிஆர் அவரிடம் சொல்லியிருந்தார்.

ஜானகியும், ”திருமணத்திற்குப் பிறகு கூடையில் மண் சுமக்கும்  வேலை செய்தாலும் செய்வேனே தவிர நடிப்புத் தொழிலில் இருக்க மாட்டேன்” என்று எம்.ஜிஆரிடம் உறுதியாக சொல்லியிருந்தார்.

அந்த உடன்படிக்கைக்கும் அந்த ஒப்பந்தத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாமல் இருந்ததால்தான் அந்த ஒப்பந்தத்தைப் படித்தவுடன் எம்.ஜி.ஆருக்கு அப்படி ஒரு ஆத்திரம் ஏற்பட்டது.

இதனிடையே ஆத்திரமாகப் பேச வேண்டாம் என்று ஜானகி அவரிடம் சைகை காட்டியதில் எம்ஜிஆரின் கோபம் இன்னும் அதிகமாகியது.

ஆனால் இந்த போராட்டங்களைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ”ஜானகியோட பணத்துக்கு  நீங்க ஆசைப்படலேன்னா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதில் உங்களுக்கு என்ன தயக்கம்?” என்று எம்.ஜி.ஆரைப் பார்த்து கேட்ட ஜானகியின் மாமா “அவளை  உங்க இஷ்டத்துக்கு பயன்படுத்தி அவள் சம்பாதிக்கும் பணத்தை நீங்க அனுபவிக்கலாம்னு நினைச்சா நான் அதைப் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க மாட்டேன்” என்றார்.

”ஜானகி சம்பாதிக்கும் பணத்தில் நான் வாழ விரும்புவதாக நீங்கள் சந்தேகப்பட்டால் திருமணத்திற்குப் பிறகு ஜானகியை எக்காலத்திலும் நடிக்க வைக்க மாட்டேன் என்று நான் எழுதித் தருகிறேன்… போதுமா?” என்று எம்.ஜி.ஆர் கேட்டதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாத  அவர் சர்வநிதானத்துடன் ஒரு சிகரெட்டை பற்ற  வைத்து புகையை நன்கு இழுத்து வெளியேவிட்டார்.

அதன் பிறகு, ”நோயில் படுத்திருக்கும் உங்க மனைவி, உங்க தாயார், உங்க அண்ணன் குடும்பம் என்று உங்கள் குடும்பம் ரொம்பப் பெரிசு. ஜானகிக்கும் அவரது தாயார், பிள்ளை, நான் என்று இத்தனை பேர் இருக்கிறோம். இவ்வளவு பேரும் வாழ்க்கை நடத்த உங்களது சம்பளம் எப்படிப் போதுமானதாக இருக்கும்? நீங்கள் இன்னும் முழு கதாநாயகனாக ஆகவில்லை. அது மட்டுமில்லாமல்  இன்றுவரையில் ஜானகி வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளத்தில் பாதியைத்தான் நீங்கள் சம்பளமாக வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் உங்கள் குடும்பத்தையும், இவளது குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் என்றால் இவள் நடித்தே ஆக வேண்டும். அப்படி இவள் நடித்து வரக் கூடிய வருமானத்தை அவளது குடும்பத்திற்கு பயன்படுத்தத்தான் நான் அனுமதிப்பேன்.  வேறு யாரும் அந்தப் பணத்திற்கு சொந்தம் கொண்டாடுவதையோ அந்தப் பணத்தை அனுபவிப்பதையோ என்னால் அனுமதிக்க முடியாது…” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார் அவர்.

தனது மாமாவின் அந்த விஷமத்தனமான பேச்சைக் கேட்டு எம்.ஜி.ஆர். ஆத்திரத்தில் ஏதாவது பேசிவிட்டால்  அது திருமணத்திற்குத்  தடையாக அமைந்து விடுமே  என்று அச்சப்பட்ட ஜானகி  “இப்போதைக்கு சரி என்று சொல்லுங்கள். பிறகு பேசிக் கொள்ளலாம்” என்று எம்.ஜி.ஆருக்கு மட்டும் கேட்கும்படி சொன்னார். ஆனால், ஜானகியின் மாமா பேசிய எகத்தாளமான பேச்சினால் காயமடைந்திருந்த எம்.ஜி.ஆரை  ஜானகியின் அந்த பேச்சு இன்னும் ஆத்திரம் அடையச் செய்தது.

“ஒரு பெண் சம்பாதிக்கும் பணத்தில் வாழ விரும்புகின்ற ஒரு கேவலமான பிறவி என்று அவள் முன்னாலேயே என்னை அவளது மாமா குற்றம் சாட்டும்போது அதை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசாமல் அவர் சொல்வதற்கெல்லாம் என்னை சம்மதிக்கச் கொள்கிறாள் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? என்னைவிட அதிகமாக சம்பளம் வாங்குவதால் அவளது இஷ்டத்திற்கு நான் ஆட வேண்டும் என்று நினைக்கிறாளா?” என்று ஜானகி மீது பெரும் கோபம் கொண்டார் எம்ஜிஆர்.

கல்யாணத்தைப் பற்றி பேசி முடிவெடுத்து திருமணத்திற்கு நாள் குறிக்கலாம் என்று அழைத்துவிட்டு இப்படி ஒரு அடிமை சாசனத்தில் தன்னை கையெழுத்து போடச் கொள்கிறார்கள் என்றால் அவர்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்..?

ஜானகி மீது நான் வைத்திருக்கும் அன்பை விலை பேச இவர்கள் முயற்சிக்கிறார்களா என்றெல்லாம் பலவாறான சிந்தனைகள் எம்.ஜி.ஆரின் மனதிற்குள் ஓடின.

எந்த நிபந்தனையும் விதிக்காமல் என்னை மனிதனாக மதித்து என்னோடு வாழ விரும்புகின்ற ஒரு பெண்  இந்த உலகத்தில் எனக்கு கிடைக்கவே மாட்டாளா  என்று எண்ணியபடியே தான் உட்கார்ந்து கொண்டிருந்த நாற்காலியிலிருந்து எழுந்தார் எம்.ஜி.ஆர்.

“ஜானகிக்கு கணவனாக இருக்க விரும்பித்தான் இங்கே வந்தேனே தவிர, ஒரு அடிமையாக இருக்க விரும்பி நான் இங்கே வரவில்லை. வருகிறேன்…” என்று சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர்  அங்கிருந்து கோபமாக கிளம்பிய போதுதான் நினைத்ததை சாதித்துவிட்ட பெருமிதத்துடன் இன்னொரு சிகரெட்டை எடுத்து நிதானமாகப் பற்ற வைத்தார் ஜானகியின்  கார்டியனான மாமா.

நிலைமை எல்லை மீறிப் போவதைக் கண்டு எம்.ஜி.ஆரை தடுத்து நிறுத்த ஓடோடி வந்த ஜானகி ”அவசரப்படாதீங்க. கொஞ்சம் பொறுமையா இருங்க. அவர் நீட்டின ஒப்பந்தத்தில் நீங்கள் கையெழுத்து போட்டாலும் நான் நடிக்கவில்லை என்றால் அவரால் என்ன செய்ய முடியம்? அதனால் தயவு செய்து அவரிடம் சரி என்று சொல்லிவிட்டுப் போங்கள்” என்று எம்.ஜி.ஆரிடம் மன்றாடினார்.

ஆனால் ஜானகியின் மீதும்  எம்.ஜி.ஆர். அளவிட முடியாத அளவிற்கு கோபம் கொண்டிருந்ததால் ஜானகி சொன்ன வார்த்தைகள் அவரை ஆறுதல்படுத்துவதற்குப் பதிலாக  அவரது ஆத்திரத்தை அதிகப்படுத்தியது.

“அவர் கூப்பிட்ட உடன் வந்தது என் தப்பு. அதனால் எனக்கு இந்த அவமானம் வேண்டும்தான். என் பணத்தையோ, புகழையோ பார்க்காமல் என் உள்ளத்தை மட்டும் மதித்து என்னோடு வாழ்க்கைத் துணைவியாக வாழக் கூடிய ஒரு பெண் எனக்குக் கிடைக்காமலா போய்விடுவாள்“ என்று உரக்கச்  சொல்லியபடியே  அங்கிருந்து படிகளில் இறங்கிய எம்.ஜி.ஆர். அந்த இடத்தை விட்டுக் கிளம்பியபோது மழை தூறத் தொடங்கியிருந்தது.  

ஜானகியின் மாமாவைப்  பார்க்க  எம்.ஜி.ஆர். சென்றபோது அவருடன் அவரது நண்பர் ஒருவரும் சென்றிருந்தார். ஜானகியின் வீட்டிலிருந்து  கிளம்பி வெளியே வந்த  எம்.ஜி.ஆரின் முகத்தில் ஏற்பட்டிருந்த மாற்றத்தைப் பார்த்து கலக்கமடைந்த அந்த நண்பர் அடுத்து எம்ஜிஆர் எங்கே சென்று கொண்டிருக்கிறார் என்பதை அறிந்ததும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்.

ஜானகி தங்கியிருந்த வீட்டிலிருந்து புறப்பட்ட எம்.ஜி.ஆர். ‘மருத நாட்டு இளவரசி’ படத்தை எடுத்துக் கொண்டிருந்த அந்த படக் கம்பெனி இருந்த பாதையில் போகாமல் வேறு பாதையில் போவதைப் பார்த்துவிட்டு “நாம்  போக வேண்டிய பாதை அந்தப் பக்கம் இருக்கிறது” என்று எம்ஜிஆருக்கு அவரது நண்பர் சுட்டிக் காட்டியபோது “அது எனக்கும் தெரியும். இஷ்டம் இருந்தால் நீங்கள் என்கூட வாங்க. இல்லையென்றால் நீங்களும் போகலாம்…” என்று சற்று கோபமாக அந்த நண்பரைப் பார்த்து சொன்னார் எம்.ஜி.ஆர்.

அவர் அப்படி சொன்னவுடன் எம்.ஜி.ஆர் எப்படிப்பட்ட மன நிலையில் இருக்கிறார் என்பதை ஓரளவிற்கு புரிந்து கொண்ட அவரது நண்பர் எதுவும் பேசாமல் அவரைப் பின் தொடர்ந்தார்.

“என்னை அடிமையாக வைச்சிருக்கணும்னு ஆசைப்படறாங்க போல இருக்கு. சுருக்கமாகச்  சொல்வதென்றால் சினிமா உலகில் சொல்வாங்களே ‘கூஜா’ என்று! அது மாதிரி நான் இருக்கணும்னு ஆசைப்படறாங்க. இந்த உலகத்தில் நான் கல்யாணம் செய்து கொள்ள வேறு பெண்ணே கிடைக்காதுன்னு முடிவு பண்ணிட்டாங்கபோல இருக்கு” என்றெல்லாம் புலம்பியபடி எம்ஜிஆர் நடந்து செல்ல ”அவங்களுக்கு நாம் நல்ல படம் புகட்டலாம் அண்ணே. நீங்க ஒண்ணும் கவலைப்படாதிங்க” என்று எம்.ஜி.ஆருக்கு ஆறுதல் கூறிய அந்த நண்பர் “அதெல்லாம் சரி… இந்த மழையில் இப்போ எங்கே போறீங்க?” என்று கேட்டார்.

“பல மாதங்களாக என்னை வேண்டி வேண்டி அழைக்கிறாளே ஒருத்தி… அவளைத்தான் பார்க்கப் போகிறேன்” என்றார் எம்ஜி.ஆர்.

அவர் சொன்னதில் இருந்து ‘மருத நாட்டு இளவரசி’ படம் ‘காளிதாசி’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட காலத்திலிருந்து எம்.ஜி.ஆரை அடைய  தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கும் பெண்ணைப் பார்க்கத்தான் எம்ஜிஆர் செல்கிறார் என்று அவரது நண்பருக்கு தெளிவாகப் புரிந்தது.

விபரீதமான ஒரு முடிவை எடுத்துள்ள எம்.ஜி.ஆரை  எப்படி தடுப்பது என்று தெரியாமல் தவித்தார் அந்த நண்பர்.

(தொடரும்)  

The post சினிமா வரலாறு-74 – திசை மாறிப் போக இருந்த எம்.ஜி.ஆரை தடுத்து நிறுத்திய நண்பர் appeared first on Touring Talkies.

]]>