Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

புதுமையான கதை, திரைக்கதையில் உருவாகியிருக்கும் ‘கார்பன்’ திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விதார்த் நடிப்பில் வரவிருக்கும் 25-ஆவது படமான ‘கார்பன்’ படம் வரும் பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில் தான்யா பாலகிருஷ்ணன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். மேலும், இயக்குநர் மாரிமுத்து, மூணாறு ரமேஷ், பிச்சைக்காரன் மூர்த்தி, ராம்சன் வினோத் சாகர், டவுட் செந்தில், பேபி ஜானு பிரகாஷ் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – விவேக் ஆனந்தம் சந்தோஷ், இசை – சாம் சி.எஸ்., படத் தொகுப்பு – பிரவின் கே.எல்.

விஜய் ஆண்டனியை வைத்து ‘அண்ணாதுரை’ படத்தை இயக்கிய சீனிவாசன்தான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் சீனிவாசன் பேசும்போது, “விதார்த்துக்கு போலீஸ் ஆக வேண்டும் என்பதுதான் லட்சியம். அதற்கான தீவிர முயற்சியில் இருப்பவரின் வாழ்வில் ஒரு சம்பவம் நடக்கிறது.. அதிலிருந்து அவர் மீண்டாரா… தன் இலட்சியத்தை அடைந்தாரா..? என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.

ஒரு இரவு விதார்த்துக்கு கனவு வருகிறது. அந்தக் கனவில் விதார்த்தின் அப்பாவுக்கு கார் ஆக்சிடென்ட் நடக்கிறது. இது வெறும் கனவுதானே என்று நினைக்கும் விதார்த் வாழ்வில் அடுத்த நாளே அப்படியொரு சம்பவம் நிஜத்தில் நடக்கிறது. கனவில் பார்த்த மாதிரியே ஆக்சிடெண்ட் நடக்கும் இடம், கார் எல்லாமே ஒரே மாதிரி இருக்கிறது.

அப்பாவின் உயிரைக் காப்பாற்ற தேவையான பணமும் இல்லாமல், விபத்து ஏற்படுத்திய நபரின் முகம் தெரியாமல் அவர் படும்பாடுதான் இந்தக் ‘கார்பன்’ திரைப்படம். ஐம்பதுக்கும் மேற்பட்ட லொகேஷன்களில் படமாக்கப்பட்டுள்ளது.” என்றார் இயக்குநர்.

- Advertisement -

Read more

Local News