Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

“கல்யாணம் செஞ்சுக்கலாமா..?” என்ற ரசிகரின் கேள்விக்கு நடிகை மீனாவின் சுவையான பதில்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தற்போது நடிகர், நடிகைகள் சமூக வலைத்தளங்களில்தான் அதிகமாக பேட்டியளித்து வருகிறார்கள். பத்திரிகையாளர்களுக்கு என்றில்லை.. தங்களது தீவிர ரசிகர்களுக்கும் சேர்த்தே பேட்டியளிக்கிறார்கள்.

இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் எண்ணிக்கை கூட, கூட அந்த நட்சத்திரங்களுக்கு மவுசு ஏறுகிறது. இன்ஸ்டாகிராம் நிறுவனம் அவர்களுக்கு இருக்கும் பாலோயர்ஸ் எண்ணிக்கைக்கு ஏற்ப பணம் தருவதால், ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக முக்கிய நடிகைகள் பலரும் இப்போது இன்ஸ்ட்டாகிராமில்தான் குடியிருக்கிறார்கள்.

இவர்களில் நடிகை மீனாவும் ஒருவர். இவரை தற்போது 4 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கின்றனர். தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்த அவ்வப்போது தனது பழைய புகைப்படங்களையும், லேட்டஸ்ட் புகைப்படங்களையும் அள்ளி வீசி வருகிறார் மீனா.

அதோடு கூடவே அவ்வப்போது கேள்வி பதில் சீஸனையும் நடத்தி வருகிறார். அந்த வகையில் நேற்றைக்கு முன் தினம் ஒரு கேள்வி பதில் சீஸனை நடத்தினார் மீனா. இதில் சுவாரஸ்யமான பல கேள்விகள் வந்தன. அதற்கு மீனாவும் சுவாரஸ்யமாகவே பதில் அளித்தார்.

“உங்களது உண்மையான வயது என்ன..?” என்று கேள்வி எழுப்பியவரிடம், “பெண்களிடம் அவர்களது வயதைக் கேட்பது நாகரிகமானதல்ல என்பது உங்களுக்குத் தெரியாதா..?” என்று பதில் அளித்துள்ளார்.

“தனுஷ் அல்லது சிம்பு இவர்கள் இருவரில் சிறந்த நடிகர் யார்..?” என்ற கேள்விக்கு “இருவரும்” என்று பதில் அளித்து எஸ்கேப்பானார்.

“என்றாவது ஒரு நாள் இந்த சினிமா துறைக்குள் எதற்காக வந்தோம் என்று வருத்தப்பட்டு உள்ளீர்களா.?” என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு “பல தடவை” என்று கூறியதோடு கண்ணீர் சிந்தும் எமோஜியையும் இணைத்துள்ளார்.

“பாபநாசம்-2 படத்தில் நீங்கள் நடிப்பீர்களா..?” என்ற கேள்விக்கு “இதை கமல் ஸாரிடம் கேளுங்கள்…” என்று பந்தை அந்தப் பக்கம் திருப்பியுள்ளார்.

“நான் 20 ஆண்டுகளுக்கு முன் சென்று மீண்டும் பிறந்து உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன்…” என்று கூறியதற்கு, “ஆவ்” என்று ஆச்சரியக் குரல் எழுப்பியுயள்ளார் மீனா.

“என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா..?” என்று கேட்ட ரசிகருக்கு தனது கல்யாணப் புகைப்படத்தைக் காட்டி “நீங்க கொஞ்சம் லேட்” என்று  பதில் கொடுத்துள்ளார் மீனா.

- Advertisement -

Read more

Local News