Saturday, September 21, 2024

‘விக்ரம்’ படத்துடன் S.J.சூர்யாவின் ‘பொம்மை’ படத்தின் டிரெயிலரும் வெளியாகிறது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘மொழி’, ‘அபியும் நானும்’ படங்களை இயக்கிய இயக்குநரான  ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பொம்மை’ படத்தின் டிரெயிலர் நேற்றைக்கு வெளியானது.

ஏஞ்சல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் V.மருது பாண்டியன், Dr.ஜாஸ்மின் சந்தோஷ், Dr.தீபா, T.துரை ஆகியோர் இணைந்து இந்த பொம்மை’ படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும், பிரியா பவானி சங்கரும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். மேலும், இந்தப் படத்தில் சாந்தினி, ‘டவுட்’ செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இசை – யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம்.நாதன், படத் தொகுப்பு – ஆண்டனி, கலை இயக்கம் – K.கதிர், பாடல்கள் – கார்க்கி, நடன இயக்கம் – ராஜு சுந்தரம், பிருந்தா, சண்டை இயக்கம் – கனல் கண்ணன், வசனம் – M.R.பொன் பார்த்திபன், உடைகள் வடிவமைப்பு – சுப்ரீ கார்த்திக், பூர்த்தி ப்ரவீன், புகைப்படங்கள் – ராமசுப்பு, நிர்வாகத் தயாரிப்பாளர் – நிர்மல் கண்ணன், ஒப்பனை – மாரி, மக்கள் தொடர்பு – ஜான்சன், சதிஷ் (AIM), தயாரிப்பு ஆலோசகர் – T.R.ரமேஷ். எழுத்து, இயக்கம் – ராதா மோகன்.

இத்திரைப்படம் இயக்குநர் ராதா மோகன் இயக்கும் 11-வது திரைப்படமாகும்.

இந்த ‘பொம்மை’ படத்தின் டிரெயிலர் நேற்று வெளியானது. இந்தப் படத்தில் தமிழ்த் திரையுலகத்தின் சமீபத்திய கவன ஈர்ப்பு நடிகராக மாறியிருக்கும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடித்திருப்பதால் இந்த டிரெயிலர் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் இந்த ‘பொம்மை’ படத்திற்கு பெருமை சேர்க்கும்விதமாக கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான விக்ரம்’ படம்  வரும் ஜூன் 3-ம் தேதி வெளியாகும் 600 திரையரங்குகளிலும் இந்த பொம்மை’ படத்தின் டிரெயிலரும் திரையிடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.

“இந்த பொம்மை’ படத்தின் சிங்கள் டிராக் வெளியீடு, பாடல்கள் வெளியீடு, பட வெளியீடு குறித்த செய்திகள் விரைவில் அறிவிக்கப்படும்” என்று தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News