டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான திருப்பூர் சுப்ரமணியம் அளித்து வரும் பேட்டி நேயர்களை கவர்ந்துள்ளது.
அந்த பேட்டியில் அவர் கூறிய தகவல் ஒன்று வெகு சுவாரஸ்யமானது.
அவர், “யு டியுபர் ப்ளு சட்டை மாறன், ஜெயிலர் படத்தின் வசூல் குறைவாக உள்ளதாக தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார்.
என் வசம் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ளன. தவிர, தென் மாநிலங்களில் உள்ள விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் எனக்கு நண்பர்கள். ஒட்டுமொத்தமாக நான் விசாரித்த வகையில், ஜெயிலர் படம் வசூலில் சாதனை புரிந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு தயாரிப்பாளருக்கு நூறு கோடி ரூபாய் பிராபிட் கிடைத்துள்ளது. இதுவரை இல்லாத சாதனை இது.
ஆனால் ப்ளூ சட்டை மாறன் வேண்டுமென்றே ரஜினியையும், ஜெயிலர் படத்தையும் குறைத்து பேசுகிறார். பொய் சொல்கிறார்.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஸ் நடித்த நானே வருவேன் படத்தை மிகவும் புகழ்ந்து பேசினார். ஆனால் அப்படம் பிளாப்.
இப்போது ஜெயிலரை இழிவாக பேசுகிறார். ஆனால் இந்த படம் சூப்பர் ஹிட். அதே போலத்தான் பொன்னியின் செல்வன் 1படத்தை குறைத்துப் பேசினார். அந்த படமும் சூப்பர் ஹிட்.
இதிலிருந்தே இவரது விமர்சனம் தவறு என்பதை புரிந்துகொள்ளலாம்” என்றார் திருப்பூர் சுப்ரமணியம்.
இவரது பேட்டியை முழுதும் பார்க்க, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..