Touring Talkies
100% Cinema

Tuesday, September 9, 2025

Touring Talkies

‘விடாது’ ப்ளூ: தொடரும் சர்ச்சை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘இரவின் நிழல்’ படத்தை  நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக உருவாக்கி வெளியிட்டார் பார்த்திபன். கடந்த ஜூலை 15ம் தேதி வெளியான இத்திரைப்படம்தான் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என பார்த்திபன் கூறியிருந்தார். அப்போது யு டியுபர் ப்ளூ சட்டை மாறன், “இது முதல் அல்ல.. இதற்கு முன்பே இதே போன்ற படம் வெளியாகி இருக்கிறது” என கூறியிருந்தார். அப்போது அது பெரிய சர்ச்சை ஆனது.

தொடர்ந்து பார்த்திபன் குறித்து விமர்சித்துக்கொண்டே இருந்தார் ப்ளூ சட்டை மாறனர்.

சமீபத்தில் பார்த்திபன், “இரவின் நிழல் திரைப்படம் இதுவரை 115 விருதுகளை வென்றுள்ளது” என்றார்.

இப்போதும் ப்ளூ சட்டை மாறன், ““எலே வீரபாகு… மீடியாகிட்ட கூசாம பொய் சொல்லிட்டு இருக்கியே. அந்த 115 விருதகளை மொத்தமா கண்ணுல காட்டு பாப்போம். அந்த விருதுகளை குடுத்தவங்ககிட்ட பேட்டி எடுத்து போட முடியுமா? அதுல 90% உப்மா விருதுதான?” என கலாய்த்திருக்கிறார்.

விடாது ப்ளூ சட்டை!

- Advertisement -

Read more

Local News