Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

பிரியா பவானி சங்கர் பத்திரிகையாளராக நடிக்கும் ‘பிளட் மணி’ படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2021-ல் ஜீ-5 OTT தளம், ‘மதில்’. ‘விநோதய சித்தம்’, ‘டிக்கிலோனா’, ‘மலேஷியா டு அம்னிஷியா’ உள்ளிட்ட பல தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து மேலும் பல சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த வரிசையில் ஜீ-5 ஓடிடி தளம் தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது.

‘பிளட் மணி’  (Blood Money) என பெயரிடப்பட்டுள்ள இந்த சஸ்பென்ஸ், திரில்லர் படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கிஷோர், ஷிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பஞ்சு சுப்பு, ‘ராட்சசன்’ வினோத் சாகர், ‘கலைமாமணி’ ்ரீலேகா ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

திரைக்கதை, வசனம் – சங்கர் தாஸ், ஒளிப்பதிவு – G பாலமுருகன் DFT, இசை – சதிஷ் ரகுநந்தன், கலை இயக்கம் – சூர்யா ராஜீவன், படத் தொகுப்பு – பிரசன்னா G.K., பாடல்கள் – கூகை M.புகழேந்தி. 

இயக்குநர் சர்ஜுன் K.M. இயக்கத்தில் உருவான இப்படத்தை எம்பரர் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் இர்பான் மாலிக் பிரம்மாண்டமான செலவில் தயாரித்துள்ளார்.

நடிகை பிரியா பவானி சங்கர் இந்தப் படம் பற்றிப் பேசும்போது, “இந்த ‘ப்ளட் மணி’ படத்தில் நான் ஒரு உணர்ச்சிகரமான பத்திரிக்கையாளராக நடிக்கிறேன். வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல பத்திரிக்கையாளராக வாழ்க்கையை ஆரம்பித்த நான் இப்படத்தில் பத்திரிக்கையாளராக நடிக்கிறேன். பல ஆச்சர்யங்களும், திருப்பங்களும் நிறைந்த, இந்த அற்புதமான சஸ்பென்ஸ் டிராமா படத்தில் நானும் பங்கேற்றிருப்பதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி…” என்றார்.

இந்த ‘பிளட் மணி’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ம் தேதியன்று நேரடியாக ஜீ-5 OTT தளத்தில் வெளியாகவுள்ளது.

- Advertisement -

Read more

Local News