பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீரியல் நடிகைகள் பலர் அதன்பின் சினிமாவிற்கு சென்று விடுவார்கள். அதேபோல பவித்ராவும் சினிமாவில் என்ட்ரி கொடுப்பார் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் ரஞ்சனி தொடரின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று தர்ஷனா, ஷ்யமந்தா, அஸ்வின், சந்தோஷ் ஆகியோருடம் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.இதனால், அவர் ரஞ்சனி தொடரில் எண்ட்ரி கொடுக்கிறாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால், பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பவித்ரா இதுவரை எந்தவொரு ப்ராஜெக்டிலும் கமிட்டானதாக தெரியவில்லை. அதேசமயம் பவித்ராவின் தோழி ஷ்யாமந்தா கிரண் ரஞ்சனி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரை காண பவித்ரா அங்கு சென்ற போது தான் சக நடிகர்களும் புகைப்படம் எடுத்துள்ளனர்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more