பாரதி கண்ணம்மா’ தொடர் மூலம் சின்னத்திரையில் கதாநாயகனாக அறிமுகமானவர் அருண். அதேபோல், ‘ராஜா ராணி 2’ தொடரில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரவேசித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஜே அர்ச்சனா. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகும் தகவல், சில ஆண்டுகளுக்கு முன்பே விஜய் டிவி விருது நிகழ்ச்சியில் வெளியானது. எனினும், இதுகுறித்து இருவரும் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை. மேலும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கூட இணைந்து புகைப்படங்கள் பகிர்ந்ததில்லை.

தற்போது, சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில், அருண் பிரசாத் போட்டியாளராக கலந்து கொண்டபோது, அர்ச்சனா “அருண்அர்ச்சனா “அருண் பிரசாத்தான் என் வாழ்க்கை” என்று அறிவித்தார்.

இதனை தொடர்ந்து, காதலர் தினத்தையொட்டி, அருண் பிரசாத், அர்ச்சனாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து, தனது 5 ஆண்டுகால காதல் வாழ்க்கையை பற்றிய பதிவை வெளியிட்டுள்ளார். மேலும், அந்த பதிவில் அர்ச்சனாவுக்கு காதலர் தின வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.