Thursday, April 11, 2024

“பெரிய நடிகர்கள் சினிமாவை வாழ வைப்பதில்லை” – தயாரிப்பாளர் கே.ராஜன் குற்றச்சாட்டு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

Crackbrain Productions  தயாரிப்பில், இயக்குநர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் நாட் ரீச்சபிள்( Not Reachable).

இந்தப் படத்தில் விஷ்வா, சாய் தன்யா, சுபா தேவராஜ், விஜயன், காதல் சரவணன், பிர்லா போஸ், ஷர்மிளா, கலங்கல் தினேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பேனர் – Crackbrain Productions  & M Creations, எழுத்து – படத் தொகுப்பு & இயக்கம் – சந்துரு முருகானந்தம், ஒளிப்பதிவு – சுகுமாரன் சுந்தர், இசை – சரண் குமார், ஒலி வடிவமைப்பு – விக்னேஷ் பாஸ்கரன், கலை இயக்குநர் – ஜெகதீஷ், VFX – ஹரிகரன்.K, சந்துரு முருகானந்தம், DI – பயர்பாக்ஸ் ஸ்டுடியோஸ், வண்ணக் கலவை – ஸ்ரீகாந்த் ரகு, ஒப்பனை – பெர்சி அலெக்ஸ், பாடல் வரிகள் – உடுமலை பிரவின், M.C.விக்கி, தி மாங்க், பத்திரிகை தொடர்பு – பரணி அழகிரி, திருமுருகன்.

இப்படம் ஒரு மாறுபட்ட திரில்லர் டிரமாவாக, ரசிகர்களை இருக்கை நுனியில் பரபர திரில்லராக உருவாகியுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா பிரபலங்கள், படக் குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கையாளர் மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “திறமைகளோடு வரும் புதியவர்கள் சினிமாவில் ஜெயிக்க வேண்டும். சினிமாவை இப்போது காப்பாற்றுபவர்கள் சின்ன பட  தயாரிப்பாளர்கள்தான். பெரிய தயாரிப்பாளர்கள், நடிகர்கள் சினிமாவை வைத்து பிழைக்கிறார்கள். ஆனால், வாழ வைப்பதில்லை. பெரிய நடிகர்கள் இப்போதெல்லாம் ஷூட்டிங்கை வெளி மாநிலங்களில் வைக்கிறார்கள். இங்கிருப்பவர்கள் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். ரஜினி சாரிடமே இதை மாற்ற நான் வேண்டுகோளாக வைத்தேன்.

இப்போது படம் எடுப்பது பிரச்சனை இல்லை. அதை ரிலீஸ் செய்வதுதான் கஷ்டம். மக்கள் பார்க்க தயாராக இருக்கிறார்கள். ஆனால், படத்தை ரிலீஸ் பண்ண முடிவதில்லை. பல சின்ன படங்கள்தான் தமிழ் சினிமாவை வாழ வைத்திருக்கிறது. சிக்கனமாக செலவு செய்து படம் எடுங்கள். சினிமாவில் பணம் போட்டால் பணம் திரும்பி வருவதில்லை. இந்த நாட் ரீச்சபிள் மக்களை ரீச் செய்யும் என வாழ்த்துகிறேன்..” என்றார்.

- Advertisement -

Read more

Local News