பாரதிராஜா படங்கள் என்றாலே பெரும்பாலும் கிராமத்து பின்னணி கொண்ட கதைகள் தான் அதிகம் இருக்கும். வயல்
வரப்பு, ஆறுகள், வெகுளித்தனமான மக்கள் அதற்கேற்றவாறு படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. பாரதிராஜா படங்களுக்கு ராஜாவின் இசை கச்சிதமாக பொருந்தும். இருவர் கூட்டணியில் வெளியான படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஒரு கட்டத்தில் படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் இருவரும் பேசிக் கொள்வது இல்லை. இந்த சூழ்நிலையில் பஞ்சு அருணாச்சலத்தின் 80 வது பிறந்த நாள் விழாவை ஒரு தனியார் நிகழ்ச்சி நடத்தியது.இந்த விழாவில் பல சினிமா பிரபலங்கள் அழைக்கப்பட்டனர். இதில் பாரதிராஜா மற்றும் இளையராஜாவும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பாரதிராஜா 1 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.ஆனால் இளையராஜாவுக்கு பணம் எதுவும் கொடுக்க வில்லையாம்.கோபம் கொண்ட இளையராஜா மேடையில் இருந்து சென்றுவிட்டாராம்.
சினிமாவில் பாரதிராஜாவையும் மற்றும் இளையராஜாவையும் கொண்டு வந்தது பஞ்சு அருணாசலம் தான். நன்றியை மறந்து விட்டார் பாரதிராஜா என்றும் கோபத்தில் சென்று விட்டார் இளையராஜா என்று கூறுகின்றனர்.