Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

முருங்கைக்காய் ரகசியத்தை உடைத்த பாக்யராஜ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ், அல் முராட் , சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, லிங்கா இயக்கி உள்ள திரைப்படம், லாக்.

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன், இயக்குநர் பாக்யராஜ் உள்ளிட்டோர கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய பாக்யராஜ்,

“இத்தனைக் காலம் கடந்தும் எனது முருங்கைக்காய் கதையை எங்கு பார்த்தாலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  இங்கேயும் பேசினார்க்.

அதில் என்ன பெரிய ரகசியம்  என்று கேட்டால், எந்த ஒரு  விசேஷ காரணமுமில்லை. எனது பாட்டி எங்களுக்கு உணவு பரிமாறும் போது எனக்கு முருங்கக்காய் துண்டுகளை குறைவாகத்தான் போடுவார்.  உடன் சாப்பிடும் மாமாவுக்கு நிறைய போடுவார்.  இன்னும் ரெண்டு பீஸ் போடச் சொல்லி நான் கேட்பேன். இது உனக்குப் போதும். இரண்டுக்குமேல் வேண்டாம் இது போதும்  என்பார் பாட்டி.

எப்போதும் வேண்டாம் என்பதில் தான் மனம் சுற்றிச் சுற்றி வரும். எங்கள் ஊரில் ஒரு பெரியவர் சின்னப் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருப்பார். அவரிடம் இந்தச் சந்தேகத்தைக் கேட்டபோதுதான் அதன் அர்த்தம் புரிந்தது. அதுவரை விளையாட்டாகத் தான் என் படத்தில் வைத்தேன். அப்போது அதைப்பற்றி பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் இவ்வளவு காலம் கடந்தும் முருங்கைக்காய் கதை பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது அது ஒரு வகையில் எனக்கு மகிழ்ச்சி தருகிறது” என்றார் பாக்யராஜ்.

- Advertisement -

Read more

Local News