தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில், பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் கமால் கோஷ். பிரபல வங்க இயக்குநர் தேவகி போஸின் மருமகன் அவார்.
அந்தக் காலக்கட்டங்களில் இயக்குநர்களும்தயாரிப்பாளர்களும் மும்பை, புனே, கொல்கத்தா நகரங்களுக்குச் சென்று, அங்குள்ள ஸ்டூடியோக்களில் பட வேலைகளை முடிப்பது வழக்கம். அப்போது கொல்கத்தா நியூ தியேட்டர்ஸில் இருந்து ‘தமிழ் சினிமாவின் தந்தை’எனக் கூறப்படும் கே.சுப்ரமணியம் அழைத்து வந்தவர்.
இவர் உதவி ஒளிப்பதிவாளராக சில படங்களில் பணியாற்றிய கமால் கோஷ், 1938-ல் வெளியான‘அனாதைப் பெண்’ மூலம் ஒளிப்பதிவாளராகஅறிமுகமானார். எஸ்.எஸ்.வாசனின் பிரம்மாண்ட படைப்பான ‘சந்திரலேகா’வுக்கு ஒளிப்பதிவு செய்தவரும் இவர்தான்.
இவர் தமிழில் சில திரைப்படங்களை இயக்கியும்இருக்கிறார். அதில் ஒன்று, ‘ரோஹிணி’. வங்கஎழுத்தாளர் பக்கிம் சந்திர சட்டர்ஜியின் ‘கிருஷ்ணகாந்தின் உயில்’ என்ற நாவலை மையமாகக் கொண்டு உருவானது தான் இந்தப் படம்.
இதில், எஸ்.வி.ரங்காராவ், மாதுரிதேவி, எஸ்.ஏ.நடராஜன், எஸ்.வி.சகஸ்ரநாமம், ராஜ சுலோச்சனா, அப்போதையை கனவு கன்னி. கிளாரா என்ற இயற்பெயரைக் கொண்ட அவருடைய வசீகர கண்கள் அப்போது பேசப்பட்டன.
சிறந்தகதை, இயக்கம், அருமையான ஒளிப்பதிவு, நடிப்பு என அனைத்தும் இருந்தும் படம் கமர்ஷியலாக வெற்றி பெறவில்லை என்பது குறிப்பித்தக்கது.