Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

‘பீஸ்ட்’ படத்தின் கதை இதுதான்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளிவரப் போகும் பீஸ்ட்’ படத்தின் கதை இணையத் தளங்களில் கசிந்துள்ளது.

அமெரிக்காவில் ஒரு திரைப்படம் வெளியானால் அது வெளியாகும் திரையரங்குகளின் இணையப்பக்கத்தில் அத்திரைப்படத்தின் கதைச் சுருக்கம் வெளியிடப்பட வேண்டும் என்று விதிமுறை. இதன்படி பல முக்கிய தமிழ்த் திரைப்படங்களின் கதைச் சுருக்கமும் முன்பேயே வெளியாகியுள்ளது.

அந்த வரிசையில் தற்போது இந்த ‘பீஸ்ட்’ படத்தின் கதைச் சுருக்கத்தையும் அமெரிக்காவில் இருக்கும் ‘கேலக்ஸி’ திரையரங்கம் தனது இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அந்தக் கதைச் சுருக்கம் இதுதான் :

“நகரின் பரபரப்பான பகுதியை சர்வதேச பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். பயங்கரவாத அமைப்பின் தலைவரை விடுவிக்கக் கோரி இந்திய அரசுக்கு மிரட்டல் விடுக்கின்றனர்.

பயங்கரவாதிகளை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப் பிரிவின் தலைவருக்கு, பயங்கரவாதிகளால் சிறை பிடிக்கப்பட்ட பகுதியில் ரா உளவு அமைப்பின் முன்னாள அதிகாரி இருப்பது தெரிய வருகிறது.

இதனையடுத்து பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டவர்களை மீட்க, அவரது உதவியை நாடுகின்றனர். அந்த முன்னாள் அதிகாரி பயங்கரவாதிகளுக்கு எதிராக செயல்படத் தொடங்குகிறார்.

அதன் ஒரு பகுதியாக பயங்கரவாத அமைப்பின் தலைவரை அரசு விடுவிக்க சம்மதிக்கிறது. இந்த நிலையில் முன்னால் உளவு அதிகாரி புத்திசாலித்தனமாக செய்லபட்டு பயங்கரவாதிகளிடமிருந்து சிறை பிடிக்கப்பட்டவர்களை மீட்டு, பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுகிறார்…”

இவ்வாறு அந்தக் கதைச் சுருக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பீஸ்ட்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வருகிற 13-ம் தேதி வெளியாகிறது.

- Advertisement -

Read more

Local News