சுவாரஸ்யமான பழைய சம்பவம் ஒன்றை பத்திரிகையாளர் செல்வாபகிர்ந்துகொண்டார்.
தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக வலம் வந்தவர் பாலாஜி. பல திரைப்படங்களை தயாரித்ததோடு, படங்களில் நடித்தும் இருக்கிறார். சிவாஜி போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படங்களை தயாரித்தவர் இவர்.
ஒருமுறை படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது விழுப்புரம் ரயில்வே கேட் அருகே கார் நின்றது.
அங்கே கண் தெரியாத மூதாட்டி ஒருவர் பிச்சை எடுத்துகொண்டு இருந்தார். பரிதாபப்பட்ட பாலாஜி நூறு ரூபாய் நோட்டை எடுத்து கொடுத்துள்ளார். அதை வாங்கிய மூதாட்டி ‘இது எவ்வளவுப்பா.. ஒரு ரூபா தாளா?. பத்து ரூபா தாளா?’ என கேட்க பாலாஜியோ ‘இது நூறு ரூபாய் தாளம்மா’ என சொல்லி இருக்கிறார்.
அந்த மூதாட்டி ‘தம்பி நீ எம்.ஜி.ஆரா?. ரொம்ப சந்தோஷம்பா. நீ நல்லா இருக்கணும் தம்பி’ என நெகிழ்ந்தார்.
பணம் கொடுத்தது பாலாஜி. ஆனால், அந்த பெயர் போனது எம்.ஜி.ஆருக்கு. அதாவது அள்ளிக் கொடுப்பது என்றால் அது எம்.ஜி.ஆர்.தான் என மக்கள் நினைத்தனர்” என்றார் பத்திரிகையாளர் செல்வா.