Wednesday, November 20, 2024

ரஜினியால் தன்னைத் தானே திட்டிக்கொண்ட பாலசந்தர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

1977 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சுஜாதா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “அவர்கள்”.

இதன் படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த் ஒரு குழந்தையை கொஞ்சுவது போன்ற ஒரு காட்சி..  பாலச்சந்தர் எதிர்பார்த்தது போல் ரஜினிகாந்த் நடிக்கவில்லை. பல டேக்குகள் ஆகிவிட்டன.




டென்சன் ஆன பாலச்சந்தர்,  “இவனுக்கு நடிப்பே வராது, பேசாம ஜெய்கணேஷை கூப்பிட்டு வாங்க”  என்று திட்டிவிட்டு படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வெளியே சென்றுவிட்டார். பிறகு ஒருவழியாக படப்படிப்பு நடந்து முடிந்தது.

வெகுகாலம் கழித்து,  ஒரு திரைப்பட விழாவில்,  ரஜினிகாந்த்திடம் பாலச்சந்தர் பல கேள்விகள் கேட்பது போல் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது பாலச்சந்தர் “நான் டைரக்ட் பண்ணும்போது இவர் கிட்ட இப்படி மாட்டிக்கிட்டோமே என நினைத்தது உண்டா?” என நகைச்சுவையாக கேட்டார்,

அதற்கு ரஜினிகாந்த் “நிறைய முறை நினைத்திருக்கிறேன்..” என்ற ரஜினி,  அந்த பழைய சம்பவம் நினைவில் இருப்பதாகவும் கூறினார்.

 
அதன் பின் பேசிய பாலச்சந்தர்  “அன்னைக்கு நான் ரொம்ப திட்டிட்டேன். அதன் பின் எத்தனையோ நாள் நான் அதை நினைச்சி வருத்தப்பட்டிருக்கேன். அதுவும் நீ பெரிய நட்சத்திர நடிகராக வளர வளர எப்போதும் எனக்கு அதுதான் நினைவுக்கு வரும். இப்படி ஒரு பெரிய நட்சத்திரத்தை  கடுமையா திட்டிட்டியேடா என்று என்னை நானே திட்டிக்குவேன்” என மிகவும் பெருந்தன்மையோடு கூறியது அங்கிருந்தவர்கள் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

- Advertisement -

Read more

Local News