Wednesday, October 9, 2024

‘மனசிலாயோ’ பாடலுக்கு மாஸாக நடனமாடிய அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் வரலட்சுமி மற்றும் ரெஜினா! #MANASILAAYO

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ள வேட்டையன்” திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் அக்டோபர் 10 அன்று திரைக்கு வருகிறது.  

இப்படத்தின் முதல் பாடலாக வெளியான “மனசிலாயோ” பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மறைந்த பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலை AI தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தியுள்ளனர்.  

இந்த பாடலுக்கு நெட்டிசன்கள் நடனமாடி பதிவிட்டு வருகின்றனர். ‘மனசிலாயோ’ ட்ரெண்டில் இணைந்து, நடிகர் அசோக் செல்வன், நடிகைகள் கீர்த்தி பாண்டியன், வரலட்சுமி சரத்குமார், ரெஜினா ஆகியோர் நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News