தமிழ்த் திரையுலகில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற படங்களில் ஒன்று கரகாட்டக்காரன். கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் – கனகா ஜோடியாக நடித்தனர். கவுண்டமணி, செந்தில், கோவை சரளா உள்ளிட்டோர் நகைச்சுவை காட்சிகளில் ரணகளப்படுத்த, வில்லனாக சந்தான பாரதி தோன்றியிருப்பார். இளையராஜாவின் இசையில் அத்தனை பாடல்களும் ஹிட்.
சிவாஜி – பத்மினி ஜோடியாக நடித்து 1968-ல் வெளியான ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தின் சாயல் அப்படியே இந்தப் படத்தில் இருக்கும். ஆனால் இதை கங்கை அமரன் என்றுமே மறுத்ததில்லை. மிக வெளிப்படையாகவே, “தில்லானா மோகனாம்பாள் கதைதான், கரகாட்ட காரன் படத்துக்கு அடிப்டை” என்று பல முறை சொல்லி இருக்கிறார்.
படத்திலேயே “தில்லானா மோகனாம்பாள் படத்துல வர்ற சிவாஜி, பத்மினி மாதிரியே இருக்கீங்க”
என செந்தில் – கோவை சரளா ஜோடியை ஒருவர் சொல்ல.. அவரை கவுண்டமணி ரவுண்டு கட்டி அடிப்பது போல ஒரு காட்சியையும் வைத்திருப்பார் கங்கை அமரன்.
சரி இன்னொரு காட்சியும் வேறு ஒரு படத்தின் இன்ஸ்பிரேசன்தான் என்பது பலருக்குத் தெரியாது.
அதே படத்தில் இடம் பெற்ற பிரபலமான வாழைப்பழ காட்சிதான் அது. இதுவும் மலையாள படம் ஒன்றில் இடம் பெற்ற காட்சி. அதை கொஞ்சம் மாற்றி, வாழைப்பழ காமெடியாக உருவாக்கினார் கங்கை அமரன்.
பலருக்கும் தெரியாத விசயம் இது.