அபூர் சகோதரர்கள் படத்தில் கமல் நடித்த, குள்ள அப்பு கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது.
இந்த நிலையில் ஒரு பேட்டியில் கமல், “நான் இந்தி சினிமாவில் நடித்து வந்த போது, என்னிடம் சிலர் நீங்கள் அமிதா பச்சனை போன்று உயரமாக இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் பாலிவுட்டில் நீங்கள் தான் சூப்பர் ஸ்டார் என்று கூறினார்கள். அவர்கள் அப்படி சொன்னது என்னை மிகவும் பாதித்தது.
எனக்கு திறமை இருக்க உயரம் ஒரு தடையா என்று எனக்குள் ஒரு எண்ணம் தோன்றியது. அதனால் தான் என்னுடைய உயரத்தை குறைத்து அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் நடித்தேன். அப்படி உருவானது தான் அந்த படம்’ என்று கூறி இருந்தார். இந்த படத்திற்கு பின்னர் கமல் பாலிவுட்டில் கூட பல படங்களில் நடித்தார்.