Friday, April 12, 2024

‘ஆன்டி இண்டியன்’ படம் சென்சாரில் தப்பித்தது..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சர்ச்சைக்குரிய திரைப்பட விமர்சகர் ‘ப்ளூ சட்டை’ மாறன் முதன்முறையாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள படம் ‘ஆன்டி இண்டியன்’. 

பல படங்களை தனது யுடியூப் சேனலில் கழுவி ஊத்தி வரும் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ‘ஆன்டி இந்தியன்’ படத்தை, ஏப்ரல் மாதம் சென்சார் குழுவினர் பார்த்தனர்.

ஒரு படத்தில் ஆட்சேபணைக்குரிய வசனங்கள் மற்றும் காட்சிகள் இருந்தால், அவற்றை மாற்றவோ அல்லது நீக்கவோ சொல்வது சென்சார் உறுப்பினர்களின் வழக்கம். ஆனால் அவர்கள் இந்த ‘ஆன்டி இண்டியன்’ படத்தை முழுமையாக நிராகரித்து தடை செய்தனர்.

அதன் பிறகு ரிவைசிங் கமிட்டி என்று சொல்லப்படும் மறு தணிக்கைக்கு இப்படம் அனுப்பப்பட்டது. பெங்களூரில் பிரபல இயக்குநர் நாகபரணா தலைமையில் பத்து பேர் கொண்ட குழுவினர் படத்தைப் பார்த்தனர். படம் பார்த்து முடித்த பிறகு படம் மிகவும் சிறப்பாக உள்ளதென ஒட்டு மொத்தக் குழுவினரும் பாராட்டினர்.

மேலும் “இந்தப் படம் கண்டிப்பாக வெளியே வர வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். அதே நேரம் சில காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்க அல்லது ம்யூட் செய்ய வேண்டும். குறிப்பாக ஆன்டி இண்டியன்’ எனும் டைட்டிலை மாற்றிவிட்டு வேறு டைட்டில் வைக்க வேண்டும்.

நடிகர் கபாலி எனும் வசனம் அடிக்கடி வருகிறது. அப்பெயரைக் கொண்ட வசனம் வரும் காட்சிகள் அனைத்தையும் நீக்க வேண்டும். கமுக, அகமுக என்று வரும் இரண்டு கட்சிகளின் பெயர்களையும் நீக்க வேண்டும். இப்படத்தில் வரும் தேசியக் கட்சி அரசியல்வாதி கேரக்டர் ஒன்றின் பெயர் ‘ராஜா’ என்று இருக்கிறது. அந்தப் பெயரையும் நீக்க வேண்டும்” என்று அக்குழுவினர் பத்து பேரும் ஒரே முடிவாக கூறியிருக்கின்றனர்.

இதை எதிர்த்து படக் குழுவினர் மீண்டும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். இதையடுத்து 38 கட்டுகள் போட வேண்டும் என கூறப்பட்ட நிலையில், தற்போது பெரிதாக கட் எதுவும் இல்லாமல், படத்திற்கு யு / ஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.

அடுத்த மாதம் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகும் என தெரிகிறது.

ஒரு வழியாக இந்த படத்தின் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதால், எப்போது ரிலீஸ் மற்றும் மற்ற தகவல்கள் வெளியாகும் என்பது… பலரது எதிர்பார்ப்பு என கூறலாம்.

- Advertisement -

Read more

Local News